Latest Updates
-
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு தம்பதிகள் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு காதல் கொண்டிருந்தாலும் திருமணமான ஒரு தம்பதிகளின் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதென்றால் அது உடலுறவுதான்.
ஆண், பெண் உறவில் தாம்பத்யம் என்பது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு காதல் கொண்டிருந்தாலும் திருமணமான ஒரு தம்பதிகளின் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதென்றால் அது உடலுறவுதான்.ஏனெனில் இதுதான் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கிறது.

நாளடைவில் தம்பதிகளுக்குள் ஒரே மாதிரியான உடலுறவு சலிப்பபை ஏற்படுத்தலாம், இதுபோன்ற சூழ்நிலையில் உடலுறவுக்கு பின்னர் அவர்கள் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும். இந்த பதிவில் தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

அணைப்பு
இதனை பெரும்பாலான பெண்களை எதிர்கொள்வார்கள். எந்தவொரு வேலையையும் சிறப்பாக செய்தபின் ஆண்களுக்கு பெண்களை அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு அர்த்தம் அவ்வப்போது மட்டும்தான் ஆண்கள் பெண்களை நேசிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. தங்களின் மகிழ்ச்சியை தன் மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதேபோலத்தான் கலவியிலும், ஆண்கள் உடலுறவு முடிந்த பின் பெண்ணை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இதனை பெண்கள் மறுக்கக்கூடாது, ஏனெனில் அந்த அணைப்பு பெண்கள் மீதான அவர்களின் காதலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

ஒன்றாக சமைக்கவும்
பெண்கள் மட்டும்தான் சமைக்க வேண்டும் என்று சட்டம் உள்ளதா? உடலுறவிற்கு பிறகு மனைவி சமைக்க செல்லும்போது ஆண்களும் அவர்களுடன் சமையலறைக்குள் செல்வது பெண்களுக்கு தனிஇன்பத்தை கொடுக்கும். அது சாதாரண உணவாக இருந்தாலும் இருவரும் கலவிக்குப் பிறகு ஒன்றாக சமைக்கும்போது அது சிறப்பான உணவாகவே இருக்கும். ஒருவரின் இதயத்திற்கு செல்லும் எளிதான வழி அவர்களின் வயிற்றுக்குள் செல்வது என்பது சரியான ஒன்றுதான்.

பெட்டில் அமர்ந்து சாப்பிடுங்கள்
படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்காததாக இருக்கலாம், ஆனால் இது உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உடலுறவில் ஈடுபட்ட பிறகு படுக்கையில் அமர்ந்து சாப்பிட உங்கள் துணையை கட்டாயப்படுத்துங்கள். இதனை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னால் கூட செய்யலாம்.

படம் பார்க்கலாம்
பொதுவாக உங்களுக்கு பிடித்த படம் அல்லது பாலுணர்வைத் தூண்டும் படம் போன்றவற்றை பார்ப்பது உடலுறவின் தொடக்கப்புள்ளியாக இருக்கலாம். ஆனால் ஒரு மாறுதலுக்கு கலவியில் ஈடுபட்ட பிறகும் நீங்கள் படம் பார்க்கலாம். உங்களின் மகிழ்ச்சியான மனநிலையை கெடுக்கும் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காதீர்கள். இருவரும் மகிழ்ச்சியாக பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியை ஒன்றாக அணைத்துக் கொண்டு பாருங்கள், இது நெருக்கத்தை அதிகரிக்கும்.

தியானம்
உடல் மற்றும் மனம் இரண்டிற்கும் ஒரு அமைதியாக செயல்படும் மிகப் பழமையான முறைகளில் ஒன்று தியானம். சில கடினமான படுக்கையறை நடவடிக்கைக்குப் பிறகு உங்களுக்குத் தேவையானது இதுதான். உடலுறவின் போது உங்கள் அட்ரினலின் மற்றும் உங்கள் ஹார்மோன்கள் அனைத்தும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. இந்த நிலையில் தியானம் உங்களை மீண்டும் சமநிலையில் கொண்டுவருவதற்கான விஷயம். உங்களின் துணையுடன் இதனை சேர்ந்து செய்வது உடலுறவின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும்.

ஒன்றாக தூங்கவும்
உங்கள் காதலரின் மார்பில் தூங்குவது உங்கள் காதல் உறவுகளில் மிக அழகான உணர்வுகளில் ஒன்றாகும். நீங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நம்புகிறீர்கள் என்பதை இது காட்டுகிறது, மயக்கமடைந்த தருணங்களை கூட ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள நீங்கள் தயாராக இல்லை. நீங்கள் இன்னும் தூங்க விரும்பவில்லை எனில், கண்களை மூடிக்கொண்டு குறைந்தது சில நிமிடங்களாவது படுத்துக் கொள்ளுங்கள். இந்த நடைமுறை உங்கள் உறவுக்கு நம்பமுடியாத அமைதியைக் கொடுக்கும்.

ஒன்றாக குளிக்கவும்
உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஒன்றாக குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படியிருந்தால் அது பாராட்டுக்குரியது, ஒருவேளை இந்த பழக்கம் இல்லாதவராக இருந்தால் அதனை செய்யத் தொடங்கவும். இந்த சிலநிமிடக் குளியல் உங்களுக்குள் பல மணி நேர நெருக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இது மீண்டும் உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரலாம்.

இருவரும் பேசுங்கள்
கலவியில் ஈடுபட்ட பிறகு இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுகிறார்கள், ஆனால் உண்மையில் இது தவறான ஒரு செயலாகும். பேச்சு என்பது ஒவ்வொரு உறவுக்கும் மிகவும் அடிப்படையான மற்றும் அவசியமான ஒன்றாகும். எனவே கலவியில் ஈடுபட்ட பிறகு சுவாரஸ்யமாக ஏதாவது பேசுவது, கிசுகிசுக்களை பற்றி விவாதிப்பது, உடலுறவை பற்றி ஆலோசிப்பது போன்றவை உங்களின் மனஅழுத்தத்தை குறைப்பதுடன் உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications