Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
காதலில்மூழ்கி முத்தெடுக்க பெண்கள், ஆண்களிடம் எதிர்பார்ப்பவை!!
வீட்டிற்கு மட்டுமின்றி நாடு செழித்து விளங்கவும் பெண்களின் முன்னேற்றம் முக்கிய பங்காக தேவைப் படுகிறது. சரி இனி நமது விஷயத்திற்கு வருவோம். நமது பாட்டிக் காலத்தில் கள்ளிப்பால் பயன்படுத்தியதால் பேரன்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பாவம் காதலிக்க கூட பெண்கள் இன்றி வாடிவதங்குகிறார்கள்.
ஆண்கள் பெண்களை தேர்ந்தெடுப்பதை விட, பெண்கள் தான் இப்போது ஆண்களை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். சில விஷயங்களில் ஆண்கள் கில்லாடியாக இருந்தால் தான் நாங்கள் ஆண்களை விரும்புவோம் என்று பெண்கள் அணி அறிவித்துள்ளது....

திட்டமிடுதல்
பொதுவாக பெண்கள் ஆண்களிடம் இருக்கும் பெரிய குறையாக பார்ப்பது எதையும் திட்டமிட்டு செய்யாமல் சொதப்புவது தான். எனவே, எந்த ஓர் ஆண் எல்லா செயல்களையும் திட்டமிட்டு செய்து முடிக்கிறானோ அவன் மீது பெண்ணுக்கு தானாக ஈர்ப்பு ஏற்படுகிறதாம்.

சொல்வதை கேட்க வேண்டும்
பெண்கள் எப்போதுமே வாயாடிகள் தான், இது ஒருவிதமாக தயாரிப்பு குறைபாடு, ஆண்களால் குடிக்காமல் இருக்க முடியாது, பெண்களால் கொஞ்சமும் பேசாமல் இருக்க முடியாது. எனவே, அவர்கள் பேசுவதை நீங்கள் தேன் வந்து காதில் பாய்வதைப் போல கேட்டு தான் ஆகவேண்டும்.

கொஞ்சம் சமைக்கவும் வேண்டும்
கூடமாட ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கொஞ்சம் சமைக்கவும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஷாப்பிங்
இந்த மாடர்ன் உலகில் ஆண்களுக்கு டேட்டிங்கும், பெண்களுக்கு ஷாப்பிங்கும் விடாத கருப்பு போல திகழ்கிறது. எனவே, பெண்கள் ஷாப்பிங் என்றால் வாயை பிளக்காமல், பர்சை பிளக்க வேண்டுமாம்.

ஜாதி, மத பாகுபாடு
ஜாதி, மதம் போன்றவற்றில் வெறித்தனமான செயல்பாடுகள் இருக்கக் கூடாது. கொஞ்சம் அறிவியல் ஞானத்துடன் இருந்தால் சமத்து என்கிறார்கள் பெண்கள்.

நேர்மறை எண்ணங்கள்
வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் அதை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். தோல்வியில் துவண்டு போய்விடக் கூடாது என்று ஆசைப் படுகிறார்கள்.

அக்கறை
தங்கள் மீது அக்கறையாக இருக்க வேண்டும், அரவணைப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். காரணமே இன்றி முத்தம் கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும் (கரும்பு தின்ன கூலியா..!!!) என்றும் கட்டளை இடுகிறார்கள்.

ஆதிக்கம்
ஆண்களுக்கு ஆண்மைக்கு நிகராய் ஆதிக்கம் செலுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். சில சமயங்களில் ஆதிக்கம் செலுத்தவும் வேண்டும், சில விஷயங்களுக்கு அடக்கி வாசிக்கவும் வேண்டும்.



Click it and Unblock the Notifications