இந்த அளவுக்கு மோசமாக எவனும் ஒரு பெண்ணை ஏமாற்றியிருக்க மாட்டான் - My Story #115

Written By:
Subscribe to Boldsky

அவனை எனக்கு கல்லூரி காலங்களில் தான் தெரியும்.. அவனாக வந்து தான் என்னுடன் பேசினான்..! எனக்கு ஆரம்பத்தில் அவனை பிடிக்கவில்லை.. யாரையும் தாழ்வாக நினைத்து அவர்களை வெறுக்க கூடாது என்று நினைத்த காரணத்தினால் அவனுடன் சரிசமமாக பேச ஆரம்பித்தேன்.. அவனை விட முற்றிலும் மாறுபட்ட பெண் என்பதாலோ என்னவோ அவனுக்கு என் மீது காதல் வந்தது... அவனுடன் சேர்ந்து கண்டிப்பாக என்னால் வாழவே முடியாது என்று தோன்றியது..!

ஆனால் நண்பர்களின் வற்புறுத்தல்களின் காரணமாக அவனை காதலிக்க சம்மதித்தேன்.. ஆனால் முழு மனதோடு காதலிக்கவில்லை... நம்பிய அவனை ஏமாற்றிவிட கூடாது என்பதற்காக நான் அவனை உண்மையாக காதலிக்க தொடங்கினேன்..! எங்களது காதல் படிப்படியாக அதிகரித்தது.. அவனது வாழ்க்கை முறைக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள துணிந்தேன்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆசைகள்

ஆசைகள்

எனக்கு அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசை.. அதற்காக நான் என்னை 2 வருடங்களாக தயார்ப்படுத்திக் கொண்டு வந்தேன்.. அவனிடன் எனக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறது என்று கூறிய போதே, அவன் முகம் சுருங்கியது.. அதன் பின் எங்களது வீட்டில் உன்னை வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் அதனால் நீ இந்த முயற்சியை எல்லாம் இதோடு கைவிட்டுவிடு என்று கூறினான்..!

உனக்கு கனவு தான் முக்கியமா?

உனக்கு கனவு தான் முக்கியமா?

ஆனால் இத்தனை நாட்களாக நான் வளந்து வைத்த ஆசையும், உழைத்த உழைப்பும் வீண் போவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அதை அவனிடம் கூறினேன்..! உனக்கு நான் முக்கியமா? உன் கனவு முக்கியமா என்று கேட்டான்...! காதலித்தவனையே திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் இந்த ஊர் தப்பா பேசும் என்ற காரணத்தால், நீயும், உன் காதலும் தான் எனக்கு முக்கியம் என்று கூறிவிட்டேன்..!

சண்டைகள்

சண்டைகள்

நாட்கள் செல்ல செல்ல, சென்றால் அரசாங்க வேலைக்கு தான் என்றிருந்த என்னை, அரசாங்க வேலை எல்லாம் நமக்கு எட்டாக் கனி என்று சிந்தனை செய்ய வைத்துவிட்டான்...! அவனுக்கு பெண் நண்பர்கள் அதிகமாக இருந்தார்கள்.. அவர்களிடம் நான் அவனது காதலி என்று கூட சொல்ல மாட்டான்.. அந்த பெண்கள் இவனிடம் மிகவும் நெருக்கமாக பழகுவார்கள்.. எனக்கு அது பிடிக்கவில்லை என்று கூறினால், என்னை என் பிரண்ட்ஸ் கிட்ட இருந்து நீ பிரிக்க பார்க்கிறாயா என்று கேட்பான்.. சண்டைகள் வரும்... எனவே கசந்தாலும், கண்டு கொள்ளாமல் இருக்க பழகிவிட்டேன்..!

