Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பசங்களை மூட் அவுட்டாக்கும் பெண்கள் அறிந்திராத 8 விஷயங்கள்!!!
பெண்களைப் போலவே ஆண்களையும் மூட் அவுட் ஆக்கச் செய்யும் ஆனால் பெண்களுக்குத் தெரியாத விஷயங்கள் உண்டு! பெண்களே நீங்கள் உங்களை நறுமணத்துடன் வைத்துக் கொள்வதும் பழைய நண்பர்கள் பற்றி சதா பேசுவதும் மற்றவர்களைக் கவர உதவும் என நினைக்கிறீர்களா?
அவர்களை வெறுப்படையச் செய்யும் உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. எனவே அவற்றில் சில முக்கியமான மற்றும் இதுவரை நீங்கள் தெரிந்திராதவற்றை இப்போது பார்ப்போமா?

பெரிய நகங்கள்
பெரிய நகம் வளர்த்துக் கொள்வது உங்களுக்கு வேண்டுமென்றால் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் அது ஆண்களுக்குப் பெரிய தலைவலியாகத் தெரியும். அவர்கள் இயற்கையானவற்றை விரும்புவர் ஆனால் உங்கள் பெரிய நகங்கள் அவர்களை பதம் பார்ப்பதாக பல சமயம் அமையும். எனவே உங்கள் நகங்களை சிறியதாகவும், எளிமையாகவும் வைத்து கவனமுடன் இருங்கள் பெண்களே!

ஓவர் செண்ட் அடிக்காதீங்க...
நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் உங்களுக்கு பிடித்திருக்கலாம். ஆனால் நீங்கள் உபயோகிக்கும் அதிக அளவு செண்ட் உங்கள் துணைவன் உங்கள் வீட்டை விட்டு சென்ற பின்பும் அவன் மீது உங்கள் சென்ட் வாசனை இருக்குமானால், அது அவனுக்கு நல்லதல்ல. செண்ட் அடிப்பதில் தப்பில்லை பெண்களே, ஆனால் செண்ட்ல குளிக்கிறது தப்பு. அதை சரியான அளவு உபயோகித்தால், உங்கள் நண்பன் அதை பாராட்டுவான். இது உங்களுக்குத் தெரியாத பசங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் என்று நிச்சயம் சொல்ல முடியும்.

அதிகமான தவிப்பு
பசங்களுக்கு பொண்ணுங்க கிட்ட பிடிக்காத இன்னொரு விஷயம் அவர்கள் அதிகப்படியான படபடப்பையும், தவிப்பையும் வெளிப்படுத்துவது. எப்போது பார்த்தாலும் அவனைக் கட்டிக் கொண்டு அவன் இல்லாமல் வாழ முடியாது என்பதைப் போல் தவிப்பை வெளிப்படுத்துவது கொஞ்சம் அதிகமான விஷயம் தான். பசங்க எப்பவும் சுதந்திரமான சுய சார்புடைய தேவைப்பட்டால் மட்டுமே அவனை நாடுகிற பெண்களையே விரும்புவார்கள். அதனால் பெண்களே உங்க நண்பனோட ரொம்ப ஒட்டாதீங்க..

ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க
ஒன்றுமே தெரியாதது போல் நடிப்பது அழகாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பசங்களுக்கு எப்பவுமே கருத்துகளை உடைய புத்திசாலித்தனமான பெண்களைத் தான் பிடிக்கும். உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் அதை பேச முயலுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள்.

உங்கள் பழைய நண்பனைப் பற்றி பேசுவது
பெண்கள் தங்கள் பழைய நண்பர்களைப் பற்றி பேசுவது ஆண்களுக்கு வெறுப்பைத் தான் தரும். நீங்கள் இன்னும் உங்கள் பழைய நண்பனை விரும்பிக் கொண்டிருந்தால், மற்றொரு நண்பனுடன் பழகுவது சரியான ஒன்றாக இருக்காது. நீங்கள் உங்கள் பழைய நண்பனைப் பற்றி அதிகம் பேச நேர்ந்தால், ஒருமுறை அதற்கான காரணத்தை யோசித்துப் பார்ப்பது நல்லது. இந்த ஒரு விஷயமும் பிடிக்காத ஒன்று.

முரட்டு சுபாவம்
அடுத்து நாம் பார்க்க இருப்பது உங்களுடைய முரட்டுதனத்தையும், உங்கள் எண்ணத்தையும் பற்றியது. பொதுவாக நல்ல எண்ணமில்லாத அல்லது முரட்டு சுபாவமுடைய பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை. எல்லா சமயங்களிலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஏனென்றால் நமக்கு சில கெட்ட நாட்களும் கூட வரும். அந்த மாதிரி கெட்ட தருணங்கள் அதிகமாக வரும் போது, அதன் மீதான வெறுப்பை மற்றவர் மீது காட்டாதீர்கள்.

கிசுகிசு
நீங்கள் அடுத்த பெண்ணைப் பற்றி தவறாகப் பேசினால், உங்கள் ஆடவனுக்கு அது நல்லதாகப் படாது என்பதை உணருங்கள். நீங்கள் சொல்வது உண்மையே ஆனாலும், உங்களை அது குறைத்து மதிப்பிட வைக்கும். அவன் உங்களைத் தவறாக புரிந்து கொள்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் இல்லையா? அவன் உங்களை அன்புடையவளாக, அருமையானவளாக பார்ப்பதையே நீங்கள் விரும்புவீர்கள்.

அவனை மாற்ற முயல்வது
ஒரு ஆண் தன்னுடைய இயல்பை ஒரு பெண் விரும்ப வேண்டும் என விரும்புவான். நீங்கள் அவனுடன் பழக முடிவு செய்து அவனை மாற்ற முயன்றால், அவனுக்கு தான் உங்களுக்குப் பொருத்தமானவனில்லை என்கிற நினைப்பு வரலாம். இதன் மூலம் நீங்கள் அவனுடைய மதிப்பை பாதிப்பிற்குள்ளாக்குவீர்கள். உங்களுக்கு அவனைப் பிடிக்கவில்லையென்றால் அவனை மாற்ற முயல்வதை விட்டுவிட்டு உங்களுக்குப் பொருத்தமானவனைத் தேடுங்கள்.



Click it and Unblock the Notifications
