Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மாடர்ன் பெண்கள் vs லோக்கல் பாய்ஸ் மத்தியில் லவ் அதிகமாக ஏற்படுவதற்கான காரணங்கள்!!!
1990-களில் இருந்தே லோக்கல் பாய்ஸ்க்கும் மாடர்ன் பெண்களுக்கும் காதல் மலர்வது போன்ற பிம்பத்துடனே நிறைய காதல் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் நடக்காத எந்த ஒரு விஷயமும் திரைப்படமாக உருவாவதில்லை. உண்மை விஷயங்களை மெருகேற்றி, அலங்காரம் செய்து விற்பனைக்காக செய்யும் டகால்டி வேலைகள் நடந்தாலும், அதில் கொஞ்சம் உண்மை இருக்கும்.
திரிஷா இல்லனா நயன்தாரா படத்துல இதெல்லாம் நீங்க கவனிச்சிங்களா???
நமது கல்லூரி நாட்களில் கூட நாம் இது போன்ற காதல் கதைகளை தான் அதிகம் பார்த்திருப்போம். நல்லவன் என்று பெயர் சூட்டப்பட்டு சிலருக்கு காதல் என்பதை எட்டாக் கனியாக ஆக்கிவிடுவார்கள். அவர்களது சாபம் தான் என்னவோ, இந்த மாடர்ன் பெண்கள் vs லோக்கல் பாய்ஸ் மத்தியில் மலரும் காதல் கதைகள் பெரும்பாலும் திருமணத்தில் முடிவதில்லை....
சின்ன சின்ன சண்டையிடும் தம்பதிகளின் இல்லற வாழ்க்கையில் இதெல்லாம் பக்காவாக இருக்கும்!!

லோக்கல் பாய்ஸ் அடிப்படை தகுதிகள்
லோக்கல் பாய்ஸ் என்பவர்களுக்கு என ஓர் தனி தகுதி இருக்கிறது, முகத்தை கடுப்பாகவும், உடலை எடுப்பாகவும் வைத்திருக்க வேண்டும். எப்போதுமே சட்டையில் மேல் பட்டன் இரண்டினை கழற்றி விட்டிருக்க வேண்டும். உள்ளுக்குள் கருப்பு நிற பனியன் அணிந்திருக்க வேண்டும். ஜீன்ஸ் தவிர வேறு எந்த வகை பேண்ட்டும் அணியவே கூடாது. இந்த அடிப்படை தகுதிகள் இருப்பவர்கள் மட்டும் தான் லோக்கல் பாய்ஸ் எனும் பெயருக்கு தகுதியானவர்கள். இந்த கெத்து தான் பெண்களை மிகவும் ஈர்க்கிறது.

லோக்கல் பாய்ஸ் வகைகள்
கல்லூரியில் உலாவும் லோக்கல் பாய்ஸ் என கூறப்படுபவர்கள் ரவுடிகள் அல்ல. மேலோட்டமாக உதார்விட்டு திரிபவர்கள். இவர்களது பன்ச் வசனங்கள், அசால்ட்டான பாவனைகள். பத்து பேருக்கு நடுவில் தனியாய் தெரியும் தன்மை போன்றவை தான் பெண்களுக்கு இவர்கள் மேல் ஏற்படும் முதல் கவர்ச்சி.

கெத்து
கலை அறிவியல் கல்லூரியில் பெரும்பாலும் விஸ்காம் மாணவர்களும், பொறியியல் கல்லூரியில் பெரும்பாலும் மெக்கானிக்கல் மாணவர்களும் தான் அதிகமான லோக்கல் பாய்ஸாக இருப்பார்கள். ஏனெனில், இந்த பிரிவுகளில் தான் பெண்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள், மானம், கெளரவம் போன்றவை பற்றி கவலைப்பட தேவையில்லை. இதனால் இவர்களது கெத்துக்கு எந்த குறைச்சலும் இருக்காது.

பருவ பெண்களுக்கு பிடிக்க காரணம்
எந்த பிரச்சனை என்றாலும் அதை துணிச்சலாக எதிர்கொள்வது, யாருக்கும் பயப்படாமல் இவர்கள் செய்யும் செயல்கள், மற்றவர்கள் இவர்களை பற்றி அதிகமாக பேசுவது போன்றவை பருவ பெண்களுக்கு இவர்களை பிடிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

கல்லூரி காதல் கதைகள்
ரீலில் மட்டுமின்றி, ரியல் வாழ்க்கையிலும் கூட பெரும்பாலான கல்லூரி பயிலும் மாணவர் மத்தியில் மாடர்ன் பெண்களுக்கும் லோக்கல் பாய்ஸ்களுக்கும் தான் அதிகமாக காதல் மலர்கிறது.

காதல் டூ கல்யாணம்
ஆனால், கல்லூரி முடிந்து வேலை, வாழ்க்கையில் செட்டில் என்பது போன்ற எண்ணங்கள் மனதில் போது இந்த வகை காதல்கள் மெல்ல, மெல்ல காணாமல் போய் விடுகிறது. எந்த புரிதலும் இன்றி, வெறும் கவர்ச்சியினால் ஏற்படும் இந்த காதல்கள் கல்லூரி வாழ்க்கையோடு சேர்ந்து முடிவிற்கு வந்துவிடுகிறது.

ஒன்றிரண்டு மட்டுமே பாஸ் ஆகின்றன
கல்லூரியிலும் ஜாலியாய் வாழ்ந்துவிட்டு, எதிர்கால வாழ்க்கையின் மீதும் சரியான அக்கறையோடு இருக்கும் ஒருசில காதல் ஜோடிகள் மட்டுமே காதலில் பாஸாகி, திருமண பந்தத்தில் இணைகின்றனர்.

இது வெறும் மாயை
பருவ வயதில், திரைப்படத்தின் தாக்கத்தினால் ஏற்படும் மோகம் மற்றும் சில ஈர்க்கும் செயல்களை கண்டு இவர்கள் காதல் என்ற பெயரில் மாயை உறவில் விழுந்தாலும், உண்மையை உணரும் போது, போதுமான முதிர்ச்சியின்மையினால் பிரிந்து விடுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
