Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
ஒரு உண்மையான ஆண் தான் விரும்பும் பெண்ணை ஏன் ஏமாற்ற மாட்டான் என்பதற்கான காரணங்கள்!!!
தோற்றத்தில் உண்மையாக இல்லாத ஆண்கள் பலரைப் பார்த்திருப்பீர்கள். இதற்க்கான காரணங்கள் பல உண்டு. பெரும்பாலான ஆண்கள் தங்களை உத்தம சீலர்களாக வெளியில் காட்டி வீரநடைப் போட்டுக் கொண்டு பெண்கள் விரும்பும் வண்ணம் திரிவதுண்டு. எனினும் உண்மை வேறு விதமாக உள்ளது. யோக்கியமானவனாக இருப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.
உறவில் முக்கிய அங்கமான நம்பிக்கையை எல்லா ஆண்களிடமும் எதிர்பார்த்து விடமுடியாது. ஆண்கள் ஏமாற்றுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கப் போவதில்லை. நாம் சில ஆண்கள் ஏன் ஏமாற்றுவதில்லை என்பதை மட்டும் இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
உண்மையான ஆண் மகன்களிடம் இருக்கும் 8 சிறந்த குணங்கள்!!!
இந்த பகுதியில் ஆண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது ஏன் ஏமாற்றாமல் இருக்கிறார்கள் என பார்க்கப் போகும் அதே வேளையில் ஒரு யோக்கியமான உண்மையான ஆணின் அம்சங்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம். தான் விரும்பும் பெண்ணை ஏன் உண்மையான ஆண்மகன் ஏமாற்றமாட்டான் என்பதையும், ஒரு பெண் அவனுடன் ஏன் சேர்ந்து செல்லலாம் என்பதையும் நாம் இப்போது பார்க்கலாம்.
நம்பிக்கை அவசியமற்றுப்போய் விட்ட பெயரளவிற்கு மட்டுமே இருக்கிற இந்த உலகில், பெண்கள் ஏன் உண்மையான தான் மகிழ்ச்சிக்குக் காரணமான ஆடவனை தேர்வு செய்கிறார்கள் என்பதையும் இப்பகுதியில் காணலாம்.

உண்மையான ஆடவன் தன்னுடையவளுக்கு உண்மையான மரியாதையை அளிக்கிறான்
மரியாதை என்றால் அது நாம் சாதாரணமாகப் பார்ப்பதை விட பன்மடங்கு உயர்ந்தது. உண்மையான மனிதன் தான் சண்டையிடுவதற்கு உகந்த சரியான காரணங்களைக் கொண்டிருப்பான். உறவில் கொடுக்கல் வாங்கல்கள் பரஸ்பரம் உண்டு. ஒரு உண்மையான ஆடவன் தன் பெண் மட்டுமின்றி புதுவக அனைத்து பெண்களிடமும் மரியாதை கொண்டிருப்பான்.

உணர்வுகளில் கட்டுப்பாடு கொண்டவர்கள்
ஒரு யோக்கியமான ஆண் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதால் அவனுடன் வாழ்வது பெண்களுக்கு உகந்ததாக இருக்கும். முட்டாள்தனமான உணர்வுகளுக்கு அவன் இடமளிப்பதில்லை. இந்த ஒரு முக்கியமான காரணம் அவன் உங்களை ஏமாற்ற மாட்டான் என்பதற்கு அறிகுறி.

உங்கள் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள மாட்டார்கள்
இது பெண்களுக்குத் தரும் மரியாதையுடன் நேரடியாகத் தொடர்புடையது. உண்மையான ஆடவன் தங்கள் பெண்ணின் மீதுள்ள மதிப்பை காட்ட எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள். பெண்ணின் பாதக சூழ்நிலைகளை எப்போதும் தனக்கு சாதகமாக ஆக்க மாட்டார்கள்.

அவர்களுக்குத் தேவையென்றால் மட்டும் உங்களுடன் சுற்ற நினைக்க மாட்டார்கள்
அவர்கள் எப்போதும் ஒரு பெண்ணுடன் செல்ல வேண்டுமென்றால், அதன் பின் ஒரு உண்மையான காரணம் இருக்கும். அதில் எந்த சுயநலமும் இருக்காது. இது சாதாரண மனிதர்களை ஒப்பிடுகையில் ஒரு வித்தியாசமான அம்சம்.

சும்மா ஒரு கண நேர சுகத்தை அவர்கள் விரும்புவதில்லை
நீங்கள் உண்மையான ஆணை நன்றாக நம்பலாம். ஏனெனில் அவர்கள் சிறிய விஷயங்களுக்காக உங்களை அணுகமாட்டார்.

உங்களைக் காயப்படுத்தும் எந்த ஒரு காரியத்தையும் அவன் செய்யமாட்டான்
உங்களைக் காயப்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் உண்மையான ஆண்மகன் செய்யமாட்டான். ஒரு சிறிய விஷயம் கூட பெரும் சோகமாக முடியலாம். எனவே ஏமாற்றுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை.

வாழ்வில் எது முக்கியம் என்று அவர்கள் அறிவார்கள்
உண்மையான ஆண்மகன் தான் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து வைத்திருப்பான். திடீரென்று ஒரு நாள் விழித்துக் கொண்டு வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என நினைத்து உறவுகளை கழற்றி விடுவதில்லை.

அவர்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள்
அவர்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து வைத்திருப்பதோடு சரியான முடிவுகளையும் எடுப்பார்கள்.



Click it and Unblock the Notifications