Latest Updates
-
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
ஐபிஎல் 2023: CSK கேப்டன் எம்எஸ் தோனிக்கும் RCB கேப்டன் விராட் கோலிக்கும் இடையே இப்படி ஒரு உறவு இருக்கா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கும், இந்நாள் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே உள்ள உறவை பற்றி நாம் அனைவரும் அறிவோம். சகோதரர்களாக நண்பர்களாக அனைவரும் வியந்து பார்க்கும் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருவரும் திகழ்ந்து வருகிறார்கள். இருவரும் பாட்னர்ஷிப் போட்டு களத்தில் ரன்களை குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
பெரும்பலான போட்டிகளில் இந்தியா அணியை வெற்றி பாதைக்கு அழைத்த சென்றதும் இவர்கள் இருவருமே. கிரிக்கெட் விளையாட்டிற்கு எப்படி பேட்டும் பந்து தேவைப்படுகிறோதோ, அதேபோல இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியும் கோலியும் தேவை என ரசிகரகள் கூறுவார்கள். அந்தளவிற்கு இருவரையும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.

2007 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியியன் கேப்டனாக பதவியேற்ற தோனி, தன் திறமையான ஆட்டத்தால் பல்வேறு போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதனால், இந்தியா முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். 2017ஆம் ஆண்டு தனது கேப்டன் பதவியை விட்டு விலகிய தோனி, கோலியை கேப்டனாக்க பரிந்துரைத்தார். 2017ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கோலி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வளம் வரும் கேப்டன் கோலி, தோனி மீது தனி மரியாதையும், அன்பும், பாசமும் கொண்டுள்ளார். சுமார் 12 ஆண்டு காலம் இருவரின் நட்பும் நீடித்து வருகிறது. களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேவும் இருவருக்கும் நல்ல உறவு உள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கோலி, "எனக்கும் தோனிக்கும் இடையிலான நட்பை யாராலும் பிரிக்க முடியாது. நான் கேப்டனாக இருக்கும் ஆரம்ப காலங்களில் அவரைப் போன்ற வீரர் என்னுடன் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்." என்று தெரிவித்திருந்தார்.
மகேந்திர சிங் தோனி, விராட் கோலி பார்ட்னர்ஷிப்பில் ஐந்து முறை இந்திய அணி வெற்றி பெற்றது. 2011 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி வாகையை சூடியது. அதில் புதுமுக வீரராக இருந்த விராட் கோலியும் களம் கண்டார். அன்று தொடங்கிய தோனி- கோலி நட்பு உறவு இன்று வரை அப்படியேவும் வலுவாகவும் இருக்கிறது.
டீ-20 ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியும், பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியின் கேப்டனாக விராட் கோலியும் விளையாடுகிறார்கள். வேறுவேறு டீம்-களில் விளையாடினாலும், எதிர் எதிராக போட்டி போட்டாலும், இருவரும் தங்கள் அணிக்காக தீவிரமாக விளையாடுவார்கள். விளையாட்டில் போட்டி, கோப்பை, ஆட்ட நாயகன் என பல விஷயங்கள் இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
தோனி மற்றும் கோலியின் உறவுக்கு அடித்தளமாக மாறியது, இருவரும் ஒன்றாக பேட்டிங்க் செய்த தருணங்கள். இருவரும் ஒன்றாக பேட்டிங்க் செய்யும்போது, விஷயங்களை எளிதாக புரிந்துகொண்டு இருவரும் இணைந்து விளையாடுவார்கள். அந்த புரிதல் இருவரிடமும் நன்றாக இருப்பதால் நிறைய போட்டிகளில் வெற்றி பெற முடிந்தது.
இருவரும் தங்களுக்காக ஆடாமல் அணிக்காக ஆடுவார்கள். அதனால், ஒருவர்மீது ஒருவருக்கு நம்பிக்கை வலுவாக இருக்கும். அந்த நம்பிக்கை விளையாட்டுக்கு வெளியேயும் உறவாக வளர்ந்தது. தனது ஆரம்ப நாட்களில் தோனி வழங்கிய ஆதரவு தனது வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்ததாக கோலி பல முறை கூறியிருக்கிறார். இன்று வரை தோனி வழங்கும் பல ஆலோசனைகளை கோலி கேட்டுவருகிறார்.



Click it and Unblock the Notifications

