Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பெண்கள் ஏன் மோசமான ஆண்களிடம் எளிதில் காதலில் விழுகிறார்கள்?அதற்கான உளவியல் காரணங்கள் என்ன தெரியுமா?
காதல் உறவு மகிழ்ச்சியாக இருக்க நாம் தேர்ந்தெடுக்கும் துணை எப்படிப்பட்டவர் என்பது மிகவும் முக்கியமானது.
காதல் உறவு மகிழ்ச்சியாக இருக்க நாம் தேர்ந்தெடுக்கும் துணை எப்படிப்பட்டவர் என்பது மிகவும் முக்கியமானது. தவறான ஒருவரை காதலிக்கும் போது உங்கள் காதல் வாழ்க்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்க்கையும் காவலிக்குரியதாகிவிடும். இந்த விஷயங்களில் தவறிழைப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பது துரதிர்ஷடவசமானது.

திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பெண்கள் பெரும்பாலும் ஆபத்தானவர்கள், அநாகரிகமானவர்கள் மற்றும் அவர்கள் பிரச்சனை என்று நன்கு தெரிந்தவர்களை எளிதில் காதலிக்கிறார்கள். திரைப்படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் கெட்டவர்களை ஏன் பெண்கள் எளிதில் காதலிக்கிறார்கள் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? அதற்கான உளவியல் காரணம் என்னவாக இருக்கும்? அதற்கான பதில்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்மை
ஆண்மையை வெளிப்படுத்தும் ஆண்களால் பலர் ஈர்க்கப்படுகிறார்கள், இது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். நீங்கள் கவனித்தால், திரைப்படங்களில் வில்லன்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட உடலைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்யும் விஷயங்கள் அனைத்தும் தைரியத்தின் வெளிப்பாடாக இருக்கும். நிஜ வாழ்க்கையில் நாம் அவர்களை நீண்ட காலத்திற்கு விரும்பவோ அல்லது அவர்களுடன் எதிர்காலத்தை பார்க்கவோ முடியாது. ஆனால் பெண்களுக்கு அது தாமதமாகத்தான் தெரிகிறது.

சுதந்திரமானவர்கள்
நம் நாட்டில் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் மற்றும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பது மிகபெரிய சமூக விவாதமாக இருக்கிறது. உண்மையில், பெண்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள், மேலும் மோசமான ஆண்கள் அந்த மனநிலையை வைத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் விரும்புவதை மற்றும் அவர்களுக்கு தேவையானதை அவர்கள் செய்கிறார்கள். பெண்களும் அதை விரும்புகிறார்கள், அதனால் அவர்களும் அந்த ஆண்களுடன் சுதந்திரமாக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

ஆபத்தின் மீதான ஆர்வம்
ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்தோ அல்லது மனிதரிடமிருந்தோ விலகி இருக்கும்படி தொடர்ந்து கூறும்போது அதனை செய்ய வேண்டும் என்ற உந்துதல் இயற்கையாகவே அனைவரிடமும் தோன்றும். இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல. ஒரு செயலை செய்ய வேண்டாம் என்று கூறும்போது தன்னிச்சையாக அதன்மீது ஈர்ப்பு அதிகரிக்கும். அதுதான் மோசமான ஆண்களை நோக்கி பெண்களை ஈர்க்கிறது.

பாதுகாப்பு
உண்மையில் உறவில் பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை ஆனால் உறவின் தொடக்கத்தில் பல பெண்கள் அதை விரும்புகிறார்கள். அந்த பாதுகாப்பு கவசம் விரைவில் உடைந்துவிடும் என்று அவர்களுக்குத் தெரிந்தாலும், ஆரம்பத்தில் அவர்களுக்குள் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஈடுசெய்ய முடியாதது. பல ஆண்கள் அத்தகைய ஆண்களால் நேசிக்கப்படுவதை விரும்புகிறார்கள்.

மாற்றக்கூடிய ஒருவர்
தன்னால் அவரை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை, இத்தகைய ஆண்களை மாற்றும் முயற்சியில், அடிக்கடி பேரழிவு தரும் முடிவை சந்திக்க நேரிடும் ஆனால் சில பெண்கள் அதனை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். அது அவர்களை மற்றவர்கள் முன்னிலையில் முக்கியமானவராக உணர வைக்கிறது. திரைப்படங்களில் வரும் நாயகி போல எளிதில் திருத்தலாம் என்று நினைத்து பெண்கள் முயலுகிறார்கள். ஆனால் முடிவுகள் பெரும்பாலும் திரைப்படத்தை போன்று இருக்காது. அவர்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications
