உங்க ஆள் ஏமாத்துறார்ங்கிறத இந்த 9 விஷயத்த நோட்டீஸ் பண்ணா தெரிஞ்சிக்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

காதல் என்பது காற்றை போல அதை உணர தான் முடியும் காண முடியாது என்பார்கள். 100% உண்மை தான். அதே போல அந்த காற்று ஒரே இடத்தில் நிலைக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. இதையும் நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.

இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள்!

இளம் வயதில் என்று மட்டுமில்லை, நடுவயது, முதிர்ந்த வயதில் கூட காதல் ஏற்படலாம். வேறு நபர் மீதி ஈர்ப்புக் கொள்ளலாம். இது ஏற்படாமல் இருக்க வேண்டும் எனில், கணவன் மனைவி உறவில் அலுப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.

உடலுறவில் ஈடுபடும் போது நீங்கள் செய்யும் 5 மிகப்பெரிய தவறுகள்!!!

முக்கியமாக உங்கள் நினைப்பு அவரது மனதை விட்டு அகலவே கூடாது. அதையும் மீறி துணைக்கு வேறு நபர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இந்த தடயங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொட்டதுக்கு எல்லாம் கோபம்

தொட்டதுக்கு எல்லாம் கோபம்

மிக சாதாரண விஷயமாக இருக்கும். அவர்களது பேக், லேப்டாப் போன்றவற்றை தொட்டால் கூட "ஏன் அத தொட்ட.." என்று கத்தி கூச்சலிட்டு சண்டை போடுவார்கள்.

மொபைல் எனும் இரகசிய பெட்டி

மொபைல் எனும் இரகசிய பெட்டி

மொபைல் ஒரு ரகசிய புதையல் பெட்டி போல பாதுகாக்கப்படும். 24x7 மொபைலை அவர்கள் கையிலேயே வைத்திருப்பார்கள். அதைவிட்டு பிரியவே மாட்டார்கள்.

குசு, குசு

குசு, குசு

கால்கள் வந்தால் பேசுவது, அவர்களது காதுக்குள் சென்று உட்கார்ந்து கேட்டாலும் கூட யாருக்கும் கேட்காது. அவ்வளவு குசு, குசுவென பேசுவார்கள்.

உதாரு

உதாரு

ஒரு பொய் சொல்லிவிட்டு, அதை மறைக்க பல பொய்கள் கூறுவார்கள். ஒன்று கூட நம்பும் வண்ணம் இருக்காது. பொய் தான் கூறுகிறார் என வெட்டவெளிச்சமாக தெரியும்.

கடுப்பேத்துவது

கடுப்பேத்துவது

ஒப்பிட்டு பேசுவது, நீங்கள் செய்யும் செயல்களை குற்றம் குறை கூறுவது என வழக்கத்திற்கு மாறாக நிறைய தேவையில்லாமல் கடுப்பேற்றுவார்கள்.

வேறுபாடுகள்

வேறுபாடுகள்

அவர்களது நடை, உடை, பாவனைகளில் மாற்றங்கள் ஏராளம் தென்படும்.

வெடுக்கு, வெடுக்கு சபதங்கள்

வெடுக்கு, வெடுக்கு சபதங்கள்

எதற்கெடுத்தாலும் நான் போறேன், உன்னோட தயவு தேவையில்லை, எனக்கு என் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள தெரியும் என கூறுவார்கள்.

தள்ளி போகதே

தள்ளி போகதே

ஓர் இணைப்பு இருக்காது, இணக்கம் காட்டமாட்டார்கள். நீங்களாக நெருக்கம் காட்டினாலும், தள்ளி, தள்ளி போவார்கள். தாம்பத்திய வாழ்க்கை என்பது மிக அரிதாக இருக்கும்.

நடிப்பு

நடிப்பு

அசுரத்தனமான நடிப்பு வெளிப்படும். அந்த நடிப்பின் வெளிப்பாடாக அவ்வபோது அவர்கள் கூறும் பொய்களும் கூட அப்பட்டமாக தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Clues Reveals That Your Partner Is Cheating On You

Clues Reveals That Your Partner Is Cheating On You, read here in tamil.
Story first published: Thursday, March 31, 2016, 14:03 [IST]
Subscribe Newsletter