Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
ஃபேஸ்புக் ரெக்வஸ்ட், வாட்ஸ்-அப் நம்பர் எக்ஸ்சேஞ், ஹோட்டல் ரேப்... மூன்றே மாதத்தில் - My Story #227
முகநூல் பழக்கம், வாட்ஸ்அப்பில் பரவி கற்பழிப்பில் முடிந்த எனது முதல் காதல் கதை - My Story #227
சரியாக ஒரே வருடத்தில் என் வாழ்க்கை புயல் அடித்தது போல தடம்புரண்டு நாசமாகிப் போனது. நான் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கான சுதந்திரங்கள், அனுமதிகள் ஏராளமாகவே கிடைத்திருந்தன. நான் சென்ற வருடம் தான் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில் பல கனவுகளுடன் காலடி எடுத்து வைத்திருந்தேன். அதனுடன் புதிய அனுபவங்கள், புதிய நட்புகள் என என் வாழ்க்கை புதியதாக மாறியது. ஆனால், அதன் முடிவு நான் கனவிலும் எதிர்பாராத ஒன்று.
கல்லூரி சேர்ந்து ஐந்தாறு மாதம் இருக்கும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் எல்லாம் முடிந்து மீண்டும் கல்லூரிக்கு சென்ற தருணம் அது. புத்தாண்டில் எனக்கு வந்த முதல் ஃபேஸ்புக் ரெக்வஸ்ட் அவனுடையது தான். அவன் யாரென்று தெரியாது. சில மியூச்சுவல் நண்பர்கள் இருந்ததால் தான் அக்ஸப்ட் செய்தேன்.

குறுஞ்செய்திகள்!
ரெக்வஸ்ட் அனுப்பிய உடனே மெசேஜ் செய்தான். ஆனால், நான் அவனுக்கு உடனே ரிப்ளை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து தான் மீண்டும் ரிப்ளை செய்தேன். பிறகு, தொடர்ச்சியாக அவ்வப்போது அவனுடன் பேசுவேன். ஓரிரு வாரங்கள் இப்படியாக கழிந்தது.
ஒரு நாள் திடீரென என்னை காதலிப்பதாக கூறினான். அனால், அவன் மதமும், என் மதமும் வேறு என்பதால் நான் மிகவும் யோசித்தேன்.

உருக, உருக பேசினான்...
அவன் மிகவும் தனித்துவம் கொண்டவன். அவன் பேச்சு மிகவும் ஈர்ப்பாக இருந்தது. குடும்ப நிலை பொறுத்தவரை நானும் அவனும் ஒரே நிலையில் தான் இருந்தோம். என்னை நன்றாக வைத்து பார்த்துக் கொள்வேன் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினான். அவனது வாட்ஸ்அப் எண் எனக்கு மெசேஜ் செய்தான். ஆனால், அதற்கு நான் ரிப்ளை செய்யவில்லை.

ஒரு மாதம்...
ஏறத்தாழ நாங்கள் பேச ஆரம்பித்து ஒரு மாத காலம் ஆகியிருக்கும். அவனது காதலை ஏற்றேன். பிறகு நானும் அவனும் நிறைய முறை பீச், படம், உணவகங்களுக்கு சென்று வந்துள்ளோம். ஆனால், ஒரு நாள் எங்கே அழைத்து செல்கிறேன் என்று சொல்லாமல் என்னை நீண்ட தூரம் அழைத்து சென்றான். அவன் சென்றடைந்த இடம் ஒரு ஹோட்டல்.

அச்சம்!
இங்கே எதற்கு வந்தாய் என்று கேட்டதற்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று கூறினான். ஆனால், அவன் திட்டமிட்டதோ வேறு. அறைக்குள் சென்றதும் என்னை வற்புறுத்தினான்.
உண்மையில் நான் எத்தனையோ கெஞ்சி பார்த்தும் கூட விடாமல், கடைசியில் என்னை கற்பழித்தான். காதலிக்கும் ஒருவன் இப்படி எல்லாமா நடந்துக் கொள்வான் என்ற சந்தேகம். மறுபுறம், அவன் மீதான அச்சமும் அதிகரிக்க துவங்கியது.
இது அனைத்தும் நடந்தது, நாங்கள் பேசி, பழகி ஆரம்பித்த மூன்றே மாதத்தில்.

