Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த குவைத் தம்பதிகள்.. காரணம் என்ன தெரியுமா?
திருமணம் சிலருக்கு சொர்க்கமாகவும், சிலருக்கு நரகமாகவும் அமைந்து விடுகிறது.. பல ஆண்டுகள் காதலித்தாலும் திருமணமான சில ஆண்டுகளில் சண்டையிட்டுக் கொண்டு விவாகரத்து வாங்கி விட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிடுகின்றனர்.. அதிலும் சமீபகாலமாக விவகாரத்து செய்துக் கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது..
இது போலவே துபாயில் திருமண விழாவில் இருந்து வெளியேறும் போது மணமகன் மணமகளை அவமதித்ததால் கணவன்-மனைவி என்று அறிவிக்கப்பட்ட 3 நிமிடங்களில் அந்த ஜோடி விவாகரத்து செய்ததுக் கொண்டனர்.. காரணம் என்ன தெரியுமா? தெரிந்தால் இதற்கெல்லாமா விவாகரத்து செய்துக் கொள்ளுவாங்கனு நினைபீர்கள்..

ஒரு துபாய் தம்பதியினர் தங்களது உறவினர்களை அழைத்து மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தவுடன் அத்தம்பதியினர் அங்கிருந்து புறப்பட்டனர். அப்படி புறப்பட்ட போது மணமகள் கால் தடுமாறி கீழே விழுந்தார். அதற்கு மணமகன் என்ன சொன்னார் தெரியுமா? அவர் சென்ன வார்த்தை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணமகள் கீழே விழுந்தவுடன் கோபம் அடைந்த மணமகன் தனது மனைவியை பார்த்து ''முட்டாள் பார்த்து நடக்கமாட்டாயா'' என்று கேட்டார்.
இதை கேட்ட அந்த மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தன்னை தனது கணவர் முட்டாள் என்று கூறி அவமரியாதை செய்ததை மணமகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் நினைத்தாலே மிகவும் பயமாக இருக்கிறது என்று உடனே இந்த திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்தார்.
அதற்காகவும் நீதிபதியை அழைத்து, தனக்கு உடனே விவாகரத்து வேண்டும் என்று கேட்டார். உடனே நீதிபதியும் விவாகரத்து வழங்கி விட்டார். திருமணமாகி வெறும் 3 நிமிடத்தில் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டது. துபாயில் இதுதான் மிகவும் குறுகிய கால திருமணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.. அதில் இது தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒருவர், மரியாதை இல்லாத திருமணம் ஆரம்பத்திலிருந்தே தோல்வியடைந்தது" என்றும் மற்றொருவர் மேலும் "ஆரம்பத்தில் அவர் இப்படித்தான் செயல்படுகிறார் என்றால், அவரை விட்டுவிடுவது நல்லது." எனாரும் பதிவிட்டிருந்தனர்..
இதே போலவே 2004-ம் ஆண்டு இங்கிலாந்தில் திருமணமாகி 90 நிமிடத்தில் ஒரு தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டனர்.. 2019-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..



Click it and Unblock the Notifications