Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் கைவிட வேண்டிய 7 பழக்கவழக்கங்கள்!!!
பெரும்பாலான ஆண்களுக்கு திருமணம் என்றாலே ஒரு பரவச நிலை தான். திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே 'எப்படா கல்யாணம் நடக்கும்?' என்று படபடப்புடன் கவுண்ட் டவுனை ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனாலும், பேச்சுலர்களாக நன்றாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த ஆண்களுக்கு திருமணம் என்பது உண்மையிலேயே ஒரு சரியான 'கால்கட்டு' தான்! திருமணத்திற்குப் பின் பொறுப்புக்களும் கடமைகளும் அதிகம் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள் சுதாரித்துக் கொள்வார்கள். கட்டிய மனைவியின் போக்கிலேயே போய் சுதாரித்தவர்களும் உண்டு.
திருமணத்திற்கு முன் கண்டிப்பாக உடலுறவு தேவையா?
ஆனால், பலரும் திருமணம் முடிந்தவுடன் 'ஏன்டா கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்' என்று நொந்து கிடப்பார்கள். பேச்சுலர் வாழ்க்கையை அவ்வளவு எளிதாகக் கைவிட முடியாதவர்களுக்குக் கூடிய சீக்கிரமே திருமண வாழ்க்கை சலித்துவிடும். பேச்சலர் வாழ்க்கையில் அனுபவித்து வந்த சில பழக்கவழக்கங்களைக் கைவிட முடியாமல் தவிப்பார்கள்.
அந்தப் பழக்கங்களைக் கைவிட்டால் தான் திருமண வாழ்க்கை இனிக்கும் என்று உணர்வது தான் அவர்களுக்கு நல்லது. அப்படிக் கைவிட வேண்டிய சில பழக்கவழக்கங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!

பொருட்களைத் தேடாதீர்கள்
உங்களுடைய பைக் சாவியையோ, வாட்ச்சையோ, பர்ஸையோ, சாக்ஸ்களையோ கண்ட கண்ட இடத்தில் வைத்துவிட்டு, பிறகு அவை தேவைப்படும் போது தேடி அல்லாடாதீர்கள். அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கமாக வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்க மனைவியும் பாராட்டுவாங்க!

கேம் விளையாடாதீர்கள்
ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்ததிலிருந்தே டி.வி. முன் உட்கார்வது, மொபைலில் கேம் விளையாடுவது ஆகிய பழக்கங்கள் உங்களிடம் உள்ளதா? உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது, ஞாபகம் இருக்கட்டும். உடனே அவற்றைத் தூக்கி எறியுங்கள். உங்கள் மனைவியைக் கொஞ்சுங்கள், அவளோடு குறும்புத்தனமாக விளையாடுங்கள்.

நண்பர்கள் பின் ஓடாதீர்கள்
திருமணத்திற்குப் பின்னரும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் பின்னால் ஓட வேண்டாம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இருப்பதைப் பற்றி உங்கள் மனைவி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அதுவே பழக்கமாகிப் போனால் கடுப்பாகி விடுவார்கள். திருமணத்திற்குப் பின் நண்பர்களுடன் அளவான பழக்கம் வைத்துக் கொண்டால் நல்லது. மேலும் இதனால் உங்கள் மனைவிக்கு அவர்கள் மேல் மதிப்பும் ஏற்படும்.

சுத்தமாக இருங்கள்
நீங்கள் மட்டுமல்ல, உங்கள் படுக்கையறையையும் எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். உங்களுடைய அழுக்கான டி-சர்ட்டுகளையும், ஈரமான டவலையும் படுக்கையில் குவித்து வைக்காதீர்கள். இதனால் அவற்றின் மேலே நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள் என்று உங்கள் மனைவி கூற நேரிடலாம்.

மனைவிக்கு உதவுங்கள்
டைனிங் டேபிளுக்கு நீங்கள் வந்து உட்கார்ந்ததும், உங்கள் மனைவி வந்து தான் உங்களுக்கு உணவு பரிமாற வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் வீடு ஒரு ஹோட்டல் அல்ல; உங்கள் மனைவியும் சர்வர் அல்ல. அவளுக்குக் கூடமாட சமையல் வேலையில் உதவுங்கள். இருவரும் சேர்ந்தே உட்கார்ந்து சாப்பிடுங்கள். அதேபோல், படுக்கையில் வைத்து எதையும் உண்ணும் பழக்கத்தையும் தவிர்த்து விடுங்கள்.

தேவையில்லாததை பேசாதீர்கள்
உங்களுக்குப் பிடித்த சினிமாவையோ, நடிகர்-நடிகைகளையோ, விளையாட்டுக்களையோ, பங்குச் சந்தை பற்றியோ உங்கள் மனைவியிடம் பேசுங்கள், தவறில்லை. ஆனால் எப்போது பார்த்தாலும் அவற்றைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் மனைவிக்குப் பிடித்தவற்றையும் பேசி, அவளை சந்தோஷப்படுத்துங்கள்.

வேறு பெண்களைப் பற்றி... மூச்!!
அதேபோல், மற்ற பெண்களைப் பற்றியோ அவர்களுடைய நடை, உடை, பாவணைகளைப் பற்றியோ, உங்கள் மனைவியிடம் எதுவும் பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு 99% பிடிக்கவே பிடிக்காது. எனவே, அடுத்த பெண்களைப் பற்றி நீங்கள் அடக்கி வாசிப்பது தான் நல்லது.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications