Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூறும் சூப்பரான காதல் டிப்ஸ்!!!
உங்களுக்கு யாருமே இப்படி ஒரு காதல் டிப்ஸ் கூறியிருக்க முடியாது. இனி மேலும் இப்படி ஒரு காதல் டிப்ஸ் கூறவும் முடியாது. ஆம், இந்தியாவில் இந்தியை பிடிக்காத மக்கள் கூட இருக்கிறார்கள். கிரிக்கெட் பிடிக்காத மக்கள் யாருமே இல்லை. சிகரெட் பிடிக்காத ஆண்களை கூட பார்க்க முடியும் ஆனால் கிரிக்கெட் பிடிக்காத ஆண்களை பார்க்க முடியாது.
கிரிக்கெட் மீது காதல் கொண்டுள்ள அனைவரின் நெஞ்சிலும் ஓர் காதல் கதை கட்டாயம் இருக்கும். காதலும் - கிரிக்கெட்டும் இந்தியாவில் பிரிக்க முடியாத பந்தம். இந்த பந்தத்தை உருவாக்கிய முக்கியமான இந்திய விளையாட்டு வீரர்கள் உங்களுக்கு காதல் டிப்ஸ் கூறினால் எப்படி இருக்கும்... ஓர் சிறிய கற்பனை....

விராத் கோலி
ஒருநாள் போட்டியில் இந்திய அணி சேசிங் செய்யும் போது விராட் கோலியின் ஆட்டம் எவ்வளவு வேகமாக இருக்குமோ, அந்த அளவிற்கு நீங்கள் உங்கள் காதலியை பின் தொடர்வதில் வேகம் காட்ட வேண்டும். இல்லையேல் கிளி பறந்துவிடும்.

சேவாக் - காம்பீர்
இந்திய அணியின் துவக்கத்தின் போது, சேவாக் - காம்பீர் எப்படி ஒரு வலுவான துவக்கம் தருவார்களோ, அப்படியான ஓர் அடித்தளம் ஒவ்வோரு காதலுக்கும் தேவை. இல்லையேல் உறவில் ஆட்டம் கழன்றுவிடும்.

டிராவிட்
உங்கள் காதலியை, டிராவிட் தனது ஸ்டம்புகளை காப்பதை போல, மிகவும் கவனமாக, பறிகொடுத்துவிடாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.

யுவராஜ்சிங்
உங்கள் காதலியை யாரேனும் சீண்டினால், நீங்கள் யுவராஜ் சிங் போல சீற்றம் கொண்டு அடிக்க வேண்டும். அந்த ஆறு பால், ஆறு சிக்ஸர் போல இருந்தால், நீங்கள் தான் கில்லி.

சச்சின்
ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடும் போது எப்படி பந்தின் மீது கருணைக் கொண்டு அசால்ட்டாக தட்டிவிட்டு சச்சின் ஸ்கோர் செய்வாரோ. அதுப் போல நீங்களும் உங்கள் காதலி மீது கருணைக் கொண்டு காதலில் ஸ்கோர் செய்ய வேண்டும்.

"தல" தோணி
ஒருவேளை உங்கள் காதலி உங்களை ஏமாற்றிவிட்டால், "தல" தோணி ஸ்டைலில் "கதம் கதம்" சொல்லி காதல் கதையை முடித்து விட வேண்டும். வெறுமென ஜவ்வு போல இழுப்பது வீண் வேலை.



Click it and Unblock the Notifications