Latest Updates
-
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது!
காதலரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட 10 ரொமான்டிக்கான பரிசுகள்!!!
நாம் காதல் கொண்டிருக்கும் நபருடைய வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் ஒரு சிறப்பான நாளாக உருவாக்க நினைத்தாலும், அவை எல்லாவற்றையும் விட சிறப்பான விஷயங்கள் பலவும் உள்ளன. இந்த விஷயத்தைப் பொறுத்த வரையிலும் பெண்கள் தங்களுடைய காதலர்கள் எப்பொழுதும் தங்களைப் போற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பது சகஜம் தான்.
ஆனால், ஆண்களும் இதே போல தங்களையும் காதலிகள் போற்ற வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என்று எண்ணினால் அது தவறான பதில்! ஆண்களும் கூட ஒரு குழந்தையைப் போல மற்றவர்கள் தங்களை விரும்ப வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே, உங்களுடைய காதலர்களை ரொமான்டிக்கான பரிசுகளைக் கொடுத்து வசப்படுத்துங்கள்.

செய்தி
முழுவதும் காதல் பற்றி வார்த்தைகள் மற்றும் செய்திகளை கொண்டிருக்கும் வகையில் ஒரு ஜாடியை உருவாக்குங்கள். உங்களுடைய பெயரையும், காதலருடைய பெயரையும், செயற்கைத்தனம் இல்லாமல் அதில் பதித்திடுங்கள். இந்த பரிசை காதலரிடம் கொடுத்து, அவர் தினமும் வேலைக்கு செல்லும் முன்னர் இந்த சிறப்பான செய்தியை படித்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளுங்கள. இதன் மூலம் உங்களைப் பற்றி அவர் சிறப்பான எண்ணங்களை கொண்டு விடவும், உங்களுடனான உறவை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முயற்சிப்பார்.

ஆச்சரியமான பிறந்த நாள்
நீங்கள் எவ்வளவு தான் பெரியவராக வளர்ந்திருந்தாலும், நண்பர்கள் மற்றும் விருப்பமானவர்களுடன் பிறந்த நாளை ஒரு குழந்தையைப் போல கொண்டாட வேண்டும் என்று விரும்புவது இயற்கை தான். அந்த வகையில் திடீரென்று அவருக்கே தெரியாமல், ஆச்சரியமான வகையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள். அதில் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை கலந்து கொள்ளச் செய்து மறக்க இயலாத அனுபவமாக பரிசளியுங்கள்.

அற்புத உணவு
இந்தியாவைப் பொறுத்த வரையில், 'ஒரு மனிதனுடைய இதயத்தை அடைவதற்கான வழி வயிற்றிலிருந்து தொடங்குகிறது' என்பது பொய்யான பழமொழியல்ல. எனவே, உங்களவரை வீட்டில் உபசரித்து அவருடைய உள்ளத்தை கவர முயற்சி செய்யுங்கள். அப்போது அவருக்குப் பிடித்தமான உணவுகள் மற்றும் பதார்த்தங்களை காலையிலிருந்து, மாலை வரை விருந்தளியுங்கள். சில அற்புதமான உணவுகளையும், புதிய கைவண்ணங்களையும் முயற்சி செய்து அவரை ஆச்சரியப்படுத்துங்கள்.

அவரை ஏன் காதலிக்கிறேன்?
இது போன்ற சில வாழ்த்து அட்டைகளை நீங்கள் கடைகளில் கண்டிருக்கலாம். ஆனால், அவற்றை வாங்க வேண்டாம். மாறாக, சொந்தமாக 100 அல்லது 50 காரணங்களை நீங்களாகவே எழுதுங்கள். அவருடைய நல்ல குணங்கள் மற்றும் சாதனைகளை எழுதுவதன் மூலம், அவரை நீங்கள் ஏன் காதலிக்கிறீர்கள் என்று உணர்த்த முடியும். ரெடிமேட் அட்டைகளை விட, இயற்கையானதாக மற்றும் கையால் எழுதப்பட்ட செய்திகளை கொண்ட அட்டைகள் மாயாஜாலங்களை செய்யக் கூடியனவாகும்.

அவரை சந்தித்த முதல் இடம்
உங்களவரின் கண்களைச் சுற்றி ஒரு துணியைக் கட்டி விடுங்கள். அவரை முதன்முதலில் சந்தித்த இடத்திற்கு, அந்த நிலையிலேயே அழைத்துச் செல்லுங்கள். உங்கள் இருவருக்குமே அது ஒரு மெய்மறக்கச் செய்யும் காதல் அனுபவமாக இருக்கும். அந்த இடத்தில் அரும்பிய காதலின் நினைவுகளை அசை போடவும் உதவும்.

