ஆம்பளைங்க இப்படி இருந்தா தான் பொண்ணுகளுக்கு பிடிக்குமாம்!!!

Posted By:
Subscribe to Boldsky

விலை உயர்ந்த ஆடையோ, ஆடி காரோ, ஆடம்பர வாழ்க்கையோ ஓர் நல்ல பெண் காதலில் எதிர்பார்ப்பது இல்லை. காதலில் உண்மையிலேயே ஆண்கள் அவர்களுக்கு பிடித்தமான பெண்ணிடம் அக்கறையாகவும், அரவணைப்பாகவும் இருந்தாலே அவர்களது மனம் உருகிவிடும். அதற்கென பெண்களை வெளியிலில் வைத்த ஐஸ் கட்டி என்று எண்ணிவிட வேண்டாம்.

பெண்கள் தங்களை விட முதிர்ச்சியான ஆண்களை விரும்புவதற்கான காரணங்கள்!!!

ஆடை, அணிகலன் போன்ற அடிப்படை விஷயங்களிலேயே அதிக எதிர்பார்ப்புகளும், குறை நிறைகளும் கண்டு தேர்வு செய்யும் குணம் கொண்டவர்கள் பெண்கள். இந்த விஷயத்திலேயே இவ்வளவு கறாராக இருக்கும் பெண்கள் காதல் அல்லது திருமணம் என்றால் பின் சும்மா எடுத்த எடுப்பில் ஆண்மகனை தேர்வு செய்துவிடுவார்களா என்ன.

ஆண்களுக்கு மனைவி இரண்டாவது தாய் மட்டும் அல்ல, முதலாவது மகளும் கூட....!

அன்பும், பண்பும், அக்கறையும் உங்களுக்கு சில கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கும் அவ்வளவு தான். இதனுடன் சேர்த்து உங்களது தனித்தன்மை, திறமை போன்றவற்றை முன்னிறுத்த வேண்டும்! பின்பு அவர்களது மனதில் சிம்மாசனமிட்டு அமர வேண்டும்! திறமையா? அது இருந்தா நான் ஏம்ப்பா வெட்டியா இத படிச்சுட்டு இருக்க போறேன் என்று புலம்புபவர்கள், காதலில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த விஷயங்களை படித்து தெரிந்துக் கொள்ளவும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அக்கறை

அக்கறை

பெண்கள் எப்போதும் அவர்கள் மீது எல்லாரும் அக்கறையாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதிலும் காதலில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒவ்வொரு வேளையும் அவர்கள் சாப்பிட்டார்களா, இல்லையா. எங்காவது வெளியே போயிருந்தால் எந்த பிரச்சனையும் இல்லையே எல்லாம் நலம் தானே என்று ஒவ்வொரு நொடியும் அவர்கள் மீது காதலன் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என பெண்கள் விரும்புவார்கள்.

உதவி

உதவி

பெண்கள் உடல் வலிமையில் கொஞ்சம் வலு குறைந்தவர்கள். ஏதேனும் பிரச்சனை என்றால் மனதளவிலும் கூட பலவீனம் அடைந்துவிடுவார்கள். அந்த தருணங்களில் ஆண்கள் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

சூழ்நிலை

சூழ்நிலை

ஆண்களை போல எல்லா விஷயங்களையும் பெண்கள் செய்ய இயலாது. எனவே, காதலில் பெண்களின் சூழ்நிலையை புரிந்து நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆண்களே!!!

கோபம்

கோபம்

ஆண்களின் பிறவி குணம் என்பது கோபம். பெண்கள் மென்மையானவர்கள். நீங்கள் நொடி நேரத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் அவர்களது மனதை யுகம் முழுக்க அரித்துக் கொண்டே இருக்கும்.

பொய்

பொய்

காதலை சொல்ல பொய் கூறினாலும் பரவாயில்லை, காதலிக்க தொடங்கிய பின் பொய் கூறுவதை ஆண்கள் தவிர்க்க வேண்டும். தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பது பெண்களால் தாங்க முடியாது. தவறான முடிவுகளை சரியாக எடுப்பவர்கள் பெண்கள். எனவே, பொய்யை குறைத்துக் கொள்ளவும்

பொறுமை

பொறுமை

பொறுமை இல்லாமல் காதலில் வெற்றி பெறுவது கடினம். ஒரு சில நேரங்களில் நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், பெண்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். அதையும் கூட நீங்கள் பொறுமையாக எடுத்துக் கொண்டு காதலில் பயணம் செய்ய வேண்டும்

ஈகோ

ஈகோ

காதலை அழிக்கும் பெரும் நோய் எது என்று கேட்டால் அது ஈகோவாக தான் இருக்கும். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சரி செய்துவிட்டால் காதல் சிறந்து விடும்.

குழந்தைத்தனம்

குழந்தைத்தனம்

பெண்களுக்கு மிகவும் பிடித்த குணாதிசயம் இந்த குழந்தைத்தனம். அவர்களுக்குள் மிகுதியாக இருக்கும் இந்த குணாதிசயத்தை பெண்கள் ஆண்களிடமும் எதிர்பார்க்கின்றனர்.

முதிர்ச்சி

முதிர்ச்சி

பிரச்சனைகளை கையாள்வது, முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பது என ஆண்களிடம் முதிர்ச்சியான குணாதிசயத்தை பெண்கள் ஆண்களிடம் அதிகம் எதிர்பார்கின்றனர்.

சந்தேகம்

சந்தேகம்

ஈகோவை விட கொடிய நோய் எது என கேட்டால் அது சந்தேகம் தான். நோய் என்று சொல்வதை விட விஷக்கிருமி என்று சொல்லலாம். இது காதலை வேரோடு அழித்துவிடும். சந்தோஷத்தை அழிக்கும் கருவி தான் சந்தேகம். புரிதல் தான் காதல் அதில் சந்தேகத்திற்கு இடமே இருக்கக்கூடாது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girls Expecting These Good Qualities From Their Life Partner

Girls expecting more good qualities from their future life partner. The sad thing is most of us has very few things only.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter