Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
உங்கள் காதலன் பொய் சொல்கிறான் என்பதை கண்டுபிடிக்க சில ட்ரிக்ஸ்...
உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்றால் அது பொய் சொல்வது தான். பொதுவாக காதல் செய்யும் போது ஆண்கள் நிறைய பொய் சொல்வார்கள். ஆனால் பெண்களால் காதலன் எப்போதும் பொய் சொல்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதன் காரணமாகவே பல காதலர்கள் காதலை முறித்துக் கொண்டு கஷ்டப்படுகின்றனர்.
முதலில் காதல் செய்யும் போது ஒருவர் பொய் சொன்னால், அதற்கான காரணத்தை அமைதியாக கேட்டுத் தெரிந்து கொண்டு, பின் எதையும் முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக காதலில் ஆண்கள் அதிகம் பொய் சொல்வது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் சில நேரங்களில் அவர்கள் பொய் சொல்வதற்கு ஒரு காரணம், காதலி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இருக்கும். அதிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் பல ஆண்கள் பொய் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு உண்மையை பேசும் ஆண்களைத் தான் பிடிக்கும். அதற்காக அரிச்சந்திரன் போன்று பொய் சொல்லவேக் கூடாது என்பதில்லை, சொல்ல வேண்டியது தான். ஆனால் எந்நேரமும் பொய் சொன்னால், இறுதியில் பிரிவைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆகவே அப்படி பலமுறை உங்கள் காதலனிடம் எச்சரித்தும், உங்கள் காதலன் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் என்பதை கண்டுப்பிடிக்க சில வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!
* ஆண்கள் பொய் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள். ஆகவே அப்படி நீங்கள் கேள்வி கேட்கும் போது, உங்கள் காதலன் உங்கள் கண்களைப் பார்த்து பேசாவிட்டால், அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.
* காதலன் உங்களிடம் பொய் சொன்னால், முதலில் அவரது செல்போனை உங்களிடம் இருந்து மறைந்து வைப்பார்கள். மேலும் கேட்டாலும், அதனைக் கொடுக்காமல் கவனத்தை திசைத்திருப்புவார்கள்.
* எப்போதும் சாதாரணமாக பேசும் காதலன், திடீரென்று அளவுக்கு அதிகமாக மற்றும் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டால், எதையோ மறைக்கிறார் என்று அர்த்தம். மேலும் அது என்னவென்று கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ஏதோ பேசுவார்கள்.
* போனில் பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஒரு கேள்வியை கேட்டு, அதற்கு சரியாக பதிலளிக்காமல், போனை அணைத்துவிட்டு, நீண்ட நேரம் கழித்து பதிலளித்தால், அதுவும் பொய் சொல்வதற்கு தயாராகிறார்கள் என்று அர்த்தம்.
மேற்கூறியவாறெல்லாம் நடந்தால், அவரசப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல், உங்கள் காதலனிடம் வெளிப்படையாக பேசி காரணத்தை தெரிந்து கொண்டு பின் முடிவெடுங்கள். குறிப்பாக இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும்.



Click it and Unblock the Notifications