Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி சூழ்ச்சிக்காரர்களாக இருப்பார்களாம் தெரியுமா?
ஆபத்தான துணைகள் என்று வரும்போது அதில் முக்கியமானவர்கள் உணர்ச்சிரீதியாக நம்மை மிரட்டுபவர்கள்.
இந்த உலகத்தில் காதலிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ஆனால் அனைவருமே சரியான நபர்களை காதலிக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் ஒரு வேகத்தில் காதலித்து விட்டு அதற்கு பின் துணையின் சுயரூபம் தெரிந்து தப்பித்து கொள்பவர்களும், தப்பிக்க முடியாமல் சிக்க கொள்பவர்களும் நம்மை சுற்றி ஏராளமாக இருக்கின்றனர்.

ஆபத்தான துணைகள் என்று வரும்போது அதில் முக்கியமானவர்கள் உணர்ச்சிரீதியாக நம்மை மிரட்டுபவர்கள். இவர்களின் ஒவ்வொரு அசைவும் திட்டமிடப்பட்டதாக இருக்கும். அதன்மூலம் அவர்கள் நினைப்பதை நம்மை செய்ய வைத்து விடுவார்கள். நீங்கள் ஒருவேளை இப்படிப்பட்டவர்களுடன் காதலில் இருந்தால் அதனை உணரும் கடைசி ஆளாக நீங்கள்தான் இருப்பீர்கள். ஏனெனில் உங்களை சுற்றியிருக்கும் அனைவரும் இதனை முன்பே அறிவார்கள். இந்த அறிகுறிகள் உங்கள் துணையிடம் இருந்தால் அவர்கள் சூழ்ச்சிக்காரர்களாகவும், உணர்ச்சிகளை வைத்து உங்களை மிரட்டுபவர்களாகவும் இருப்பார்கள்.

எப்போதும் பாதிக்கப்பட்டவர் போல காட்டிக்கொள்வார்கள்
எந்தவொரு பிரச்சினையிலும் அவர்களின் பங்கை பொருட்படுத்தாமல் அவர்கள் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் போலவே தன்னை காட்டி கொள்வார்கள். அவர்கள் எப்பொழுதும் தன்னை அப்பாவியாகவும் சுற்றி இருப்பவர்களை தவறானவர்களாகவும் சித்தரிப்பார்கள். அவர்களின் விரல் எப்பொழுதும் மற்றவர்களைத்தான் சுட்டிக்காட்டுமே தவிர தனது தப்பை ஒப்புக்கொள்ளாது.

பொய் கூறுவது
இவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களில் பொய் கூறுவது முக்கியமான ஒன்றாக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் பொய் கூரி தப்பித்து கொள்ள இவர்கள் தயாராய் இருப்பார்கள். நீங்கள் நம்பும்வரை தொடர்ச்சியாக பொய் கூறிக்கொண்டே இருப்பார்கள். உண்மையை கூறுவதோ அல்லது நேர்மையாக இருப்பதோ இவர்களால் முடியாத காரியமாகும்.

உங்களின் வார்த்தைகளை திசை திருப்புவார்கள்
இப்படிப்பட்டவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு முடிக்கும் போது நீங்கள் முழுவதும் குழப்பமாக காணப்படுவீர்கள். ஏனெனில் இவர்கள் உங்களின் வார்த்தைகளை உங்களுக்கு எதிராகவே திருப்பி உங்கள் எண்ணங்கள் மீது உங்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக நம்பவைப்பார்கள்
அவர்களுக்கு விருப்பமில்லாத அல்லது பிடிக்காத ஒரு விஷத்தை பற்றி நீங்கள் பேசும்போது வார்த்தைகளை திசைதிருப்புவதன் மூலம் நீங்கள் சொல்ல வந்ததை குழப்பி விடுவார்கள். அதேசமயம் நீங்கள் வாக்குவாதத்தில் வென்றது போல உங்களை நம்பவைப்பார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு வேண்டியதை சாதித்து கொள்வார்கள்.

அவரின் தவறுகளுக்கு உங்களை வருந்த வைப்பார்கள்
அடுத்தவர்களை குற்றம் சாட்டுவதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டால் அதனை ஏன் நியாபகப்படுத்தவில்லை என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவார்கள். எப்போது தவறு நடந்தாலும் அது தன்னால் நடக்கவில்லை உங்களால் நடந்தது என்று குற்றம் சாட்டி உங்களையே நம்பவைப்பார்கள்.

மயக்கும் வார்த்தைகள்
இவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. தனது பேச்சு உங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அவர்களை நம்ப வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான வார்த்தைகளையும், பொய் சத்தியங்களையும் கூறுவார்கள். ஒருவேளை அவர்களின் சத்தியத்தை அவர்கள் மீற நேர்ந்தால் அதனை சமாளிக்க மீண்டும் இன்னொரு பொய் சத்தியத்தை கூறுவார்கள்.

ஆற்றலை உறிஞ்சுவார்கள்
இவர்கள் இருக்கும் அறையில் எப்பொழுதும் கவனம் இவர்களை சுற்றித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுடைய கோபம், சோகம் என அனைத்தையும் மற்றவர்கள் கவனித்து ஏன் என கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் தன் மீது பாவப்பட வேண்டும், இரக்கம் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.



Click it and Unblock the Notifications
