Latest Updates
-
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
பிரபல தம்பதிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய உறவுப் பாடங்கள்!!!
உறவைப் பற்றிய பாடங்களைப் பிற தம்பதிகளை பார்த்து நாம் கற்றுக் கொள்ளலாம். சரி அப்படி பிறரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஏன் உங்கள் மனதிற்கு பிடித்த நட்சத்திர தம்பதியை பார்த்து கற்றுக் கொள்ள கூடாது? நட்சத்திரங்களின் காதல் வாழ்க்கை அனைவராலும் கவனிக்கப்படுகிறது. சொல்லப்போனால் அவர்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் ஊடகங்களே வெட்ட வெளிச்சமாக்கி விடுகின்றன. அதனால் தான் நட்சத்திர ஜோடிகளை பார்த்து உறவுகளைப் பற்றிய பாடங்களைப் கற்றுக் கொள்வது சுலபமாக இருக்கிறது.
இதுப்போன்று வேறு: திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!!
ஏன் உறவுகளைப் பற்றி நட்சத்திர ஜோடிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என நீங்கள் வியக்கலாம்? வானிலையை விட நட்சத்திர ஜோடிகளின் உறவுகளின் நிலை தான் வேகமாக மாறி வருகிறது. ஆனால் புகழுடன் இருப்பது சுலபமான விஷயம் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையில் தங்களது உறவு மற்றும் புகழ் என இரண்டையும் கையாளுவது லேசு பட்ட காரியம் அல்ல. அதனால் அவர்களை பார்த்து வியப்பது இயற்கையே.
தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்!!!
தங்களுக்குள்ள வேலைப்பளு பற்றும் ஊடக வெளிச்சத்திற்கு மத்தியிலும் சில தம்பதிகள் தங்களது உறவை வலுவாக்கியுள்ளனர். அப்படி இல்லாதவர்கள், உறவுகளில் என்ன செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார்கள். நட்சத்திரங்களிடம் இருந்து நேர்மறை மற்றும் எதிர்மறையான உறவுகளைப் பற்றி நாம் கற்றுக் கொள்ளலாம். அப்படிப்பட்ட சில நட்சத்திரங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டுவார்கள். சில நட்சத்திர தம்பதிகள் செய்யும் தவறுகளில் இருந்து கூட நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.
இங்கு புகழ்பெற்ற சில பிரபல தம்பதிகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உறவுகளைப் பற்றிய சில பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்க்கலாம், வாருங்கள்...

காதல் வாழ்க்கையை அந்தரமாக வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் காதல் வாழ்க்கை அந்தரங்கமானது. அதனால் அதனை அமைதியாக யாருக்கும் அதிகமாக தெரியாத படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு உதாரணமாக விளங்கும் நட்சத்திர ஜோடி தான் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன். அதனால் தான் என்னவோ அவர்களின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்துள்ளது.

வேலைப்பளு ஒரு சாக்கு கிடையாது
ஹாலிவுட் நடிகரும், விக்டோரியாவின் சூடான சீக்ரெட் மாடல் தம்பதிகளை விட வேலைப்பளு யாருக்கு இருக்க முடியும்? அப்படி இருந்தும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்க தவறுவதில்லை. அவர்கள் ஒன்றாக பயணித்து அவர்களின் வேலைக்கு பங்களித்து வருகின்றனர்.

உங்கள் துணையை ஏமாற்றாதீர்கள்
முன்பு தன் காதலுக்கு துரோகம் இழைக்கும் வகையில் பெரிய தவறை புரிந்தார் கிரிஸ்டன் ஸ்டூவர்ட். பலமுறை மன்னித்தும் கூட இது தொடர்ந்ததால், ராபர்ட் பாட்டின்சன் அவரை ஒரு வருடம் கழித்து தூக்கி எறிந்தார். ஏமாற்றுபவரை யார் தான் மன்னிப்பார்கள்.

திருமணத்திற்கு அவசரப்படாதீர்கள்
திருமணம் செய்ய போதிய நேரத்தை எடுத்துக் கொண்டால், உங்கள் உறவு நிலையானதாக அமையும். நிச்சயம் ஆவதற்கு முன்பாக கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம்ஸ் அவர்கள் 10 ஆண்டு காலமாக காதலித்தனர். அந்த அரச பரம்பரை ஜோடி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள 10 ஆண்டு காலம் எடுத்துக் கொண்டனர். அதனால் தான் திருமணம் புரிந்து இப்போது சந்தோஷமாக வாழ்கின்றனர்.

ஒன்று சேர்வது-பிரிவது என்ற உறவு வேலைக்கு ஆகாது
போதை, PDA மற்றும் சரிவு நிகழ்வு; இப்படி தான் இருந்தது ரிஹானா மற்றும் க்ரிஸ் பிரவுன் அவர்களின் உறவு. இன்று ஒழுங்காக இருந்து நாளை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறினால் அது உங்களை எங்கேயும் எடுத்துச் செல்லாது. மாறாக அது உங்களை தனிமைப்படுத்திவிடும்.

உறவுகளின் இணைப்பு குழந்தைகள்
பல தம்பதிகள் குழந்தை வளர்க்கும் பொறுப்புகளை எண்ணி பயப்படுவார்கள். காரணம் அவர்கள் பிஸியாக இருப்பதே. ஆனால் ப்ராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோலி, அவர்களின் பிஸியான வாழ்க்கையிலும் கூட 6 குழந்தைகளை வளர்க்கிறார்கள். மேலும் அதிக காதலுடனும் இருக்கிறார்கள்.

இரண்டாம் திருமணம் ஒத்து வரும்
தோற்று போன திருமண வாழ்க்கையால் ஏற்பட்டுள்ள வடு எப்போதுமே ஆறாது என்ற தவறான கருத்து பலரிடம் நிலவுகிறது. பல காரணங்களால் ஒரு திருமணம் தோல்வியில் முடியலாம். சரியான காரணத்தினால் உங்கள் திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு, மற்றொரு காதலில் விழுந்தால், இரண்டாம் முறை நீங்கள் ஏன் அதிர்ஷ்டசாலியாக இருக்க கூடாது?

கெட்ட நேரத்தை வெல்லலாம்
நல்ல நேரமும் கெட்ட நேரமும் ஒவ்வொரு உறவிலும் ஒரு அங்கமாகும். 15 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் டேவிட் மற்றும் விக்டோரியா பெக்கம் பல மன கசப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனினும் அவர்கள் இன்னமும் ஒன்றாக தான் இருக்கிறார்கள். அவர்கள் உறவும் வலுவாகத் தான் உள்ளது.

காதலுக்கு வயது தடை இல்லை
உங்களை விட 5 வயது மூத்தவரின் மீது நீங்கள் காதல் வயப்படுவது சாத்தியமே. வயது வித்தியாசம் போன்ற சின்ன விஷயங்களை எல்லாம் வென்று விடும் காதல். ஏன், சயீஃப் மற்றும் கரீனாவிற்கு 10 வருடத்திற்கு மேல் வித்தியாசம் இல்லையா என்ன. ஆனாலும் கூட சந்தோஷமாக இருக்கும் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக அவர்கள் விளங்குகிறார்கள் அல்லவா?

காதலுக்கு அடிப்படை மரியாதை
காதல் என்பது உங்களை குடித்து விடும் ஒரு மனக்கிளர்ச்சியாகும். அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதை போல் நீங்களும் நடந்து கொண்டால், உங்கள் உறவு நீடித்து நிலைக்கும்.



Click it and Unblock the Notifications