Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
திருமணதிற்கு பிறகு ஏற்படும் மாற்றங்கள்...
திருமணம் என்பது ஓர் புதிய பாதை, புதிய பயணம். நீங்கள் உங்கள் மனைவி என ஆரம்பித்து உங்கள் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையே இரட்டிப்பு மடங்கு உயர்ந்திருக்கும். நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் இவர்கள் அனைவரையும் கேட்டு தான் செய்ய வேண்டும்.
குடும்பஸ்தன் என்ற பொறுப்பு, கடமைகள், அக்கறை என அனைத்தும் பலமடங்கு அதிகரித்து இருக்கும். என்ன இருந்தாலும் இது ஓர் சுகமான பயணம் தான். நீங்கள் இதுவரை கற்றுக் கொண்டதை அனைத்தையும் இங்கு தான் செயல்முறைப்படுத்த போகிறீர்கள்....

புதிய பயணம்
இனிமேல் நீங்கள் ஈருயிர் ஓர் உடல் என்ற புதிய பயணத்தை துவங்க போகிறீர்கள். இந்த பயணத்தில் உங்களுக்கான கடமைகள் அதிகம். உங்கள் உலகில் நடக்கும் அனைத்தும் உங்கள் அறையில் இருக்கும் இன்னொரு நபருக்கும் நகல்கள் அனுப்படும்.

அக்கறை
இத்தனை நாட்கள் குடும்பமே உங்கள் மீது அக்கறையாக இருந்திருக்கும். இனிமேல், நீங்கள் உங்கள் குடும்பத்தின் மீது அக்கறையாக இருக்க வேண்டும். முக்கியமாக பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும்.

இது தான் நிஜம்
இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஓர் மாயை. எது நடந்தாலும் இன்னொரு வாய்ப்பில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இனிமேல் அது சற்று கடினம். முதல் வாய்ப்பிலேயே நீங்கள் தவறவிடாமல் சரியாக செய்து முடித்துவிட வேண்டும்.

உறுதுணை
நான், என் வாழ்க்கை என்ற எண்ணங்கள் மாறி, நாம், நம் வாழ்க்கை என மாறிவிடும். எதுவாக இருப்பினும் ஒரு தடவைக்கு, இரண்டு தடவை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

கடமைகளுக்கு முக்கியத்துவம்
முன்னர் கேளிக்கை அதிகமாகவும், கடமைகள் குறைவாகவும் இருந்திருக்கும். இனிமேல் அப்படி இருக்க முடியாது. கடமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை முதலில் செய்து முடிக்க வேண்டும்.

சண்டைகள்
இல்லறத்தில் அடிக்கடி சண்டைகள் வரும். அதை சுமுகமாக, சுவையாக முடிப்பதா அல்லது சச்சரவுக்குள்ளாக்குவதா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

முன்னிரிமை
இதுவரை முன்னுரிமை என்பது உங்களுக்கும், உங்களை சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே கொடுத்திருப்பீர்கள். ஆனால், இனிமேல் அதை சரியாக உணர்ந்து, புரிந்து அளிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் இனிமேல் குடும்பஸ்தர்.

உறவுகள்
இரு குடும்பங்களை சேர்த்து உங்களது குடும்ப, உறவினர்கள் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியிருக்கும். இனிமேல், இரு குடும்பத்தை பற்றி யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

உடல்நலம்
தினசரி வாழ்க்கை, உணவு பழக்கம், ஆரோக்கியம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இது உங்கள் தாம்பத்தியத்தில், இல்லறத்தின் நலன் வரை அனைத்தையும் சார்ந்தது.



Click it and Unblock the Notifications
