Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இந்த மொக்க காரணத்துக்காகலாமா பொண்ணுங்க காதலிக்கிறாங்க... நீங்களே பாருங்க இந்த கொடுமைய...!
காதலில் விழுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் நிச்சயம் விதி அல்ல. காதலில் விழுவதற்கு பல காரணங்கள் உள்ளது.
உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்குள்ளும் இருக்கும் ஒரு உணர்வு, அனைவரின் வாழ்வையும் அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாக்கும் ஒரு உணர்வு என்றால் அது காதல்தான். காதலிக்காத மனிதனும் இல்லை, காதலிக்காதவன் மனிதனும் இல்லை என்று கூறுவார்கள். அது 100 சதவீதம் உண்மையனதாகும். மற்றவர்கள் மீது அனுப்பு செலுத்துவது அடிப்படை குணமாகும். ஆனால் எதிர்பாலினத்தரின் மீது செலுத்தும் அன்பு எப்போதுமே கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

காதல் வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் திரைப்படங்களில் காட்டுவது போல பார்த்தவுடன் காதல், துப்பட்டா மேலே விழுந்தால் காதல் என்றெல்லாம் காதல் வர எந்த வாய்ப்பும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். காதலில் விழுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் நிச்சயம் விதி அல்ல. காதலில் விழுவதற்கு பல காரணங்கள் உள்ளது. உயிரியல் மாற்றங்கள், உடல்ஈர்ப்பு, உளவியல் காரணங்கள் என காதல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. காதல் வர காரணமாக கூறப்படும் சில சுவாரஸ்ய உளவியல் காரணங்களை பார்க்கலாம்.

தன்னை போலவே ஒருவர் இருந்தால்
எப்பொழுதுமே எதிரெதிர் குணம் உள்ளவர்கள் அதிகம் ஈர்ப்பார்கள் என்று கூறுவார்கள், ஆனால் ஒரே குணம் உள்ளவர்கள் கூட அதிகமா ஈர்ப்பார்கள். இது முழு அர்த்தத்தையும் கூட உண்டாக்கும், ஏனெனில் தன்னை போலவே குணம், சுவை, பொருட்கள் என விரும்புபவர்கள் மீது தன்னிச்சையான ஒரு ஈர்ப்பு வருகிறது என்று பெரும்பாலான இளைஞர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரே மாதிரி சிந்தனை இருக்கும்போது அவர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வராது.

உயரம்
உண்மைதான், காதல் வர உயரமும் ஒரு காரணம்தான். அதற்காக நீங்கள் மிகவும் பரந்த மார்புடன் கட்டுமஸ்தாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் உயரமாக இருப்பது நல்லது. குறிப்பாக ஆண்கள் என்று வரும்போது உயரமான ஆண்கள் தங்களை அதிகம் ஈர்ப்பதாக பெண்கள் கூறுகின்றனர். கட்டியணைத்தல், முத்தமிடுதல் என அனைத்திலுமே உயரமான ஆண்களுக்கு வசதிகள் அதிகம்தான்.

வாசனைகள்
நமது உடலின் வாசனை கூட காதலை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பொதுவாக அதிக நறுமணமுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களை ஈர்ப்பதாக பெரும்பாலான இளைஞர்கள் கூறுகிறார்கள். தினமும் குளிக்கவும், வாசனை நிறைந்த பர்பியூம் உபயோகிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.

பார்ப்பது
சில ஆய்வுகளின் படி ஒருவருக்கொருவர் இரண்டு நிமிடம் கண்களை பார்த்து பேசும்போது அவர்களுக்குள் அன்பு மற்றும் காதல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது இரண்டு எதிர்பாலினங்கள் முதல் முறையாக அதிகரிக்கும் போது ஏற்படும் ஆராய்ச்சிகள் கூறுகிறது.

முதலில் பிடிக்காதவர்கள்
பார்த்தோன பிடிக்காது. பார்க்க பார்க்க பிடிக்கும் என்று கூறுவது காதலில் முழுக்க முழுக்க உண்மை ஆகும். ஏனெனில் காதலில் எப்பொழுதும் வெறுப்பு நாடகங்கள் நடக்கத்தான் செய்யும். முதல் முறை பார்த்த போது பிடிக்காதவர்களை அடுத்தடுத்த முறைகளில் பார்க்கும் போது விரும்ப தொடங்கியதாக பல ஆண்களும், பெண்களும் கூறுகிறார்கள்.

சாகசங்கள்
காதலில் ஈடுபட முக்கிய காரணங்களில் ஒன்றாக உளவியல் நிபுணர்கள் கூறுவது த்ரில் ஆகும். பதட்டம் மற்றும் உடல் ஈர்ப்பு இரண்டிற்கும் இடையில் ஏற்படுவதுதான் காதல் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பிடித்த நபருடன் இருக்கும்போது அவர்களுக்கு பதட்டம் ஏற்படுவதுடன் அவர்கள் மீது பாலியல் ஈர்ப்பும் அதிகரிக்கும்.

சொத்துக்கள்
ஆண், பெண் இருவருக்குமே வசதியான வாழ்க்கை என்பதில் ஆசை இல்லாமல் இருக்காது. இந்த நிலையில் ஒருவரின் அந்தஸ்தும், சொத்தும் அதிகரிக்கும் போது அவர்கள் மீது ஈர்ப்பு கொள்வது என்பது இயற்கையான குணமாகும். இதில் தவறோ அல்லது குற்ற உணர்ச்சியோ இருக்க தேவையில்லை. பணம் ஏற்படுத்தும் ஈர்ப்பிற்கும் காதலுக்கும் உள்ள தொடர்பை ஒருபோதும் மறுக்க முடியாது.

புன்னகை
புன்னகை ஒரு தொற்றுவியாதி ஆகும். அதேசமயம் கவர்ச்சிகரமானதும் கூட. ஆய்வுகளின் படி சிரிப்புக்கும், ஈர்ப்புக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்வு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. சிரிப்பு ஒரு நேர்மறை ஆற்றலை பரவச்செய்து தனது எதிரில் இருப்பவர்களை எளிதில் ஈர்க்கும். மேலும் உண்மையான அழகான புன்னகை என்பது மற்றவர்களை கவரச்செய்யும்.

செல்லப்பிராணிகள்
செல்லப்பிராணிகளை பராமரிப்பவர்களுக்கு பொதுவாக அன்பானவர்கள் என்னும் பிம்பம் உண்டு. அவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், எளிதில் அணுகக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இது பெண்களை எளிதில் ஈர்க்கும் குணமாகும். ஆண்களே நோட் பண்ணிக்கோங்க.



Click it and Unblock the Notifications











