Latest Updates
-
10,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றிய முதல் காய்கறி எது தெரியுமா? இப்போதும் நாம இதை சாப்பிடுறோம் -
வெயில் கொடுமையா? இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா போதும், வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெசிபி - ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க..
ஓவியா பகிர்ந்திருக்கும் லவ் சீக்ரெட் பற்றி தெரியுமா?
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் குறித்து உங்களுக்கு என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?
ஒரு வழியாக தமிழகத்தில் பிக் பாஸ் புயல் ஓய்ந்து விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற அனைவருமே மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்களாகிவிட்டார்கள்.
அவர்களுடைய பேட்டிகள், அவர்களைப் பற்றிய தகவல்கள் என எந்த வந்தாலும் வைரலாய் பரவிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸில் அப்படி என்ன இருக்கிறது. மக்களிடையே இந்த அளவுக்கு பிக் பாஸ் ஒன்றிப்போனதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? பிக் பாஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் காதல் பாடம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

உணர்வு :
எந்த விஷயத்தையும் உணர்வு ரீதியாக நம்மை அணுகும் போது அதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.
உணர்வு ரீதியாக நம்மை அதாவது பார்வையாளர்களை எப்படி நெருங்க முடியும் என்று பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சியை.

குடும்பம் :
நம்மைச் சுற்றியிருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறது பிக் பாஸ் .
அங்கிருந்த ஸ்ரீயில் ஆரம்பித்து,எல்லாருமே ஏதோ ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினரை மிஸ் செய்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்தார்கள்.

காதல் :
இதனை பார்த்ததுமே சட்டென உங்கள் நினைவுக்கு வருவது ஓவியா-ஆரவ் ஜோடியாகத்தான் இருக்கும்.
விளையாட்டாய் ஓவியா காதலைச் சொல்வது, அதனை தவிர்க்க முடியாமல் கையாளத் தெரியாமல் பெரும் புயலையே கிளப்பி விட்ட அந்த காதல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உச்சம் என்றே சொல்லாம்.
ஓவியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் உயர்ந்தது, ஆரவை திட்டித் தீர்த்தார்கள். ஒருவர் காதலைச் சொன்னால் அதனை எப்படி கையாள வேண்டும் என்பதை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

ஆரவ் :
இந்த காதல் விவகாரத்தில், தான் காதலிப்பதாக சொல்லவில்லை என்று ஆரவ் உறுதியாக சொன்னாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. மாறாக பெரும் அவப்பெயரை சந்தித்துக் கொண்டார்.
இந்நேரத்தில் ஃபேமஸான இன்னொரு விஷயம் மருத்துவ முத்தம். தான் காதலிக்காத ஒரு பெண்ணிற்கு முத்தம் கொடுப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம் என்று ஆரவுக்கு மட்டும் தான் வெளிச்சம்.

ஓவியா :
குழந்தைத் தனமான செயல்களால் பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். விளையாட்டாய் ஆரம்பித்த விஷயம் எப்படி சீரியசாக முடியும் என்பதை ஓவியா நன்கு உணர்ந்திருப்பார்.
மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி உன் காதலில் நீ உறுதியாக இரு, உன்னையும் உன்னுடைய காதலையும் நம்பு என்பதை வேத வாக்காக கொண்டு ஆரவை சுற்றிச் சுற்றி வந்தார்.
தன் விருப்பத்தை சொல்லி அதற்காக காத்திருப்பது.

காதல் தோல்வி :
பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த விஷயம் திடீரென இல்லை என்றானவுடன் நாம் எப்படி அவதிப்படுவோமோ அதே போல மனரீதியாக பாதிக்கப்பட்டார் ஓவியா.
ஒரு தோல்வியை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த பாடம் குறிப்பாக காதல் தோல்வி என்ற விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான ஓர் வழியை திறந்து விட்டிருக்கிறது.
இதற்கான விடையையும் நிகழ்ச்சியில் ஓவியாவே சொல்லியிருப்பார்.
‘என் வாழ்க்கையில் யாருக்கும் இரண்டாவது வாய்ப்பு இல்லை'

ஈர்ப்பு :
இதிலும் நாயகன் ஆரவ் தான். ஒரு கட்டத்தில் ஜூலிக்கு ஆரவ் மீது ஈர்ப்ப வர அதனை தனக்கு உண்மையாக இருப்பார், தன்னை வழி நடத்துகிறவர் என்று பெரிதும் நம்பிய காயத்திரியிடம் சொல்கிறார்.
அவரோ டமாரம் அடித்து எல்லாரிடமும் பகிர்ந்து கொள்கிறார். தனக்கு விருப்பமான ஒன்று, பிறரிடம் பகிரும் போது அது எப்படியெல்லாம் கேலி,கிண்டல் செய்யப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் உங்களுக்கு சிறந்த பாடமாய் அமைந்திருக்கும்.

சமாளிப்பு :
ஒரு கட்டத்தில் வீட்டில் இருப்பவர்களே பல முறை ஜூலியிடம் ஆரவ் பற்றி கேட்டும் தந்தையைப் போல இருந்தார், கண்கள் அப்படி இருந்தது, சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் அப்படியிருந்தது என்று பலவாறாக மழுப்பினார்.
பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த பிறகும் கூட ஆரவ் மீதான ஈர்ப்பு குறித்து ஒரு கேள்வி ஜூலியிடம் முன் வைக்கப்படுகிறது.

திருமணம் :
வாழ்க்கைத் துணை என்பது எவ்வளவு அவசியமானது என்பதை சினேகனின் தந்தை அந்த தள்ளாத வயதிலும் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் தன்னுடைய இயலாமையையும் பகிரும் போது பெருகியெடுத்த கண்ணீரோடு அந்த கேள்வியும் எழுந்திருக்கும்.

மனைவி :
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக வையாபுரியைச் சொல்லலாம். இதனை அவர் நிகழ்ச்சியிலேயே பல முறை கூறியிருக்கிறார். கணவனாக, அப்பாவாக என்னுடைய கடமைகளை எதுவும் செய்யவில்லை, இங்கே வந்ததற்கு பிறகு தான் அதனை உணர்கிறேன்.
இனி என்னை மாற்றிக் கொள்வேன் என்று அழுது அழுது.... கேமரா முன்பாக சொன்ன முகம் உங்களுக்கு நினைவிருக்கும்.

கடந்து வா :
ஆரவ் இல்லை என்றான பிறகு மன ரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தே வெளியேறிய ஓவியா இன்று பயங்கர உற்சாகமாக இருக்கிறார்.
காதலித்தவன் இல்லை என்றால் என்ன? முதலில் உங்களை நீங்கள் காதலியுங்கள் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார். அதே போல என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் அவன் கெட்டவன், துரோகி என்று பட்டம் கொடுக்கமால்
"ஹாய் ட்யூட்.... "என்று ஆரவிடம் சர்வ சாதரணமாக கை குலுக்கி பேசுகிறார். வாழ்த்துக்களை பகிர்கிறார்.



Click it and Unblock the Notifications