For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் திடீரென்று உடலுறுவு கொள்ளும் மனநிலையில் இல்லாததற்கான காரணங்கள்!!!

By Ashok CR
|

உடலுறவு என்பது மனித இனத்திற்கு பேரின்பத்தை அளிக்கும் செயல்களில் முதன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் அதற்கும் சூழ்நிலைகள் ஒத்து வர வேண்டும். அதுவும் பெண்களின் பாலுணர்வு ஆசைகளுக்கு முட்டுக்கட்டையாக பல விஷயங்கள் செயல்படுகிறது.

உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதால் உங்கள் துணை அவரின் பேரின்பத்தை இழப்பார். அது போதாதென்று உங்கள் உறவின் மற்ற அம்சங்களையும் அது பாதிக்கக்கூடும். பெண்களின் பாலுணர்வு பாதிக்கப்படுவதற்கு சில பொதுவான காரணங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹார்மோன் நிலை

ஹார்மோன் நிலை

சில நேரங்களில் ஹார்மோன் சமமின்மையை பெண்கள் சந்திக்கக்கூடும். இது அவர்களின் லிபிடோ எனப்படும் மோக உணர்வை வெகுவாக பாதிக்கும். பெண்களுக்கு சில குறிப்பிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது தான் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்; பருவமடைதல் மற்றும் இறுதி மாதவிடாய் போன்றவைகள் அதற்கு சில உதாரணங்கள். அதனால் பெண்கள் அவர்களின் வாழ்வு முழுவதுமே ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை தொடர்ச்சியாக சந்திப்பார்கள். ஆண்களுக்கான லிபிடோவுடன் தொடர்புடையது டெஸ்டோஸ்டெரோன். இது பெண்களில் இருப்பதோடு மட்டுமல்லாது பெண்களின் லிபிடோவிற்கும் அதிமுக்கியமான ஒன்றாகும். அதனால் அது குறைவாக இருக்கையில் பாலுணர்வும் குறைவாகவே இருக்கும்.

 மருத்துவ நிலைபாடுகள்

மருத்துவ நிலைபாடுகள்

பல்வேறு நோய்கள் மற்றும் மருத்துவ நிலைகள் கூட லிபிடோவை பாதிக்கும். இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், புற்று நோய், இதயகுழலிய நோய்கள் போன்றவைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை வாழ்வதால், அது நம் உடல்நலத்தை பல விதமாக பாதிக்கிறது. அதில் ஒன்று தான் லிபிடோ தட்டுப்பாடு.

மருந்துகள்

மருந்துகள்

மருந்துகள் உண்ணுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் ஒவ்வொருவரைப் பொறுத்து மாறுபடும். அப்படி ஒருவித பக்க விளைவு தான் லிபிடோ குறைபாடு. மன அழுத்தத்தை நீக்கவும், பதற்றத்தை நீக்கவும் நாம் உண்ணும் மருந்துகளாலும் கூட இந்நிலை ஏற்படலாம். வாய்வழி கருத்தடை மாத்திரைகள் நம் உடலில் உள்ள ஹார்மோன் அளவுகளை கட்டுப்படுத்தும். இதனால் உங்கள் லிபிடோ அளவும் பாதிக்கப்படும். மருந்துகள் உண்ணும் போது லிபிடோ குறைவாக இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

உளவியல்

உளவியல்

பல உளவியல் ரீதியான நிலைகளும் கூட லிபிடோவை பாதிக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், மன அழுத்தம். மன அழுத்தம் என்பது உடலுறவு உட்பட, சந்தோஷம் மற்றும் இன்பத்தை அளிக்கும் செயல்களை அனுபவிக்க முடியாமல் இடையூறாக விளங்கும் ஒரு வித இயலாமை. போதை பொருட்களும், மதுபானங்களும் ஒருவரின் மனநிலையை மேம்படுத்தினாலும் கூட அவைகள் லிபிடோவை அடங்கச் செய்து விடும். பதற்றம் அல்லது அதிர்ச்சிக்கு பின் ஏற்படும் மன அழுத்தம் அல்லது மன கோளாறினால் ஏற்படும் பசியின்மை போன்ற நிலைகளால் கண்டிப்பாக பெண்களின் லிபிடோ பாதிக்கப்படும். கூடுதலாக, பாலுணர்வு பற்றிய மத நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகளும் கூட பெண்களின் லிபிடோவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

