இந்த விஷயங்களை முன்கூட்டியே சொல்லாமல், ரகசியமாக செய்தால் உறவில் இன்பம் அதிகரிக்கும்!

Posted By:
Subscribe to Boldsky

இல்லறத்தில் கணவன், மனைவி மத்தியில் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. மேலும், தங்களை பற்றிய ரகசியங்களை வேறு நபர்கள் மத்தியில் கசியவிடவும் கூடாது. ஆனால், ரகசியமாக ஒருவரை இருவர மகிழ்விக்க செய்தால், அந்த உறவு என்றென்றும் சொர்க்கத்தை போல இன்பம் மிகுந்து காணப்படும்.

காதலி உங்களுக்காக இந்த 7 விஷயங்களை செய்தால், உடனே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்!

உதாரணமாக, கணவனுக்கு பிடித்த உணவுகளை அவனைக் கேட்காமலேயே சமைத்து தருவது, எதிர்பாராத தருணத்தில் முத்தமிட்டு ஆச்சரியப்படுத்துவது போன்ற செயல்கள் உறவில் காதல் பெருக்கெடுத்து ஓட செய்யும் செயல்கள் ஆகும்.

பிரபலங்களின் திருமணம் விவாகரத்தில் முடிய காரணங்கள் என்ன??

இனி, எந்தெந்த விஷயங்களை முன்கூட்டியே சொல்லாமல், ரகசியமாக செய்தால் உறவில் இன்பம் அதிகரிக்கும் எனக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டின்னர்

டின்னர்

எப்போதும் சமைப்பதைவிட, கணவருக்கு பிடித்த உணவு அல்லது, புதிய வகை உணவுகளை சமைத்து பரிமாறுவது ஆண்களை கவரும் செயலாகும்.

மசாஜ்

மசாஜ்

வார இறுதியில் அல்லது மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவுடன், மிகவும் சோர்வாக இருக்கும் ஆணுக்கு, அவனிடம் சொல்லாமலேயே, உறங்கிக் கொண்டிருக்கும் போது மசாஜ் செய்துவிடுவது.

வேலை / தொழில் முறையில் உதவி

வேலை / தொழில் முறையில் உதவி

வேலை அல்லது தொழில் ரீதியாக சிக்கல் அல்லது மன அழுத்தம் கொண்டிருக்கும் போது அவனிடம் என ஏதென்று கேட்காமல் உதவுவது.

பாராட்டுதல்

பாராட்டுதல்

மற்றவர் மத்தியில், அன்று என் கணவர் இதை செய்தார், அதை செய்தார் என பெருமையுடன் பாராட்டுவது, கிலோ கணக்கில் காதலை அதிகரிக்க செய்யும்.

உணவூட்டுவது

உணவூட்டுவது

ஆண்களுக்கு எப்போதுமே தனக்கு யாராவது உணவூட்டிவிட்டால் மிகவும் பிடிக்கும். பெரும்பாலும், அம்மாக்கள் எத்தனை வயதானாலும் ஆண் மகனுக்கு மறுக்காமல் பாசத்துடன் உணவூட்டுவர்கள். இதையே மனைவிகளும் செய்யும் போது உணர்வு ரீதியாக உறவில் இறுக்கம் அதிகரிக்கும்.

அம்மாவாக இருப்பது

அம்மாவாக இருப்பது

மனைவியாக மட்டும் இல்லாமல், அவ்வப்போது மனைவி கணவனுக்கு அம்மாவாகவும் இருக்க வேண்டும். இது, கணவன், மனைவி பந்தத்தின் பாலத்திற்கு வலுவூட்டும் செயல் ஆகும்.

முத்தம்

முத்தம்

முத்தம் என்பதே சிறப்புடையது தான். அதிலும், எதிர்பாராத தருணத்தின் கிடைக்கும் முத்தம் அன்றைய நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியமைக்கும்.

தீண்டுதல்

தீண்டுதல்

எல்லா ஆண்களுக்கும் பிடித்த விஷயம் இது. மனைவி தானாக வந்து தன்னை தீண்டி மகிழ்வது. இவையெல்லாம் ஒரு ஆணை துணை மீது அதிக காதல் கொள்ள செய்யும் செயல்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do These Things Secretly To Increase Love Rate In Your Life

Do These Things Secretly To Increase Love Rate In Your Life, read here in tamil.
Story first published: Friday, March 11, 2016, 14:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter