முப்பது வயதை கடந்தும் நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா? அப்போ இதப் படிங்க!!!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களை பொறுத்தவரை அரசு 21 திருமண வயது என்று நிர்ணயம் செய்தாலும், வீட்டில் முப்பதை நெருங்கும் போதுதான் பெண் பார்க்கவே ஆரம்பிப்பார்கள். முப்பது என்பது கொஞ்சம் கால தாமதம் தான் என்றாலும். முப்பது வயதிலும் தனியாக, சிங்கிளாக இருப்பவர்களுக்கும் கூட நிறைய இனிமையான நிகழ்வுகள் அவர்களது வாழ்க்கையில் நடக்கின்றன.

ஏன் ஆண்கள் ஸ்லிம்மான பெண்கள் மீது அதிக ஈர்ப்புக் கொள்கின்றனர்???

பொருளாதார நெருக்கடி, பால்புட்டி வாங்க ஓடுதல், சண்டை சச்சரவு, எதை செய்ய வேண்டுமென்றாலும் ஒருவரிடம் கூறி அதற்கு அனுமதி பெறுதல் போன்ற தொந்தரவுகள் அவர்களுக்கு இல்லவே இல்லை. அந்த வகையில் முப்பது வயதை கடந்தும் நீங்கள் சிங்கிளாக இருக்கிறேர்களா? அப்போ இந்த வகையில் எல்லாம் நீங்கள் இனிமையாக இருக்கலாம்....

"ரொமாண்டிக்கானவன்.." என்பதை மீறி, பெண்கள் ஆணிடம் எதிர்பார்க்கும் சுவாரஸ்ய விஷயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முப்பதும், இருபது தான்!

முப்பதும், இருபது தான்!

இருபதுகளில் திருமணம் செய்துக் கொள்வதும் ஓர் இனிமையான வாழ்க்கை தான். ஆனால், முப்பதை கடந்தும் தனியாக இருப்பவர்கள், அதை ஓர் புதிய இருபதாக தான் வாழ்கிறார்கள். பயணிப்பது, நண்பர்களுடன் ஜமாய்ப்பது வாழ்க்கையை இனிமையாக வாழ்கிறார்கள்.

நினைத்த நேரத்தில் வேலை செய்யலாம்

நினைத்த நேரத்தில் வேலை செய்யலாம்

முப்பதை கடந்து இல்லற வாழ்க்கையை வாழ்பவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஆனால், சிங்கிளாக இருப்பவர்களுக்கு அந்த கட்டாயம் இல்லை. அவர்களது பாதையை நோக்கி அவர்கள் பயணிக்க, முயற்சிக்க நேரம் இருக்கும்.

உறவினர், நண்பர்களுடன் நாட்கள் செலவழிக்கலாம்

உறவினர், நண்பர்களுடன் நாட்கள் செலவழிக்கலாம்

முப்பதை கடந்தும் சிங்கிளாக இருக்கும் நபர்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நினைத்த நேரத்தில் நேரம் செலவழிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இது அவர்களை மிகவும் உற்சாகம் அடைய வைக்கிறது.

கடமைகள் ஏதுமில்லை

கடமைகள் ஏதுமில்லை

முப்பதை கடந்தும் சிங்கிளாக வாழ்பவர்களுக்கு செய்தே ஆக வேண்டும் என்ற கடமைகள் ஏதுமில்லை. பொருளாதார நெருக்கடி என்பது இவர்களுக்கு பெரிதாய் இருக்காது.

யாருக்கும் பதில் கூற தேவையில்லை

யாருக்கும் பதில் கூற தேவையில்லை

புதிய தொழில் முயற்சி, வெளி இடங்களுக்கு சென்று வருவது, வாழ்க்கையில் புதுமையாக எதையாவது தேர்வு செய்வது போன்றவற்றில் இவர்கள் யாருக்கும் பதில் கூற வேண்டிய அவசியங்கள் இருக்காது. பொருள் வாங்குவதாக இருந்தாலும் சரி, கடன் வாங்குவதாக இருந்தாலும் சரி, இவர்களுக்கு எந்த நெருக்கைடியும், தொந்தரவுகளும் இருப்பது இல்லை.

கிறுக்குத்தனமான செயல்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

கிறுக்குத்தனமான செயல்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

நடு ராத்திரி வெளியில் செல்வது, மாலை வேளைகளில் தூங்குவது, வேடிக்கையான செயல்களில் ஈடுபடுவது என என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

எண்ணற்ற கனவுக் கன்னிகள்

எண்ணற்ற கனவுக் கன்னிகள்

யாரை வேண்டுமானாளுனம் உங்களது கனவுக் கன்னியாக நினைத்துக் கொள்ளலாம். காதல் தூது விடலாம். எந்த பிரச்சனையும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

30 And Single Who Cares

30 And Single? Who Cares, Take a look here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter