Latest Updates
-
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும் -
இந்த 5 ராசிக்காரங்க பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல... அதை பல மடங்கு பெருக்குவதிலும் வல்லவர்களாம்!
இந்த 10 விஷயங்களில் பெண்கள் தான் டாப் டக்கர்!
நாங்கள் தான் வீரமானவர்கள், குடும்ப தலைவர்கள் என பல விஷயங்களில் ஆண்கள் தங்களை பெரிதாக நினைத்துக் கொண்டாலும். ஆண்மையை பெற்றுடுத்த பெண்மை தான் சிறந்தது என்பதை நாம் யாரும் மறக்க முடியாது. வீட்டு வேலை மேலாண்மை மட்டுமின்றி, அலுவலக மேலாண்மையிலும் கடந்த தசாப்தங்களாக பெண்கள் சிறந்து விளங்கி வருகிறார்கள்.
பள்ளிகளில் ஸ்டேட் ரேன்க் வாங்குவதில் துவங்குகிறது பெண்கள் ஆண்களை முந்துவது. நினைவாற்றல், அறிவாற்றல், தலைமை வகிப்பது, பெற்றோர் நலன், குழந்தை வளர்ப்பு என 360 டிகிரியிலும் பெண்கள் சுத்தி, சுத்தி ஆண்களை பின்னுக்கு தள்ளி பல துறைகளில் முதன்மை வகிக்க துவங்கிவிட்டனர்.
ஆனால், பொதுவாக சிலவற்றில் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால், அதிலும் பெண்கள் தான் சிறந்து விளங்குகிறார்கள் என ஆய்வுகளின் மூலம் நிரூபணம் செய்துள்ளனர். அவற்றை பற்றி இனிக் காண்போம்....

செயல்பாடு # 1
வேலை மற்றும் வீடுகளில் மன அழுத்தத்தை எதிர்கொள்வதில், கட்டுப்படுத்துவதில் ஆண்களை காட்டிலும், பெண்கள் சாமர்த்தியசாலிகள்.

செயல்பாடு # 2
உலகளவில் எடுத்த கணக்கெடுப்பில் கார் விபத்துகளில் உயிரிழந்தவர்களில் ஆண்களை காட்டிலும் பெண்கள் குறைவு தான் எனிலும், இவர்கள் ஆண்களை விட சிறப்பாக, கட்டுப்பாட்டுடன் ஓட்டுகின்றனர் எனவும் அறியப்பட்டுள்ளது.

செயல்பாடு # 3
ஓர் துறை அல்லது பிரிவில் தலைமை பதவி வகிப்பதில், அந்த தலைமையை திறம்பட ஆளுமை செலுத்துவதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.

செயல்பாடு # 4
பொதுவாகவே ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக உள்ளதாம்.

செயல்பாடு # 5
பெற்றோர் மீது அக்கறை எடுத்துக் கொள்வதிலும் கூட பெண்கள் தான் சிறந்து விளங்குகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பெண்களின் பொறுமையும், அமைதியும் தான்.

செயல்பாடு # 6
பலரும் பெண்கள் அதிகமாக உடை வாங்குவார்கள், பியூட்டி பார்லர், உபகரணங்கள் என பணத்தை அநாவசியமாக செலவு செய்வார்கள் என கூறுவார்கள். ஆனால், ஆண்களை காட்டிலும் சிக்கனமாக செலவு செய்வதிலும், பணத்தை சேமிப்பதிலும் பெண்கள் பலே கில்லாடிகள்.

செயல்பாடு # 7
உண்மையில், சைட் அடிப்பதில் இருந்து, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது வரையிலும் ரொமாண்டிக்கில் ஆண்களை காட்டிலும் பண்ணி பெடலெடுப்பதில் பெண்கள் தான் சிறந்தவர்களாம்.

செயல்பாடு # 8
100% நாம் அனைவரும் அறிந்தது தான். குழந்தை வளர்ப்பில் பெண்களோடு ஆண்கள் போட்டியிடவே முடியாது.

செயல்பாடு # 9
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகளவில் பள்ளி படிப்பில் ஆண்களை விட பெண்கள் தான் சிறந்த அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.

செயல்பாடு # 10
கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் அறிவாற்றல் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாம்.



Click it and Unblock the Notifications
