Latest Updates
-
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது!
காதலில் ஆண்கள் 13 விதம், இதுல நீங்க எந்த ரகம்?
மனிதர்கள் ஒரு வகை தான். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் மனநிலை தான் பலவகை. ஒரே சூழலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கையாள்வது உண்டு. அதில் யார் சிறந்த முறையில் கையாள்கிறார்களோ அவர்களே அந்த காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்.
பெண்களை இம்ப்ரஸ் செய்யும் போது ஆண்கள் செய்யும் 8 தவறுகள்!!
காதல் மட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உண்மையில் காதலில் தான் ஆண்கள் ஓர் சூழ்நிலையை பலவகைகளில் கையாள்கிறார்கள். இதனால் தான் காதல் எனும் போது நண்பர்கள் தரும் ஐடியாக்கள் பல வகைகளில் இருக்கின்றன...
இந்த 10 வகையான ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லையாம்...

நானும் ரவுடி தான் விஜய் சேதுபதி
அந்த பெண்ணுக்கு நாம் பேசுவது புரியுமா, நம்மை பிடிக்குமா? அவர் யார்? என்ன? என எதுவும் தெரியாமல் இம்ப்ரஸ் செய்ய முனையும் ஆண்கள்.

மெட்ராஸ் கார்த்தி
பெண்கள் விலகி, விலகி போனாலும், உருகி உருகி காதலிக்கும் ஆண்கள்.

பொல்லாதவன் தனுஷ்
தன் காதல் கதையை காதலிக்கும் பெண்ணிடம் கூறமால், உடைந்த ரேடியோ போல நண்பர்களிடம் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் ஆண்கள்.

பாஸ் ஆரியா
இம்ப்ரஸ் செய்ய முடியாமல், அந்த பெண்ணை விட்டு விலகவும் முடியாமல் விடா முயற்சி தான் விஸ்வரூப வெற்றி என வெறித்தனமாக துரத்தி துரத்தி காதலிக்கும் ஆண்கள்.

மௌனம் பேசியதே சூர்யா
காதலே வேணாம்... ஏண்டா லவ்வு, லவ்வு-னு சாவுறீங்க என அறிவுரை கூறும் ஆண்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு
வசனமாக பேசி இம்ப்ரஸ் செய்யும் நபர்கள், கட்டம் கட்டியாவது தூக்கிவிடும் குணாதிசயம் கொண்டவர்.

ஆடுகளம் தனுஷ்
ஆடம்பர பெண்ணை காதலிக்கும் மிடில் கிளாஸ் ரோமியோ.

அம்பி விக்ரம்
வருடக்கணக்கில் காதலை கூறாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் அப்பாவி அம்பி.

பூவே உனக்காக விஜய்
தன் காதல் நிறைவேறாமல் போனாலும், தான் காதலித்த பெண் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணும் நல்ல உள்ளம் படைத்த ஆண்கள்.

காதல் மன்னன் அஜித்
தான் விரும்பும் பெண்ணுக்கு நிச்சயம் ஆயிருந்தாலும் கூட தன் காதல் மூலம் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்கும் ஆண்கள்.

குணா கமல்
பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கும் ஆண்கள். தன் காதல், காதலி தான் தன் உலகம் என இருப்பவர்கள்.

தளபதி ரஜினி
மூர்க்கத்தனமாக இருப்பினும், காதல் என்றால் உருகும் மனம் கொண்டவர்கள். கோபம் இருக்குமிடம் தான் அன்பு இருக்கும் என்பதற்கான அடையாளங்கள்.

பீப் சாங் சூப் பாய்ஸ்
காதல் தோல்வியில் பெண்களை திட்டித் தீர்க்கும் ஆண்கள்.



Click it and Unblock the Notifications