Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
உங்க செல்லத்திடம் 'ஐ லவ் யூ' சொல்லாம வேறு எப்படி காதலைச் சொல்லலாம்..??
'ஐ லவ் யூ' என்ற 3 வார்த்தைகளை சொல்லுவதில் உள்ள சிக்கல்கள் சொல்லி மாளாது என்பது உண்மை தானே? சில நேரங்களில், அதை எப்பொழுது சொல்லலாம் அல்லது அவர் சொல்லும் வரை நான் பொறுத்திருக்கலாமா என்பது போன்ற எண்ணற்ற கேள்விகள் உங்கள் மனதில் சுழன்றடித்துக் கொண்டிருக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எதை சரியாக எண்ணியுள்ளீர்களோ, அது ஒரு எளிமையான உறுதிமொழியாகவோ அல்லது உண்மையான வலிமையான அர்ப்பணிப்பாகவோ இருக்கலாம். இங்கு காதலை வெளிப்படுத்தும் சில அருமையான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுப்போன்று வேறு: காதலனுக்கு உங்கள் மீது நாட்டம் அதிகமாக வேண்டுமா? இத முயற்சி செய்யுங்க...

மலர்கள்
நீங்கள் நேரடியாக சென்று உங்கள் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதை கடினமாக உணர்ந்தால், ஒரு பூங்கொத்தை பரிசளித்து மாயத்தை உருவாக்கலாம். மேலும், ஒரு அழகிய 'ரோஜாவை' தேர்ந்தெடுத்து, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மாதம் முழுவதும் கொடுத்து வாருங்கள். இது உங்களுடைய நோக்கங்களை கோடிட்டு காட்டத் தொடங்கும். அந்த மாதத்தின் முடிவில் பூவிற்குப் பதிலாக ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு, நீங்கள் உருகிக் கொண்டிருக்கும் புன்னகை அவர் முகத்தில தவழுவதைக் காண்பதற்காக காத்திருங்கள்.

அவருக்காக சமைத்தல்
உங்களிடம் உள்ள சமையல் கலைத் திறமைகளை பயன்படுத்தி உங்கள் விருப்பத்திற்குரியவரை கவனிக்கச் செய்ய முடியும். வீட்டில் செய்யும் சமையல்களை அர்ப்பணம் செய்வதன் மூலம் அவருடைய இதயத்தில் எளிதில் இடம் பிடிக்க முடியும் என்பதை உணருங்கள். அவருக்குப் பிடித்த உணவுகளை, ஒரு மாலைப் பொழுதின் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். இனிப்பான கேக் ஒன்றை சேர்த்து சுவையூட்டி, உங்களுடைய காதல் வசனங்களை ஐஸில் எழுதுங்கள். இது அவருடைய நிலையை சற்றே தட்டிப் பார்க்கும், உண்மையாகவே மற்றும் இதன் மூலம் அவருடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகவும் அதை மாற்ற முடியும்.

காதல் கடிதம் எழுதுங்கள்
காதல் கடிதங்களை எழுதுவது சற்றே பழமையான முறையாக இருந்தாலும், நமது உள்ளத்தின் ஆழத்திலுள்ள எண்ணங்களை வெளிப்படுத்த இதை விட சிறந்த வழிமுறை எதுவும் இல்லை. ஒரு மணம் மிக்க காதல் கடிதம் காதலை வெளிப்படுத்த கிடைத்துள்ள அற்புதமான கருவியாகும். அன்பைப் பரிமாறும் வார்த்தைகளின் அலங்காரத்துடன் செல்லும் காதல் கடிதங்கள், உணர்வு மிக்க காதலை உருவாக்குவதில் பெரும் பங்கை கொண்டிருக்கின்றன.

தேடல்
இது அதிக பிரயத்தனம் செய்யத் தேவையில்லாமலும், வார்த்தைகளின் துணையில்லாமலும் உங்களுடைய காதலை வெளிப்படுத்த உதவும் அற்புதமான வழிமுறையாகும். அவருடைய வீட்டில் ஒரு குறிப்பை விட்டு விடுங்கள், இவ்வாறு ஒவ்வொரு குறிப்பும் மற்றொரு இடத்திற்கு வழி நடத்தும் வகையில் குறிப்புகளை தயார் செய்யுங்கள். இந்த வழிமுறையை கடைசியாக ஒரு பர்ஸில் பேப்பர் வைத்து முடிக்கவும். அது ஆச்சரியப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும்.

பொருட்களை பயன்படுத்துங்கள்
ஒரு செயற்கையான அணிகலனை 'காதல்' என்ற வார்த்தையை பொறித்து பரிசளிப்பது மற்றுமொரு வகையில் காதலை வெளிப்படுத்தும் முறையாகும். இதற்காக பிரேஸ்லெட்கள், மோதிரங்கள் மற்றும் பதக்கங்களை நீங்கள் பரிசsளிக்கலாம். உங்களுடைய காதலை உணர்வுடன் வெளிப்படுத்த வகை செய்யும் அற்புதமான வழிமுறையாக இது இருக்கும்.

முதல் சந்திப்பிடம்
ஒவ்வொரு ஜோடிக்கும் மிகவும் முக்கியமான இடமாக இருப்பது அவர்களுடைய முதல் சந்திப்பிடம் தான். அதிகமான காதலுணர்வு மற்றும் உண்மையான காதல் வெளிப்பாடு ஆகியவற்றைக் தன்னிடத்தில் கொண்டு, கைகளை கோர்த்துக் கொண்டு செல்லும் இடங்களில் முதல் சந்திப்பிடத்தைத் தவிர வேறொன்றம் இல்லை.

மணலில் எழுதுதல்
அவருடன் காதலை கழிக்க ஏற்ற இடத்தை 'உருவாக்குவது' சிறந்த யோசனையாகத் தோன்றுகிறதா? அவரை ஒரு கடலோர பகுதிக்கு அழைத்துச் சென்று, கடற்கரை மணலில் உங்களுடைய காதல் செய்தியை எழுதிக் காட்டி ஆச்சரியப்படுத்துங்கள். நீங்களிருவரும் இருக்கும்படியான புகைப்படங்களை, அந்த மணலில் உள்ள காதல் செய்தியுடன் சேர்த்து எடுத்துக் கொண்டு, வீட்டில் ஃபிரேம் போட்டு மாட்டுங்கள். இந்த ஒரு விஷயம் நீங்களிருவரும் வரப் போகும் நாட்களில் செலவிட இருக்கும் மகிழ்ச்சியான பொழுதுகளை அழகுபடுத்தும்.

பாடல் மூலம் வெளிப்படுத்துங்கள்
நீங்கள் நன்றாக பாடுவீர்கள் என்றால், உங்களுடைய ஆத்மார்த்தமான உணர்வுகளை பொது விழாக்களில் பாடல் மூலம் வெளிப்படுத்துங்கள். இது நம்முடைய உணர்வுகளை பொது இடங்களில் வைத்து வெளிப்படுத்த கிடைக்கும் அற்புதமான வழிமுறையாகும். காதலுணர்வுடைய பாடல் ஒன்றiயோ அல்லது பல பாடல்கள் சேர்ந்த ஒரு பாடலையோ பாடுங்கள். அந்த பாடலுடன் உங்களுடைய உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
