Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்கள் நண்பர்கள் உங்களின் நட்பை குலைக்க முனைந்து விட்டார்கள் என்பதை அறியும் அறிகுறிகள்..!
"முஸ்தபா முஸ்தபா ... மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்" அப்படின்னு பாடுவதும் அதைக் கேட்பதும் நல்லாதாங்க இருக்கு. ஆனால் சில சமயம் நம்ம நெருங்கிய நண்பர்கள் கூட முதுகில் குத்துபவர்களாக இருக்கலாம் குறிப்பாக காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில். எப்போதும் நன்றாகப் போய் கொண்டிருக்கிற நட்பினிடையே திடீரென்று விரிசல் ஏற்பட்டால், நீங்கள் நினைத்ததை விட உங்கள் நண்பர்கள் அதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்களா என உங்களையே நீங்கள் ஒருமுறை கேட்டுக் கொள்வது நல்லது.
நல்ல நண்பர்களையும் எதிரிகளாக மாற்றி கடும் துன்பத்தை தரும் ஐந்து சூழ்நிலைகள் இதோ... குறிப்பாக இவை ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பொருந்தும்.

நீங்க அந்த வேலைக்குச் சரிப்பட்டு வரமாட்டீங்கன்னு உங்கள் நண்பர்கள் நினைக்கிறார்கள்
இந்த சூழ்நிலையை நீங்கள் எதிர்கொண்டதுண்டா? நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒருவருடன் டேட்டிங் போகிறீர்கள் ஆனால் உங்கள் டேட்டிங் கொடுமையாக உள்ளது என உங்கள் நண்பர்கள் நினைக்கிறார்களா? இதுப்போன்ற தருணங்களில் தவறான ஒரு தேர்வை செய்து விட்டோமோ என உங்களுக்குத் தோன்றும். ஆனால் நீங்கள் நன்கு யோசித்துப் பார்த்தால் மிகப்பொருத்தமாக உள்ள ஒரு உறவை கொடுமையான ஒன்றாக மாற்றுவது வெகு சுலபம் என்று புரியும்.

உங்கள் நண்பர்கள் உங்களை கேவலமாகப் பேசுகிறார்கள்
நீங்கள் டேட்டிங்கில் இருக்கும் போது உங்கள் நண்பர்கள் உங்களை மரியாதைக் குறைவாகப் பேசுகிறார்களா? உண்மையில் உங்களை தூற்றுவதை விட்டுவிட்டு நீங்கள் டேட்டிங் செய்யும் ஒருவர் உங்களை நன்கு புரிந்து அன்பில் விழ வைக்க அவர்கள் உங்களுக்கு உதவ வேண்டும். உங்கள் காதலியுடன் இருக்கும் போது உங்களை அவர்கள் கேவலப்படுத்தினால் அவர்கள் பொறாமையிலோ அல்லது அதிர்ச்சியிலோ இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கடந்த கால உறவுகளைப் பற்றிப் பேசுவது
பழைய உறவுகள் எப்போதுமே சற்று உணர்ச்சிபூர்வமானவை. நீங்கள் உங்கள் காதலி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் போது, உங்கள் நண்பர்கள் தொடர்ந்து உங்களுடைய பழைய உறவுகளை நினைவுப்படுத்தவோ அல்லது அவர்களுடன் நீங்கள் நடந்து கொண்டதைப் பற்றியோ பேசி சிரிக்கிறார்களா?

உங்கள் காதலியை அவர்கள் அவமதிப்பார்கள்
நண்பர்களுடன் கூடியுள்ள நிலையில் உங்கள் புதிய காதலியை அவர்கள் கண்டு கொள்ளாமலோ அல்லது அவரை அவமதிக்கும் விதத்தில் நடக்கிறார்கள் என்றோ நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு உணர நேர்ந்தால், அது உண்மையாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம். அவர்கள் உங்கள் காதலியை அவமதிப்பது ஒரு காதலனாக உங்களைப் பெருமளவில் பாதிக்கும்.

உங்கள் காதலியிடம் வழியும் நண்பர்கள்
நண்பர்களில் சிலபேர் கெட்டவங்க இன்னும் சில பேர் ரொம்பக் கெட்டவங்க. யார் உங்கள் காதலி கூட உங்களுக்குத் தெரியாமல் சுற்றுகிறார்களோ அல்லது அவங்க கிட்ட வழியுரான்களோ அவங்க ரொம்பக் கெட்டப் பசங்க. நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் காதலிக்கு போன் செய்து மணிக்கணக்கில் பேசவோ அலல்து உங்களை அவள் முன்னால் தரக்குறைவாக பேசவோ ஒருவன் செய்தால், அவன் நட்பை முறித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications
