Latest Updates
-
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்!
ஆண்களே! நீங்கள் இன்னும் சிங்கிளாவே இருக்கீங்களா? அப்போ அதற்கு காரணம் இந்த தவறுகள் தானாம்...
Love Tips: எல்லா ஆண்களும் அவ்வளவு சீக்கிரம் கமிட்டாக முடிவதில்லை. ஆண்கள் பல நேரங்களில் நிறைய முயற்சிகளை செய்தாலும் அவர்களுக்கு காதல் கை கூடாத ஒன்றாகவே இருக்கிறது. அதனால் தான் நிறைய ஆண்கள் இன்னும் சிங்கிளாவே சுத்திகிட்டு இருக்காங்க. நீங்கள் நிறைய பெண்களுடன் டேட்டிங் செய்து இருக்கலாம்.
இருப்பினும் உங்களுக்கு காதல் கைகூடாததற்கு என்ன காரணம் என்று யோசித்து இருக்கீங்களா? அதற்கு முக்கிய காரணம் ஆண்கள் செய்யும் இந்த தவறுகள் தானாம். ஆண்களுக்கு காதல் கை கூடாமல் இருப்பதற்கு அவர்கள் டேட்டிங் சமயங்களில் செய்யும் இந்த தவறுகள் தான். சரி அப்படி என்ன தவறுகள் செய்கிறார்கள் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

ஆன்லைன் டேட்டிங் மட்டுமே விருப்பம் அல்ல
பெரும்பாலான ஆண்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்க ஆன்லைன் டேட்டிங்கை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஸ்மார்ட் போன்களை கைகளில் வைத்துக் கொண்டு ஏகப்பட்ட ஆன்லைன் டேட்டிங் ஆப்களை அவர்கள் நாடுகிறார்கள். உங்களுக்கான சரியான நபர் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே ஆன்லைனை மட்டும் நம்பிக் கொண்டு இருக்காதீர்கள்.
உங்களுக்கு ஏற்ற சரியான துணையை தேர்ந்தெடுக்க பள்ளிக்கு செல்லலாம், புத்தகம் கஃபே, நூலகம், அருங்காட்சியகம், கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று வரலாம். இங்கு சென்று வரும் போது உங்களுக்கு பிடித்த துணையை நீங்கள் பார்க்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்லும் போது நீங்கள் விரும்பிய நபரை நீங்கள் காண வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. பிடித்திருந்தால் பேசிப் பழகிப் பார்க்கலாம்.
முதல் நாளே கற்பனையில் மூழ்காதீர்கள்
உங்களுக்கு பிடித்த நபரை பார்த்தால் கூட முதல் நாளிலேயே கற்பனைக் கோட்டை கட்ட ஆரம்பித்து விடாதீர்கள். டேட்டிங் போன உடனேயே எல்லாவற்றையும் பேச வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒருத்தருக்கு ஒருத்தர் மெதுவாக பேசலாம். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் பேசுவது உங்களுக்கு சலிப்பை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட விஷயங்களை அவற்றின் போக்கிலயே விடுவது தான் நியாயமானது.
பணத்தை பொறுத்தது அல்ல
பெண்கள் என்றால் ஆண்களிடம் இருக்கும் பணத்தை பார்த்து வந்து விடுவார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் புரிதல், காதல் என்பது பணத்தை பார்த்து வரக்கூடிய விஷயம் கிடையாது. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் ஆணின் நிதி நிலைமையை மட்டும் வைத்து காதலில் ஈடுபடுவதில்லை.
தன்னை புரிந்து கொள்ளவும், அவளுடைய பலவீனங்களை தழுவி சேர்ந்து வாழவும் ஏற்ற முதிர்ச்சியுள்ள ஒரு ஆணை அவள் தேடுகிறாள். உங்கள் சொத்துக்களை பற்றி உங்கள் நட்பு வட்டாரங்களில் பேசுவது வேண்டுமானால் உங்களுக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் அதை எதிர்ப்பார்ப்பதில்லை. எனவே நீங்கள் டேட்டிங் போகும் பெண்ணிடம் வெறும் பணத்தை காட்டுவது ஒரு போதும் உங்களுக்கு சாத்தியமான பதிலை தராது.
தோல்விக்கு தன்னைத் தானே குற்றம் சுமத்துதல்
நீங்கள் நிறைய டேட்டிங் செய்து இருக்கலாம். அதில் பல தோல்விகளை சந்தித்து இருக்கலாம். ஆனால் நிறைய ஆண்கள் அந்த தோல்விக்கு தன்னைத் தானே குற்றம் சுமத்திக் கொள்வார்கள். சில சமயங்களில் உடைந்து போவார்கள்.
முதலில் தோல்வியைக் கண்டு கலங்காதீர்கள். உங்களைப் பற்றி முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்களே காதலிக்க தொடங்குங்கள். சுய அன்பை பெற முயற்சி செய்யுங்கள். டேட்டிங்கில் தோல்வி ஒரு பிரச்சினை அல்ப என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிடுவது
பொதுவாக வாழ்க்கையில் ஒப்பிடுவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். சிலருக்கு நண்பர்கள் கமிட்டாகி விட்டால் கவலையாக இருக்கும். நாம் மட்டும் ஏன் இன்னும் தனிமையாக இருக்கிறோம் என்று யோசிக்க தோன்றும்.
எனவே மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாமல் உங்களுடைய தனித்துவத்தை காட்ட முயற்சி செய்யுங்கள். உங்கள் தனித்துவத்தை பிடித்த ஒரு நபர் கண்டிப்பாக உங்களை தேடி வருவார். எனவே காதலில் பொறுமை மிகவும் அவசியம். எனவே உங்களுக்கு பிடித்த நபரை பார்க்கும் வரை பொறுமையாக செயல்படுங்கள்.
இந்த அம்சங்களை மனதில் வைத்து, உங்கள் அன்புக்கும் கவனத்திற்கும் தகுதியான துணையைக் கண்டுபிடியுங்கள். அதே நேரத்தில் நீங்கள் செய்யும் தவறுகளை தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications
