Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
வேலைக்கு சென்றதால் புகுந்த வீட்டில் சுயநலவாதி என்ற பெயர் எனக்கு - பெண்ணின் கண்ணீர் கதை!
வேலைக்கு சென்றதால் என் காதலை இழந்தேன்
இந்தியாவில் ஏன் பெண்களுக்கென எழுதப்படாத சட்டங்கள் பல இருக்கின்றன என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஏன் இந்த சட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானா? ஆண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாமா?

நான் எனது பெற்றோர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் என்னை அவர்களது குழந்தையாக மட்டும் பார்த்து தான் வளர்த்தார்கள். ஆண், பெண், இவளுக்கு இது மட்டும் போதும் என்று வேறுபாடு காட்டி எல்லாம் என்னை வளர்க்கவில்லை. ஆனால் இந்த சமூதாயதில் பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பல எழுதப்படாத சட்டங்கள் இருக்கின்றன. பெண்ணுக்கு இருக்கும் கடமைகள், வேலைகள் என பல எரிச்சலூட்டும் வரையறைகள் உள்ளன.

திருமணம்
இந்தியாவில் வாழும் மற்ற பெண்களை போல தான் நானும், எனக்கு திருமணமாகிவிட்டது. நான் திருமணத்திற்கு முன்னால் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஆனால் எனது கணவர் வேறொரு நகரத்தில் இருப்பதால் எனது வேலையை விட வேண்டியது ஆகிவிட்டது. அதோடு நான் வேலை செய்த அலுவலத்தின் கிளையும் அவரது நகரத்தில் இல்லை. அதனால் வேலையை விட்டு விட்டேன்.

வாழ்க்கை தொலைந்தது
எனக்கு திருமணமாகி எனது கணவருடன் புதிய நகரத்திற்கு வந்தேன். கணவர் மற்றும் மாமியார் என திருமண வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. எனது கணவருக்கு எல்லாம் குறித்த நேரத்திற்கு வேண்டும். வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதன்படி நானும் ஒரு நல்ல குடும்ப தலைவியாக எனது எல்லா வேலைகளையும் செய்தேன். புதிய வாழ்க்கை சில நாட்களுக்கு நன்றாக தான் இருந்தது. பிறகு தான் நான் எனது மகிழ்ச்சியை தொலைத்துவிட்டேன்.

வேலை தேடி சளித்தேன்
நான் குடும்பத்தலைவிகளை தாழ்த்தி பேசவில்லை. ஆனால் என்னால் அனைத்திற்கும் பிறரை சார்ந்தே இருக்க முடியவில்லை. நான் ஒரு வேலையை தேட ஆரம்பித்தேன். எனக்கு உடனடியாக வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.
எனது கணவர் நான் வேலை தேடுவதில் உள்ள பிரச்சனைகளுக்கும், எனது சிரமங்களை போக்கவும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்று நான் நினைத்தேன். கடைசியாக எனது முயற்சிகளுக்கு எல்லாம் பலன் கிடைத்துவிட்டது. எனக்கு நாங்கள் வசிக்கும் அதே நகரத்தில் வேலை கிடைத்துவிட்டது.

வேலை பறிபோனது
ஒரு மாதம் கழித்து, எனது கணவர் அவரது வேலையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக, வேறு ஒரு நகரத்திற்கு நாம் மாற வேண்டும் என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம் குறைந்தது ஆறு மாதங்களாவது ஒரு இடத்தில் வேலை செய்யாமல், வேலையைவிடுவது நன்றாக இருக்காது என்று கெஞ்சினேன்.
ஆனால் அவர் தனது முடிவில் இருந்து மாறவே இல்லை. நான் நீண்ட நாட்களாக வேலை தேடி ஒரு பதினைந்து நாட்களாக தான் வேலைக்கு சென்றேன். அதற்குள் நாங்கள் வேறொரு நகரத்திற்கு சென்றுவிட்டோம். மீண்டும் வேலை தேடுவது எவ்வளவு சிரமமான ஒரு காரியம். நான் மறுபடியும் வேலை இல்லாமல் இருந்தேன். ஆனால் ஒரு ஆச்சரியம் நடந்தது. எனக்கு மிகப்பெரிய எம்.என்.சி கம்பெனியில் வேலை கிடைத்தது.

மாமியாரின் நாடகங்கள்!
நாங்கள் புதிய நகரத்திற்கு சென்றுவிட்டோம். மீண்டும் எங்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மாமியாருடனான உறவு நல்லபடியாக இல்லை. அவர்கள் நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவர்கள் தான்.
அவர்களால் கணவன், மனைவி இருவரும் கிட்டத்தட்ட ஒரே சம்பளம் வாங்குவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களால் எங்களது சந்தோஷத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே எனது மாமியார் பல நாடகங்களை ஆட ஆரம்பித்துவிட்டார். அவை எல்லாம் எழுதும் அளவிற்கு தரமானவை இல்ல என்பதால் நான் அதை எழுதவில்லை.

காதலை இழந்தேன்!
எனது கணவர் என் மீது கொண்ட காதல் போனது. அவர் இதயத்தில் எனக்கென இருந்த இடம் இல்லாமல் போனாது. இவை அனைத்திற்கும் காரணம் நான் நல்ல வேலையில் இருப்பது தான். நான் சுயநலமானவள் என்று முத்திரை குத்தப்பட்டேன்.
எனக்கு நல்ல குணம் இல்லை என்றும் பேசப்பட்டேன். நான் என் கணவருடைய ஆசிர்வாதம் தான் எனக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது என எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கோ என் மீது பாசம் இல்லாமல் போய்விட்டது.

பெண் என்றால் அடிமைகளா?
ஏன் இந்த பூமியில் ஒரு பெண் அவளது கணவனை விட குறைவாக தான் சம்பாதிக்க வேண்டுமா? அவள் தனது கணவனுக்காக தனது வளர்ச்சியை கூட தடை செய்து கொள்ள வேண்டுமா? பெண் தனது குடும்ப உறுப்பினர்களையும், வீட்டு வேலைகளையும் மட்டுமே பார்ப்பதற்காக படைக்கப்பட்டவளா?
பெண்களுக்கு என சொந்த விரும்பு வெறுப்புகள் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஏன் இந்த மாமியார், மாமனார்கள் சிலர், கணவன் மனைவி இடையில் இடைவெளிகளை உண்டாக்க பார்க்கிறார்கள்? ஆண்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே பெண்கள் படைக்கப்படவில்லை. ஆண்களே அற்பத்தனமாக காரணங்களுக்காக உங்களது மனைவியை எப்போதும் தாழ்த்தி வைக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications











