உங்க ஆள்கிட்ட கேவலமா சண்டை போட்டீங்களா? இத மட்டும் செய்ங்க... உடனே சமாதானமாகிடுவாங்க

உங்களுடைய காதலரோடு சண்டை போட்டுவிட்டால் எப்படி சமாதானம் செய்யலாம் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பேசப்படுகிறது. அது பற்றிய விளக்கமான பதிவு தான் இது.

உங்கள் பாய் பிரண்ட் கூட சண்டையா? அப்போ சமாதானப் படுத்த இதையெல்லாம் செய்ங்கப்பா

காதல் வெற்றி பெறுவது கஷ்டம்னா அத நீண்ட நாள் கொண்டு செல்வது அத விட கஷ்டமாக இருக்கிறது. எடுத்ததுக்கெல்லாம் ப்ரேக் அப் அல்லது சண்டை தான் இப்பொழுதுள்ள காதல் ஜோடிகளுக்கிடையே இருக்கிறது. அதிலும் நம்ம பசங்க தான் ரெம்ப பாவம். பொண்ண கரக்ட் பண்றதுலையும் சரி பொண்ண சமாதானம் செய்வதிலும் சரி நொந்து நூடுல்ஸாத்தான் போறாங்க.

How To Make Up After A Dirty Fight With Your Boyfriend

இது ஒரு பக்கம் இருந்தால் பொண்ணுங்க சொல்வது இவன் எப்பொழுதும் என்ன சந்தேகப்படுறான் சண்டை போடுறான்னு சொல்றாங்க. சரி இப்படி சண்ட போட்டு சண்ட போட்டு கடுப்பேத்தும் உங்கள் துணையை எப்படி சமாளிப்பது? உங்கள் உறவில் உள்ள பிரச்சினையை சரி செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வது எப்படி? என்பது குறித்த கட்டுரை தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்

நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்

உங்கள் காதலி/காதலனோ சண்டை போட்ட உடனே சமாதானம் ஆக வேண்டும் என்று முயற்சிக்காதீர்கள். கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆறப் போட்டு எதையும் பேசி முடிப்பது நல்லது. இது இருவரின் கோபத்தையும் குறைக்க உதவும்.

சூட்டோட பேச ஆரம்பிக்கும் போது விவாதங்கள் பெரிதாகி பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்து விட வாய்ப்புள்ளது. உங்கள் பக்கம் இருந்தே நியாயத்தை யோசிக்காதீர்கள். உங்கள் காதலனின் சைடும் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள். எனவே ஆறப் போட்டு பேசும் போது சண்டைக்கான புரிதல் ஏற்பட்டு உறவில் உள்ள சிக்கல் எளிதாகி விடும்.

மன்னிப்பு கேளுங்கள், கொடுங்கள்

மன்னிப்பு கேளுங்கள், கொடுங்கள்

உறவில் நீங்கள் செய்த தவறு சின்னதாக இருந்தாலும் அதற்கு மன்னிப்பு கேட்க தயாராக இருங்கள். உண்மையில் உங்களிடம் எந்த தவறும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் துணை இப்படி இருக்க நீங்களும் ஒரு காரணம் தான். எனவே யார் முதலில் மன்னிப்பு கேட்பது என்று போட்டி போடாதீர்கள்.

சில நேரம் நீங்கள் அவரை தவறாக கூட புரிந்து வைத்திருக்கலாம். என்ன இருந்தாலும் அவர் உங்கள் துணை எனவே குற்ற உணர்வை விட்டு மன்னிப்பு கேட்க முயலுங்கள். மன்னிப்பு கேட்பது உங்கள் பிரச்சினையை எளிதாக முடிவுக்கு கொண்டு வந்திடும். அப்படி மன்னிப்பு கேட்க முடியவில்லை என்றாலும் உங்கள் பாய் பிரண்ட் உங்களை தேடி வரும் போது மன்னிக்காவது செய்யுங்கள். இதுவே சண்டை சமாதானம் ஆக்க எளிய வழி.

கட்டிக் கொள்ளுங்கள்

கட்டிக் கொள்ளுங்கள்

சில சமயம் உங்கள் உணர்வுகளை வார்த்தைகளால் கூற இயலாது. அந்த மாதிரியான சமயங்களில் உங்கள் பாய் பிரண்ட்டை கட்டிக் கொள்ளுங்கள். இதுவே உங்கள் சண்டையை எளிதாக தீர்த்து விடும். வார்த்தை செய்யாத மாயஜாலத்தை தொடுதல் உணர்வுகள் செய்து விடும். இந்த கட்டிப் புடி வைத்தியம் உங்கள் சண்டை வலியை காணாமல் செய்து விடும்.

