Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மலையாள பெண்கள் மீது ஏன் காதல் வயப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!
"மலையாள வெள்ளை மயிலே... கொஞ்சி தமிழ் பேசி என்ன கொல்லுதே..." என பாட்டு பாடாத தமிழ் ஆண்கள் இருந்தால், சாரி பாஸ் நீங்க கொடுத்து வெச்சது அவ்வளவு தான். மலையாள பெண்களோடு நட்பு பாராட்டும் வாய்ப்பு கிடைப்பதும் பருவ வயதில் ஓர் வரம் தான். அது கிடைக்குமா என ஏங்கும் ஆண்களில் நீங்களும் கூட ஒருவராக இருந்திருக்கலாம்.
ஆனால், மற்ற பெண்களை விட மலையாள பெண்கள் மீது ஏன் காதல் வயப்பட வேண்டும் என உங்களுக்கு தெரியுமா? அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களும், காதலின் வேறொரு பரிமாணத்தைக் காண்பதற்கான காரணங்களும் இருக்கின்றன... அதைப் பற்றி இனிக் காண்போம்.....

கொஞ்சி தமிழ் பேசுதல்
கொஞ்சி, கொஞ்சி தமிழ் பேசினாலும், ல, ள, ழ சரியாக உச்சரிக்க கூடியவர்கள் மலையாள மக்கள். இந்த தெளிவான உச்சரிப்பு தமிழை ரசித்து கேட்க உதவும். சாதாரணமாக காதலி கொஞ்சிப் பேசினாலே ஆண்கள் உருகிவிடுவார்கள். அதிலும், பேசும் மொழியையே கொஞ்சி, கொஞ்சி பேசினால்?? கேட்கவா வேண்டும்.

கண்மை
காதலில் பெண்கள் இதழ் திறந்து பேசுவதை விட, விழி இமைத்து பேசுவது தான் அதிகம். கவ்வும் இதழ்களை விட, மனதை கவ்வும் விழிகளுக்கு தான் காதலில் அதிகமான ஈர்ப்பு இருக்கிறது. கண்மை, அந்த விழிகளுக்கு மேலும் அழகை சேர்க்கும். அந்த கண்மையை சீரும், சிறப்புமாக இட்டு, அழகை மெருகூட்டி, ஆண்களின் மனதை கவிழ்ப்பதில் மல்லூ பெண்கள் வல்லவர்கள்.

டிரெஸ்ஸிங் சென்ஸ்
பாவாடை தாவணி, சுடிதார், புடவை என ஜீன்ஸ் வரையிலும் செம்மையாக உடை அணிய தெரிந்தவர்கள் மலையாள பெண்கள். இது அவர்களின் மீது ஈர்ப்பு அடைய பருவ வயது ஆண்களை தூண்டும். அந்த தூண்டுதல் காதலாக மருவிவிட்டால் அதற்கு பெயர் தான் நாம் மேற்கூறிய வரம்.

இயல்பாக பழகுதல்
அழகை புறத்திலும் மட்டுமின்றி அகத்திலும் அதிகம் வைத்திருப்பவர்கள் மலையாள மக்கள். உபசரிப்பும், விருந்தோம்பலும் அவர்களது அன்பின் அடையாளமாக திகழ்கிறது.

இயற்கை அழகு
காதலியுடன் அழகான இடத்திற்கு சென்று வர வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால், அழகான காதலியுடன், நீங்கள் வாழும் இடமும் அழகாக இருப்பது, "கண்ணா ரெண்டு லட்டு வேணுமா..." என்பதை போன்றது. உங்களுக்கு வேணுமா? வேணாமா???

அழகு பராமரிப்பு
பெண்கள் என்றாலே அழகு என்றாலும் கூட, அழகு பராமரிப்பு மீதுள்ள ஈர்ப்பு அவர்களுக்கு குறைவதே இல்லை. அந்த அழகு பராமரிப்பில் கூட இரசாயன பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தும் குணம் கொண்டவர்கள்.

மசாஜ்
காதலிக்கும் பெண்ணின் விரல் நக நுனி பட்டாலே மசாஜாக உணரும் ஆண்களுக்கு, மசாஜ் செய்துவிடுவதெல்லாம் அசால்ட்டு என சொடுக்கு போடும் பெண் உங்களது காதலியாக இருந்தால், உங்கள் மனம் மட்டுமல்ல, உடலையும் கூட இளகிய நிலையிலேயே பராமரிக்க முடியும்.



Click it and Unblock the Notifications
