Latest Updates
-
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
திருமண உறவில் துணை பேசுவதை அக்கறையுடன் கேட்பது எப்படி?
செவி சாய்ப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு குணமாகும். அதுவும் ஒரு உறவில் அது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதாகும். ஆனால் சொல்வதை போல் அது அவ்வளவு சுலபமில்லை. மற்றவர்கள் பேசுவதை நீங்கள் காது கொடுத்து நன்றாக கேட்கிறீர்களா என்பதை அறிய சில வழிமுறைகள் உள்ளது. சில நேரங்களில் நாம் கொடுத்து கேட்கிற மாதிரி, நம் வாழ்வில் உண்டாகும் சில மோசமான சூழ்நிலைகளில் நடிக்க வேண்டியிருக்கும்.
அப்படி பட்ட சூழ்நிலைகளில், அதுவும் உறவில் இருக்கும் போது, உங்களுடன் இருப்பவர் பேசுவதை நன்றாக கவனிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம். பாதி நேரங்களில் கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் ஆரம்பிப்பதே சில சொத்தை காரணங்களாலேயே. அதனால் அதற்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் கணவன் அல்லது மனைவி பேசுவது சுவாரசியமாக இல்லாமல் போனாலும் கூட அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள்.
இதுப்போன்று சுவாரஸ்யமானவை: கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க 10 டிப்ஸ்...
ஒருவருக்கொருவர் அளித்திடும் ஆதரவின் ஒரு பகுதியாக இதனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி அல்லது கணவன் பேசுவதை காது கொடுத்து கேட்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டால் தான் உங்கள் உறவில் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி வாழ்க்கை நிம்மதியாக போகும். சரி உங்கள் கணவன் அல்லது மனைவி பேசுவதில் கவனத்தை செலுத்துவது எப்படி என்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்...

அக்கறையை வெளிக்காட்டுங்கள்
உங்கள் துணையின் மீது உங்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது என்பதை அவருக்கு புரிய வையுங்கள். உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் செய்யும் சில செயல்கள் அவர்களை எளிதில் காயப்படுத்தி விடும். அதனால் அவர்கள் பேசும் போது கைப்பேசியை பார்ப்பது, நொடிக்கொரு முறை கடிகாரத்தை பார்ப்பது, கொட்டாவி விடுவது அல்லது இங்கேயும் அங்கேயும் பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

செய்கையில் வெளிப்படுத்துங்கள்
நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவி பேசுவதை காது கொடுத்து கேட்பது எப்படி என்ற கேள்விக்கு விடை வேண்டுமா? 'எதிர் செய்கையில் ஈடுபடுங்கள்' என்பது தான் அதற்கான பதில். உங்கள் தரப்பிலிருந்து ஒரு நேர்மறையான ஆதரவை மட்டுமே அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டு, அவர்கள் பேசுவதை நீங்கள் அக்கறையுடன் கவனிப்பீர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

கேள்வி கேளுங்கள்
அவர்கள் பேசுவதை நீங்கள் கவனித்து கொண்டிருக்கும் போது, அது சம்பந்தப்பட்டதை பற்றி கேள்வி எழுப்புங்கள். இதனால் நீங்கள் அவர்கள் பேசுவதை தான் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் சொல்லி முடித்ததை பற்றி கேள்வி கேட்பதே சரியான தேர்வாக இருக்கும். இப்படி செய்யும் போது அவர்கள் பேசுவதை அக்கறையுடன் கவனிப்பது எப்படி என்பது உங்களுக்கு தெரியும்.

முன்னதாக நடந்த உரையாடல்களை நினைவுப்படுத்துங்கள்
உங்கள் இருவருக்கும் நடந்த உரையாடல்களை பற்றி அவர்களிடம் நினைவு கூறுவது ஒரு சிறந்த வழியாக இருக்கும். அதனால் அவர்கள் கூறியது எல்லாம் உங்கள் நினைவில் இருக்கிறது என்று அவர்கள் சந்தோஷப்படுவார்கள். உங்களுக்கும் அவர்கள் பேசுவதை கவனிப்பது எப்படி என்பது புரியும்.

நடுநடுவே பேசாதீர்கள்
உங்கள் கணவன் அல்லது மனைவி பேசும் போது நடுநடுவே பேசாதீர்கள். உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் கூறுவதை கூறி முடிக்கும் வரை காத்திருங்கள். அப்படி செய்யும் போது அவர்கள் பேசுவதை நீங்கள் முழுமையாக கவனிக்கிறீர்கள் என்ற திருப்தியை அவர்கள் அடைவர்ர்கள். எப்படி முழுமையாக கை வைப்பது என்பதை நீங்களும் அறிந்து கொள்வீர்கள்.

உடல் மொழியை பயன்படுத்துங்கள்
அக்கறையுடன் கவனிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டால் உங்கள் உறவு மென்மையாக திகழும். அதற்கு உடல் மொழியை பயன்படுத்துவது ஒரு சிறந்த வழியாக இருக்கும். அப்படி செய்யும் போது அவர்கள் தங்கள் பேச்சை இன்னமும் சுவாரசியத்துடன் தொடர்வார்கள்.

ஊக்கப்படுத்துங்கள்
உங்கள் துணை எதையாவது பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களை ஊக்கப்படுத்துங்கள். பல நேரங்களில் உங்களுக்கு முக்கியமில்லாததாக படுவது அவர்களுக்கு முக்கியமானதாக படும். அதனால் காது கொடுத்து கேட்கும் போது அவர்களின் உணர்ச்சிகளுக்கும் மரியாதை கொடுங்கள்.



Click it and Unblock the Notifications