உளைச்சல்கள்

உளைச்சல்கள்

சில நேரங்களில் நம் வாழ்க்கையில் பல சவால்களை மேற்கொள்ள வேண்டி வரும் போது, அந்த பட்டியலில் உடலுறவு என்பது கடைசியாகவே வரக்கூடும். பொறுப்புகளின் சுமையினால் சோர்வடைந்து விடுவதால், பெண்களின் லிபிடோ மிகவும் குறைந்து போகலாம்; அதுவும் குறிப்பாக அவர்கள் மற்றவர்களை கவனிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வரும் போதும் அடுத்தவர்களின் தேவைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து வரும் போதும். ஒரு பெண்ணின் உறவில் அவருடைய கணவருடன் நல்லுறவு நிலைக்கவில்லை என்றாலும் கூட அவளின் லிபிடோ அளவு குறையக்கூடும்.

குறைவான லிபிடோவால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்கள்

குறைவான லிபிடோவால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்கள்

லிபிடோ குறைபாடு ஏற்படும் போது அதன் தாக்கம் படுக்கை அறையையும் தாண்டி தாக்கங்களை உண்டாக்கும். சீரான முறையில் உடலுறவு கொள்ளாத போது சில தம்பதிகளுக்கு இடையே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இடைவெளியை உண்டாக்கும். இதனால் இருவருக்கும் இடையே மன உளைச்சலை ஏற்படுத்தும்.

குற்ற உணர்வு

குற்ற உணர்வு

உடலுறவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அந்த பெண்ணை துரத்தும். மேலும் உடல் பசிக்கு அலைகிறாள் என்று எங்கே தன் கணவன் நினைத்து விடுவானோ என்ற பயத்தினால் தன் துணையை தொடுவதை கூட நிறுத்தி விடுவாள். உடலுறவில் நாட்டமில்லாத பெண்களின் இந்த செயலால், ஆண்கள் தான் நிராகரிக்கப்படுவதாக எண்ணுவார்கள். மேலும் இது தான் காதலிக்கப்படவில்லை என்ற உணர்வையும் உண்டாக்கும். என்ன தான் தன் கணவன் மீது காதல் கொண்டிருந்தாலும் கூட, உடலுறவில் நாட்டம் காண்பிக்காத போது கண்டிப்பாக ஆண்களுக்கு இந்த உணர்வு ஏற்படும்.

உதவி கிடைக்கும்

உதவி கிடைக்கும்

சிலருக்கு பாலுணர்வு மற்றும் உடலுறவு மற்றும் அதன் குறைபாடுகளை பற்றி பேசுவதில் பயமும் பதற்றமும் உண்டாகும். இதனால் எதற்கு என அமைதியாக இருப்பார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதற்கு உதவ வழி வகை உள்ளது. பாலுணர்வு ஆரோக்கியத்தை பற்றி நன்கு பரீட்சயமான சரியான வல்லுனரை தேடுங்கள். உங்கள் லிபிடோவை பாதிக்கக்கூடிய உங்கள் மருத்துவ நிலைப்பாடு, உளவியல் நிலை மற்றும் வாழ்க்கை முறை பிரச்சனைகளை சோதித்து உங்களுக்கு அவர்களால் உதவிட முடியும். உங்கள் பாலுணர்வு தேவைகளைப் பற்றி பேசுவதற்கு சங்கூஜமாக தான் இருக்கும். ஆனால் அந்த தடைகளை கடந்து வந்தால் சரியான உதவி கிடைக்கும். இதனால் உங்களால் அந்த விஷயத்தில் அதிக நாட்டத்தை செலுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons She Is Not In The Mood For Intercourse

Here are some of the common reasons that affects sexual desire in women. Low libido can be caused by numerous factors...
Desktop Bottom Promotion