தூக்கம்

தூக்கம்

தூக்கம் ஒரு நல்ல தெரபி என்றே கூறலாம். எனவே உங்கள் பிரச்சினைகளை சரி செய்ய கொஞ்சம் நேரம் தூங்குங்கள். இது உங்கள் மூளைக்கு நல்ல ஓய்வு கொடுத்து தெளிவு பட வைக்கும். இதனால் சண்டையின் வேகம் குறைந்து தெளிவான சிந்தனை கிடைக்கும். எனவே உங்கள் பாய் பிரண்ட் கூட சண்டை ஏற்பட்டால் கொஞ்சம் நேரம் தூங்குங்கள். பிறகு தெளிவான நல்ல முடிவை எடுங்கள்.

விவாதத்தை தவிருங்கள்

விவாதத்தை தவிருங்கள்

பாய் பிரண்ட்டோடு சண்டை போடும் போது மேலும் மேலும் விவாதிப்பதை தவிருங்கள். சரிக்கு சரி நின்று விவாதம் செய்வது மீண்டும் பிரச்சினையை பெரிசாக்கும். எனவே அதை விட்டு விட்டு முக்கியமானது எது என்று யோசியுங்கள். உங்கள் உறவை முக்கியமாக நினைத்தீர்கள் என்றால் விவாதிப்பதை தவிருங்கள்.

புன்னகை செய்யும் மாயம்

புன்னகை செய்யும் மாயம்

எப்படிப்பட்ட சண்டையையும் உங்கள் புன்னகை மயமாக்கி விடும். புன்னகை பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அது செய்யும் மாயாஜாலம் பெரிது. உங்களுடைய ஸ்மைலிங் முகத்தை பார்க்கும் போது அவருக்கு சண்டை போட மனம் இருக்காது. கண்டிப்பாக அவரும் மாறி விடுவார். எனவே உங்கள் ஈகோவை தள்ளி வைத்து விட்டு இறங்கி புன்னகை செய்யுங்கள்.

ஸ்பெஷல் உணவு

ஸ்பெஷல் உணவு

உங்கள் சண்டையை சீக்கிரம் சரியாக்க நினைத்தால் அவருக்கு பிடித்ததை சமைத்து கொடுங்கள். ஹோட்டல் உணவை தவிர்த்து உங்கள் கைகளால் உணவை தயாரிக்கும் போது அது அவருக்கு ரெம்ப பிடிக்கும். இதுவே உங்கள் சண்டைக்கான அரும் மருந்து. எனவே ஸ்பெஷல் விருந்து வைத்து அவரை குஷிபடுத்தி விடலாம். இதன் மூலம் உங்கள் சண்டையின் காயங்களை ஆற்றி விடலாம்.

அன்பு காதலனுக்கு கடிதம் எழுதுங்கள்

அன்பு காதலனுக்கு கடிதம் எழுதுங்கள்

பேச்சு வார்த்தை கூட கோபப்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் எழுத்துக்கள் உங்கள் அன்பை சொல்ல பெரிய வழி. எனவே ஒரு பேப்பர் பேனாவை எடுத்து உங்கள் அன்பானவருக்கு கடிதம் எழுத ஆரம்பித்து விடுங்கள். அன்பாக உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். அவரை திட்டியோ அல்லது சண்டையை விவரித்தோ ஒரு போதும் எழுதாதீர்கள். முடிந்தால் மன்னிப்பு உடன் ஆரம்பியுங்கள். உங்களுடைய உணர்வுகளை மட்டும் எடுத்துரையுங்கள். அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள். நீங்கள் பேச விரும்புவதை எழுதி கொடுங்கள். இதுவும் உங்கள் சண்டையை தீர்க்க அன்பான வழி.

வெளியே அழைத்து செல்லுதல்

வெளியே அழைத்து செல்லுதல்

சண்டையை சமாதானம் செய்ய உங்கள் பாய் பிரண்டை பிடித்த இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அங்கே போயும் பழைய சண்டையை ஆரம்பிக்காமல் அன்பாக இருந்து வரலாம். நல்ல விவாதமாக இருந்து வந்தால் சண்டை சமாதானமாகி சீக்கிரம் சேர்ந்து விடுவீர்கள். இந்த சர்ப்ரைஸ் விசிட் உங்கள் காதலனுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

எனவே அடுத்த தடவை உங்கள் துணையுடன் சண்டை வந்தால் இந்த டிப்ஸ்களை ப்லோ பண்ணுங்க.

நாம் வாழும் வாழ்க்கை மிகவும் அழகானது. இதில் நபர்களை மன்னிக்கும் மன்னிப்பு கேட்கவும் பழகிக் கொள்ள வேண்டும். எனவே அடிக்கடி சண்டை போடுவதை தவிர்த்து சந்தோஷமாக வாழுங்கள். என்னங்க உங்கள் துணையை சமாதானப் படுத்த கிளம்பிட்டீங்களா? அவங்களும் உங்கள் காதலுக்காகத்தான் காத்து கிடக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, March 28, 2019, 16:50 [IST]
Desktop Bottom Promotion