Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
மாமனார்-மாமியார் மெச்சும் மருமகள் ஆகணுமா? இதோ10 சூப்பர் டூப்பர் டிப்ஸ்!!
நேற்று, இன்று, நாளை... எப்போதுமே புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒரு பெண், நல்ல பெயரைச் சம்பாதிப்பது அவ்வளவு ஈஸியான காரியமில்லை. தன் மாமனார்-மாமியாரை ஒரு ஆண் கூட எளிதில் சமாளித்து நல்ல பெயரை வாங்கி விடுவான். ஆனால், இந்த சமூகத்தில் ஒரு பெண் தன் மாமனார்-மாமியாரை சமாளித்து வாழ்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்!
மாமியார் 'கொடுமை' தாங்க முடியாமல் 60 சதவீதம் பெண்கள் கஷ்டப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் வீம்பு பிடிப்பதாலேயே பெரும்பாலும் பிரச்சனைகள் வருகின்றன.
வயதாகிவிட்ட காரணத்தினால் மாமியார்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. எனவே, மருமகள்கள் கொஞ்சம் மனது வைத்தால், கொஞ்சம் இறங்கி வந்தால், புகுந்த வீட்டில் அவர்கள் நல்ல பெயரைச் சம்பாதிக்கலாம். இதோ அதற்கான சில டிப்ஸ்:

பீ பாஸிட்டிவ்
நீங்கள் ஒரு புது மருமகள் என்பதைப் போல, மாமியார் என்ற 'பதவி'யும் அவர்களுக்குப் புதிதுதான். எனவே, எதற்கும் பயப்படாமல் 'எல்லாம் நன்மைக்கே' என்ற மன நிலையுடன் இருங்கள். நல்லதையே பேசுங்கள், நல்லதையே செய்யுங்கள். மாமியார் மனதும் மாறும்!

சமமாக நடத்தவும்
புகுந்த வீட்டுக்கு செல்லும் நீங்கள், உங்கள் மாமியாரை உங்கள் தாய்க்கு சமமாக நடத்துங்கள். உங்கள் அம்மாவுக்கு என்ன என்னவெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ, அவற்றை உங்கள் மாமியாருக்கும் செய்யுங்கள். (நல்ல விஷயங்கள் மட்டும் தான்!)

உணர்வுபூர்வமாக...
உங்கள் கணவருக்கும், அவருடைய தாய்க்கும் இடையில் திடீரென்று நீங்கள் வந்திருப்பதால், உங்கள் மாமியார் சிறிது தடுமாறத் தான் செய்வார். உங்களுடன் எந்த விஷயத்திலும் உங்கள் மாமியார் மல்லுக்கு நிற்கத்தான் செய்வார். எனவே, கொஞ்சம் உணர்வுப் பூர்வமாக இந்த விஷயத்தை அணுகினால், மாமியாரை 'வீழ்த்தலாம்'!

மரியாதை முக்கியம் பெண்ணே
உங்கள் மாமியாரை எப்போதும் மரியாதையாக நடத்துங்கள். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அவர் கடந்து வந்திருப்பார். அனைத்தையும் பற்றி அவருடன் உண்மையான அக்கறையுடன் கேளுங்கள். உங்களிடம் அவருடைய அன்பு பெருக ஆரம்பிக்கும்.

எதிர்பார்ப்புகள்
புகுந்த வீட்டுக்குள் நீங்கள் போகும் போது, அங்கு உள்ளவர்களைப் பற்றி நீங்களோ அல்லது உங்களைப் பற்றி அவர்களோ அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. கொஞ்சம் நேரம் கொடுங்கள்; விட்டுப் பிடியுங்கள். அவர்கள் மனதை வெல்லலாம்!

அக்கறை
உங்கள் மாமியாரிடம் மட்டுமின்றி, உங்கள் கணவருடைய குடும்பத்தினர் அனைவரிடமும் ரொம்ப அக்கறையாக இருங்கள். அவர்களுடைய இன்பம், துன்பம், வேலை, படிப்பு என்று அனைத்திலும் அக்கறை காட்டினால் உங்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

தகவல்
எந்த முக்கியமான விஷயமானாலும் சரி, அவற்றை உங்கள் மாமனார்-மாமியாரிடம் உடனடியாகத் தெரிவித்து விடுங்கள். நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கிறீர்களா? அடிக்கடி அவர்களுடன் பேசுங்கள். உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் போட்டோக்களை அவர்களுக்கு அனுப்பி வையுங்கள். அவர்கள் மனம் இளகும்!

அறிவுரை
உங்கள் மாமனார்-மாமியாருடைய அறிவுரைகளை எப்போதும் நிராகரிக்க வேண்டாம். உங்களை விட அவர்களுக்கு வயதும் அனுபவமும் அதிகம் தான். அவர்களுடைய சில அறிவுரைகள் உங்களுக்கு சரியாகப் படவில்லையென்றால், வேறு நல்ல ஐடியாக்களை பொறுமையாக எடுத்துக் கூறுங்கள். நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

குழந்தைகள்
உங்கள் குழந்தைகளை எப்போதும் உங்கள் மாமனார்-மாமியாருடன் இருக்க விடுங்கள். தங்கள் பிள்ளைகள் மேல் இருக்கும் அன்பை விட, தங்களுடைய பேரன்-பேத்திகளை கவனித்துக் கொள்வதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம் இருக்கத் தான் செய்யும். உங்களிடமும் அவர்களுடைய அன்பு அதிகரிக்கும்.

குடும்பத்தோடு...
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, தடதடவென்று கோபம் கொண்டு பொரிந்துவிடாதீர்கள். கணவர்-மாமனார்-மாமியார் என்று அனைவரையும் ஒன்றாகக் கூப்பிட்டு, அவர்களுடன் கலந்து பேசி, பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்து வையுங்கள்.



Click it and Unblock the Notifications
