Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நெருங்கிய தோழி மீது காதல் வயப்பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்!!!
நட்பாக இருக்கும் தோழியின் மீது காதல் வயப்படுவது என்பது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. உங்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்கும், நீங்கள் முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் ஓர் நபர் வாழ்க்கை துணையாக வருவது உங்கள் வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக் கொள்ள உதவும்.
பெரும்பலும் இங்கு ஆண்கள் செய்யும் தவறு என்னவென்றால், ஏதோ மூன்றாவது நபரிடம் போய் காதலை கூறுவது போல வெளிப்படுத்துவது தான். அவரை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் தைரியமாக, தெளிவாக காதலை வெளிப்படுதினாலே போதுமானது. அதே போல, நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும், அவர் பதில் கூற தேவையான அவகாசம் அளிக்க வேண்டும்...

நேரம் வரும் வரை காத்திருங்கள்
உங்கள் தோழி என்பதால், அவர் எந்த சூழலில் எப்படி எதிர் கொள்வார் என்பது பற்றி உங்களுக்கு மிக தெளிவாக தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது எனவே, அவர் நல்ல மனநிலையில் இருக்கும் போது, நேரம் பார்த்து உங்கள் காதலை வெளிபடுத்துங்கள். இல்லையேல், அவர் உங்கள் மீதுவைத்திருக்கும் நட்பும் கூட சிதைந்து போக வாய்ப்புகள் இருக்கிறது.

தைரியமாக பேசுங்கள்
தைரியமாக பேசுங்கள்

திறந்த மனம்
உங்கள் தோழி என்பதால், அவருக்கும் உங்களை பற்றி தெளிவாக, நன்றாக தெரியும் என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, வீண் பில்டப், கற்பனை என கண்ட கலவைகளை சேர்க்காமல், உங்கள் மனதில் இருக்கும் காதலை மட்டும் வெளிபடையாக கூறிவிடுவது நல்லது.

கொட்டி தீர்த்து விடுங்கள்
உங்கள் மனதில் இருக்கும் காதல், இத்தனை நாட்களாக பூட்டி வைத்திருந்த உணர்சிகளை துளியும் பாக்கி வைக்காமல் மொத்தமாக கொட்டிவிடுங்கள். மிச்சம் மீதி வைக்க இது ஒன்றும் வங்கி கணக்கு அல்ல.

தோழியின் பதில்
உங்கள் தோழியின் பதில் என்னவாக இருந்தாலும் அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம், அதற்கான பதிலாக நீங்கள் என்ன கூற வேண்டும் என்று முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் வேண்டாம் என்று மொத்தமாக கூறிவிட்டாலும் கூட அதில் ஒன்றும் பெரிய தவறில்லை.

அடுத்து என்ன
அவர் வேண்டாம் என்று கூறினால் உடனே குடி, பழிப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்வதை முயற்சிக்க வேண்டாம். ஒருவேளை அவர் உங்கள் காதலை ஒப்புக் கொண்டால் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றி உடனே திட்டமிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். வேண்டாம் என்று கூறும் பட்சத்தில் அவர் கொஞ்ச நாட்கள் உங்களை ஒதுக்க நேரிடலாம். இங்கு தான் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் அவர் உங்களை பற்றி எண்ணிக் கொண்டிருக்கலாம்.தொல்லை செய்து சொதப்பிவிட வேண்டாம்.

எல்லாம் நன்மைக்கே!!!
காதலில் வேண்டாம் என்பதும், ஒத்துக் கொள்வதும் அவரவர் விருப்பம். கட்டாயப்படுத்தி வருவது காதலாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, முடிந்தால் மீண்டும் உங்கள் காதலை அவருக்கு புரியும்படி கூட முயற்சி செய்யுங்கள். இல்லையேல் விட்டுவிடுவது தான் நல்லது. வாழ்க்கையில சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு பாஸ்!! காதல் தோல்வியைவிட பெரியவை எத்தனையோ இருக்கின்றன.



Click it and Unblock the Notifications