அத்துமீறல்

அத்துமீறல்

ஒரு சமயத்தில் என்னிடம் அத்துமீறி நடக்கவும் ஆரம்பித்தான்... காதலில் ஆரம்பித்த அத்துமீறல் ஆனது, உடலுறவிற்காக மட்டும் தான் நீ என்றானது...! ஒரு கட்டத்தில் என்னை காதலிக்கவில்லை என்றே கூறிவிட்டான்.. அவன் கூறிய போது, என்னால் அவனை விட்டு செல்ல முடியவில்லை.. திருமணம் செய்து கொண்டால், அவனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்..!

இப்படி ஒரு வாழ்க்கையா?

இப்படி ஒரு வாழ்க்கையா?

அவனை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.. எனவே அவன் ஆசைக்காக அழைக்கும் போது எல்லாம் சென்றேன்..! என்னுடன் அவன் பேசுவதும் குறைந்தது.. என்னிடம் எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டான்... நான் கேட்டால் கூட எதையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளமாட்டான்.. எனக்கு இது என்ன வாழ்க்கை...? இப்படி ஒரு காதல்... திருமணம் எல்லாம் நமக்கு தேவையா என்றானது...!

அடிபணிந்தேன்

அடிபணிந்தேன்

ஆனாலும், ஊர் என்ன பேசும் என்று நினைத்து பார்க்கையில், இவனையே எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது...! எனவே அவனுடன் ஏதாவது ஒரு விதத்திலாவது நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றிய காரணத்தால் அவன் அழைக்கும் போது எல்லாம் சென்றேன்...! ஒவ்வொரு முறை செல்லும் போதும், என் மனம் கதறிய கதறல் எனக்கு மட்டும் தான் தெரியும்...

திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

நாட்கள் கடந்தன.. அவன் போன் எண்ணை மாற்றினான்... அவனிடம் சென்று பேச சென்றால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.. மாறாக என்னை உதாசினப்படுத்திவிட்டு சென்றான்.. ஒரு மாதமாக அவன் பின்னாலேயே சென்றேன்.. கெஞ்சினேன் கதறினேன்... இந்த பதிலும் கிடைக்கவில்லை... ஒரு நாள் அவன் எதர்ச்சையாக ஒரு ஹோட்டலுக்குள் நுழைவதை கண்டேன்.. அவன் என்னை கண்ட உடன் வேகமாக நடந்தான்.. அவன் ஒரு பெண்ணிடம் பேசிவிட்டு கழிவறைக்குள் சென்றுவிட்டான்.. நானும் அந்த பெண்ணும் அவன் வெளியே வரும் வரை காத்திருந்தோம்...

அதிர்ச்சி

அதிர்ச்சி

அவன் வெளியே வந்து அந்த பெண்ணுடன் உள்ளே செல்ல பார்த்தான்.. நான் ஏதோ உறவுக்கார பெண்ணோ என்று நினைத்துக் கொண்டேன்.. அவனுடன் சென்று பேச சென்றேன்.. ஏன் என்னுடன் பேசவில்லை என்று கேட்டேன்.. அவன் பதில் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது.. இவள் தான் என் மனைவி என்று அந்த பெண்ணை காட்டி சொன்னான்... அவளது கரங்களை பிடித்துக் கொண்டான்.. எனக்கு தூக்கிவாறிப் போட்டது..

போதும்டா சாமி...!

போதும்டா சாமி...!

எனக்கு வந்த கோபத்தில் அவனை ப்ளார் என்று அரைந்துவிட்டேன்...! அவன் ஓயவில்லை.. நான் பலரை காதலித்து ஏமாற்றியதாகவும், அதே போல தான் இவனையும் ஏமாற்றியதாகவும் என்னை பற்றி என் முன்னாடியே அவளிடம் கூறினான்... எனக்கு அதை எல்லாம் இப்போது நினைத்தாலும் கோபமாக தான் வருகிறது....! என் தகுதியை குறைத்துக் கொண்டு அவனிடம் பழகியது தவறு என்பதை புரிந்து கொண்டேன்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: He Cheated Me But He Did Not Tell the Reason

My Story: He Cheated Me But He Did Not Tell the Reason
Story first published: Wednesday, December 20, 2017, 14:00 [IST]