நிராகரிப்பு...
நான் அந்த சம்பவம் நடந்து ஒரு வார காலம் சரியாக நடக்க முடியாமல் தவித்தேன். ஒவ்வொரு நாளும் அழுதேன். அதன் பிறகு நான் அழைத்தாலும் ஏற்க மாட்டான், மெசேஜ்க்கும் ரிப்ளை வராது.. பத்து முறை அழைத்தால் ஒரு முறை அட்டன்ட் செய்து பேசுவான். பத்து நாட்களுக்கு ஒருமுறை வந்து சந்தித்து செல்வான். அவனிடம் நிறைய மாற்றங்கள். என்னுள் அச்சம் மட்டுமே அதிகரித்தது.

ஏமாற்றம்!
என்னை அவன் காண வரும் போதெல்லாம், உடல் ரீதியாக துன்புறுத்துவான். ஓரிரு முறை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து, நீ எனக்கானவள், நீயே நினைத்தாலும் என்னைவிட்டு பிரிய முடியாது. அப்படி பிரிந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினான். இதை யாரிடமும் கூற முடியாமல் தவித்தேன்.

ஊரைவிட்டு...
ஒரு நாள் அவனாக அவனது சந்தித்தான், அவன் குடும்பத்தார் இடம்பெயர்ந்து வேறு ஊருக்கு செல்வதாக கூறினான். என்னை விட்டு சென்று விடுவானோ என்ற அச்சம், கதறி அழுது கெஞ்சினேன். ஆனால், அவன் என் பேச்சை கேட்பதாக இல்லை. ஊரைவிட்டு சென்றான். ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்தான். அந்த ஒரு மாத காலம் தினமும் இரவு அழுதே தீர்த்தேன்.

எல்லாமே பொய்...
அவன் கூறிய அவனது வீட்டு விபரங்களில் இருந்து, அவன் ஊரை விட்டு சென்றதாக கூறியதை வரை அனைத்துமே பொய். இடைப்பட்ட காலத்தில் வேறு ஒரு பெண்ணுடன தொடர்பில் இருந்தது எனக்கு தெரியவந்தது.
மேலும், என் தோழி ஒருத்தியை அவன் ட்ரை செய்திருக்கிறான், அவள் மூலமாகவே அனைத்து உண்மைகளும் அறிந்தேன். அவள் தான் அவனைவிட்டு பிரிந்து வர எனக்கு தைரியம் அளித்தால்.

பிரிந்தேன்!
ஒரு மாத காலம் கழித்து மீண்டும் எனக்கு மெசேஜ் செய்தான். நான் தான் அவனுக்கு வேண்டும் என்றான். நான் அவன் மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்வதே இல்லை. அவனிடமே இனிமேல் என்னை தொடர்புக் கொள்ள முயலாதே, இனிமேலும் உனக்கு அஞ்சி வாழ முடியாது என்று கூறிவிட்டேன். ஆனால், எனது பிரிவு அவனுக்கான தண்டனை இல்லை.

என்ன செய்ய...
படித்த அப்பா, அம்மா கௌரவம் பார்க்கும் குடும்பம். அவர்களிடம் போய் அப்பா, நான் ஒருவனை நம்பி ஏமார்ந்துவிட்டேன் என்று கூறினால், என்னை அடிப்பார்கள் என்பதை தாண்டி தவறான முடிவு எடுத்துவிடுவார்களோ என்ற அச்சம். வெறும் ஃபேஸ்புக் நட்பு, ஒரு ரெக்வஸ்ட் அக்ஸப்ட் செய்து என் வாழ்வை வெறும் ஒருவருடத்தில் இழந்துவிட்டேன்.
பதின் வயதில், கல்லூரி வாழ்வில் காதல் வருவது இயல்பு. ஆனால், அது காதலா என்று அறிந்து இணையுங்கள். என் வாழ்க்கை இன்றைய தலைமுறையில் பல இளைஞர்கள் வாழ்வில் நடந்து வருகிறது. நான் வெறும் ஒரு பருக்கை தான்.



Click it and Unblock the Notifications