சிடி
நீங்கள் இருவரும் இருக்கும் ஒரு சிடியை அவருக்கு பரிசாக கொடுக்கவும். அதில் எடிட்டிங் செய்து மென்மையான இசையையோ அல்லது ரொமான்டிக்கான எண்கைளயோ பின்னணியில் கொடுத்து, ஸ்பெஷல் எஃபெக்ட்-களை கொடுத்து, பிறந்த நாளன்று இரவு சரியாக 12-மணிக்கு பரிசாக கொடுக்கவும். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்துக் கொள்ளக்கூடிய பரிசாக இது இருக்கும். உங்களவரின் நண்பர்கள் மற்றும் விருப்பமானவர்கள், அவரைப்பற்றிய குணங்கள் மற்றும் விளையாட்டுத் தனமான குறும்புகளைப் பற்றி சொல்லக் கூடிய வகையில் ஒரு வீடியோவை தயாரித்தும் கூட சிடி-யில் கொடுக்கலாம்

டூர்
ஒரு குறுகிய கால சுற்றுலாவாக அருகிலுள்ள மலைவாழிடத்திற்கு உங்களுடைய காதலர் அல்லது நீங்கள் இருவரும் செல்லும் பயணத்தை பரிசளியுங்கள். அந்த இடம் ஒருவரையொருவர் நன்றாக உணர்ந்து நடந்து கொள்ளக் கூடிய ரொமான்டிக்கான இடமாக இருப்பது நல்லது. இந்த பரிசின் மூலம் சிறிதளவு ஓய்வும் உங்களுக்குக் கிடைக்கும். காலையிலிருந்து இரவு வரையிலும் வேலை செய்து களைத்து வரும், உங்களுடைய காதலர் இந்த ஓய்வை பெரிதும் வரவேற்பார்.

நைட் ஷோ
பெரும்பாலான பெண்கள் விரும்பாத நேரங்களில் சினிமாவிற்கு சென்று பார்ப்பதை ஆண்கள் வழக்கமாக கொண்டிருப்பது சகஜமான உண்மை தான். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான டேட்டிங்கின் போது, அவருக்கு பிடித்தமான திரைப்படங்களை இரவு முழுவதும் கூடவோ அல்லது தியேட்டருக்கு சென்று பார்க்கவோ வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றுமொரு மகோன்னதமான பரிசாக இருக்கும்.

இது என்னுடைய நாள்
இது அவருடைய பிறந்த நாள், எனவே அவரை அந்த நாளை முழுமையாக அனுபவிக்கச் செய்யுங்கள். அவர் எதைச் சொல்கிறாரோ அதையே செய்யுங்கள், அவர் பௌலிங் செல்ல வேண்டும் என்று விரும்பினால் அங்கு செல்லட்டும் அல்லது கிளப்பிங் வேண்டுமென்றால் அதை செய்யட்டும். அவருக்குப் பிடித்தமான உணவை, அவருக்கு பிடித்த உணவகத்தில் சாப்பிடச் சென்றால், அதை எண்ணி விவாதம் செய்யத் தேவையில்லை. ஏனெனில், இது அவருடைய நாள். எனவே, அந்த பிறந்த நாள் முழுவதும் அவர் சிறப்பான நாளாக எண்ணிப் பார்க்கும் வகையில் உணரச் செய்யுங்கள்.

பச்சை குத்திக் கொள்ளுதல்
அவருடைய பிறந்த நாளை இன்னும் ரொமான்டிக்காக மாற்ற உதவும் மற்றுமொரு அற்புதமான யோசனை இதுவாகும். அவருடைய பெயரையோ அல்லது இனிசியலையோ அல்லது உங்கள் இருவருடைய இனிசியலையோ உங்களுடைய உடலில் எழுதி விட்டு, பிறந்த நாள் கொண்டாடும் நடு இரவு வேளையில் பச்சை குத்திய இடத்தை அவரிடம் காட்டி ஆச்சரியப்படுத்துங்கள். முன் எப்போதும் இல்லாத வகையில், அவர் மிகவும் சிறப்பானவராக உணர்வதுடன், மேலும் அதிகமான காதலை உங்களிடம் வெளிப்படுத்துவார்.



Click it and Unblock the Notifications