பெண்களிடம் ஆண்கள் வெறுக்கும் குணாதிசயங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

குடி, புகை, சைட், ரௌடித்தனம் என ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காதவை நிறைய இருப்பது போலவே, பெண்களிடம் பிடிக்காதவை என ஆண்களிடமும் ஓர் பெரிய பட்டியல் இருக்கிறது. ஆண்களுக்கு பெண்கள் ஈடானவர்கள் தான் என்பதற்கு படிப்பு, வேலை மட்டுமல்ல இந்த குணாதிசயங்களும் கூட ஓர் பெரிய காரணங்கள் தான்.

தெருக்களில் சண்டைப் போடுவதில் ஆண்கள் பலே கில்லாடிகள் என்றால், வீட்டுக்குள் சண்டைப் போடுவதில் பெண்கள் தில்லாலங்கடி. சிறிய விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் கூட உடைத்து சுக்குநூறாக ஆக்கும் திறன் நம் நாட்டின் கண்களிடம் அதிகமாக இருக்கிறது. இனி, பெண்களிடம் ஆண்கள் வெறுக்கும் குணாதிசயங்கள் பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சண்டைப் போட தயாராக இருப்பது

சண்டைப் போட தயாராக இருப்பது

எப்படா நேரம் கிடைக்கும் என்பது போல, நாம் என்றோ செய்தவற்றை எல்லாம் கிண்டி கிளறி சண்டைப் போட மீனுக்காக காத்திருந்த கொக்கை போல காத்திருக்கும் பெண்களின் குணம் எந்த ஆணுக்கும் பிடிக்காது.

கதை, கதையாக பேசுவது

கதை, கதையாக பேசுவது

வீட்டில் அம்மா திட்டிவிட்டார் என்பதை கூட ஜாலியன்வாலா பாக் சம்பவத்தை போல மிகவும் கதறி, கதறி பெரிய கதை போல கூறுவது.

கிசு கிசு பரப்புவது

கிசு கிசு பரப்புவது

பெண்கள் எள்ளென்றால் எண்ணெய்யாக இருப்பது இதில் மட்டும் தான். மணலை கயிறாக திரித்து கிசு கிசுக்க கூட பெண்களால் மட்டுமே முடியும். இந்த புரளி பேசுவது மற்றும் கிசு கிசுப்பது எல்லாம் பெண்களின் மரபணுவில் ஏற்பட்டுள்ள கோளாறு போல.

நச்சரிப்பது

நச்சரிப்பது

அவர்கள் கூறியது, எண்ணுவது எல்லாம் உடனே நடக்க வேண்டும். இல்லையேல் நச்சரித்து கொன்றுவிடுவார்கள். இல்லையேல் உங்கள் மீது குற்றங்கள் அடுக்கடுக்காக எடுத்து வைக்கப்படும்.

பிளவு ஏற்படுத்துவது

பிளவு ஏற்படுத்துவது

சிறிய விஷயமாக இருந்தாலும் கூட அதை ஊதிப் பெரியதாக்கி பிளவு ஏற்படுத்தும் சக்தி பெண்களுக்கு உண்டு. இது குடும்பத்தை நடத்தும் ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

ஷாப்பிங் பைத்தியம்

ஷாப்பிங் பைத்தியம்

நூறு உடை வாங்கினாலும், ஓரிரு மாதங்களிலேயே புதுசு ஒண்ணு கூட இல்லை. நான் எப்போ துணி எடுத்தேன் என்று வாய் கூசாமல் கூறி மறுபடியும் ஷாப்பிங் செல்லும் திறன் பெண்களுக்கு உண்டு. ஆண்களுக்கு டாஸ்மாக்கும், பெண்களுக்கு ஷாப்பிங்கும் தீராத அடிக்ஷன் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Qualities Of Women That Men Hate

Do you know about the qualities of women that men hate? read here in tamil.
Story first published: Wednesday, October 28, 2015, 16:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter