Just In
- 1 hr ago
இன்றைய ராசிப்பலன் (27.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…
- 1 day ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 1 day ago
மைதா போண்டா
- 1 day ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
Don't Miss
- Movies
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 வகை பெண்களை ஆண்களுக்கு எப்படி இருந்தாலும் பிடிக்குமாம் தெரியுமா?
ஒருவரின் உடல் அம்சங்களைப் பார்த்து அவர்களிடம் ஈர்ப்புக் கொள்வது என்பது இயற்கையானது. ஆனால் பெண்களிடம் ஆண்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகக் காணும் சில உடல் அல்லாத பண்புகளும் உள்ளன என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இது பெண்களின் சாதாரணமான குணமாக இருக்கலாம் இதனை அவர்கள் ஒரு கவர்ச்சிகரமான குணமாகவே கருதமாட்டார்கள். ஆனால் ஆண்களுக்கு அவை ஈர்க்கும் காரணங்களாகவே இருக்கும்.
ஒவ்வொரு ஆணுக்கும் அவர்களுக்கென சில தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள் இருக்கும். எனவே வெறும் உடல்சார்ந்த கவர்ச்சி மட்டும் எப்போதும் ஆண்களை கவர்ந்து விடுவதில்லை. பெண்களில் மிகவும் கவர்ச்சிகரமானதாகக் காணும் உடல் கவர்ச்சி அல்லாத காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முதல் நகர்வை செய்பவர்கள்
அனைத்திலும் முதல் நகர்வை பெண்கள் செய்யும்போது அது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதாக பல ஆண்கள் கூறுகிறார்கள். பொதுவாக அனைத்து செயல்களிலும் ஆண்களே முதல் நகர்வை செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் பெண்கள் இப்படி முதல் நகர்வைச் செய்வது அவர்களை வலிமையானவர்களாக காட்டும். இது தங்களின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதாக ஆண்கள் கூறுகிறார்கள்.

அதிக பராமரிப்பு தேவைப்படாதவர்கள்
பொதுவாக பெண்களுடனான உறவை பராமரிக்க அதிக பராமரிப்பு தேவை என்ற தவறான கருத்து உள்ளது. அதிக மெயின்டனன்ட்ஸை விரும்பாத பெண்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். இப்படிப்பட்ட பெண்கள் தங்களை அதிகம் கவர்வதாக ஆண்கள் கூறுகிறார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடன் சகஜமாக பழகும் பெண்கள் எப்போதும் கவர்ச்சியானவர்களாக தெரிவதாக ஆண்கள் கூறுகிறார்கள்.
பக்க விளைவுகளே இல்லாமல் ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க இத பண்ணுனா போதும்...!

நகைச்சுவை உணர்வு
எப்போதும் புத்திசாலி போல காட்டிக்கொள்ளாமல் சகஜமாக சிரிக்கும் பெண்கள் அதிக கவர்ச்சியானவர்களாக இருப்பதாக ஆண்கள் கூறுகிறார்கள். தங்களின் நகைச்சுவைகளை புரிந்து கொள்ளும் மற்றும் சின்ன சின்ன ஜோக்குகளால் தன்னை சிரிக்க வைக்கும் பெண்கள் எப்போதும் தங்களை கவர்வதாக ஆண்கள் கூறுகிறார்கள். தங்களின் ஜோக்குகள் புரியும் பெண்கள் பெரும்பாலும் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பது ஆண்களின் நம்பிக்கையாகும்.

ஜட்ஜ்மென்ட் செய்யாத பெண்கள்
ஆண்களை ஜட்ஜ் செய்யும் பெண்கள் எப்போதுமே ஆண்களை எளிதில் வெல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். சந்தேகமின்றி செயல்படுவதும், இரக்கத்துடன் செயல்படுவதும் எப்போதும் பெண்களின் அற்புதமான கவர்ச்சிகரமான குணங்களாகும். ஆனால் இந்த குணம் பெரும்பாலான பெண்களிடம் இருப்பதில்லை, அப்படி இருந்தால் அவர்கள் அற்புதமானவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

விளையாட்டுத்தனம்
விளையாட்டுத்தனமாகவும் தேவைப்படும் தருணங்களில் முட்டாள்த்தனமாகவும் இருக்கும் பெண்கள் எப்போதும் தங்களை கவர்வதாக ஆண்கள் கூறுகிறார்கள். ஒரு பெண் தன்னைச்சுற்றி எப்போதும் குழந்தை தனத்துடன் இருப்பது தங்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பும் என்று ஆண்கள் நம்புகிறார்கள். இந்த வகை பெண்கள் எப்போதும் வித்தியாசமான செயல்களாலும், பேச்சுகளாலும் தங்களை கவர்வார்கள், எதற்கும் தயங்க மாட்டார்கள் என்று ஆண்கள் நினைக்கிறார்கள்.