Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
கிறுக்குத்தனமான தோழிகள் கொண்ட ஆண்களுக்கு மட்டுமே கிட்டும் பாக்கியங்கள் - ஜமாய்!!!
அரசு பள்ளிகளில் படித்த ஆண்களுக்கு மட்டுமே தெரியும், பெண் தோழிகள் இல்லாத வலியின் வீரியம் என்னவென்று!!! - (தங்க மீன்கள் ராம் ஸ்லாங்கில் படிக்கவும்)
பெண் தோழிகள் ஓர் வரம் என்று தான் கூற வேண்டும். ஆண் தோழர்கள் விழுந்தால் கைகொடுத்துத் தூக்கிவிடுவார்கள், விழாமல் தடுத்து உதவுவார்கள். ஆனால், மனதில் ஏற்படும் காயங்களுக்கு ஆறுதல் கூற பெண் தோழிகளால் மட்டுமே முடியும். என்ன செய்ய தாயன்பும், பாசமும் பெண்களுக்கே சொந்தமான விஷயமாக தானே இருக்கிறது.
அம்மாவோடு மிக நெருக்கமாக சேர்ந்து பழகுவது, நம்மளை வீட்டில் போட்டு விடுவது, வேலைக்கு செல்ல வற்புறுத்துவது, அடிக்கடி செல்ஃபீ எடுத்து முகப்புத்தகத்தில் அதிக லைக் வாங்க என அனைத்திலும் உதவியாக இருப்பவர்கள் பெண் தோழிகள். பள்ளியில் தொடங்கி உங்களது திருமண வாழ்வின் பிறகும் கூட உங்களோடு தோழமையில் இருக்கும் ஓர் தோழி கிடைப்பது உண்மையிலேயே ஓர் வரம் தான்.....
இனி, கிறுக்குத்தனமான தோழிகள் கொண்ட ஆண்களுக்கு மட்டுமே கிட்டும் பாக்கியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்....

புகைப்படம்
அம்மா, சகோதரிக்கு அடுத்து நம்முடன் எண்ணற்ற புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் பெண்கள் இவர்கள் மட்டுமே. நம்மில் பெரும்பாலானோர் முகப்புத்தகத்தில் யாரேனும் அவரது தோழிகளுடன் புகைப்படத்தை பகிரும் போது, நன்றாக இருந்தாலும் லைக் செய்யாமல் போயிருப்போம்.
அதற்கு காரணம் இது தான். (நமக்கு ரக்ஷா பந்தனுக்கு ராக்கி கட்டவே ஆளில்ல...)

பிரியாத துணை
நாம் எங்கு சென்றாலும் சரி, அவர்கள் எங்கு சென்றாலும் சரி, அதில் பிரியாத துணையாய் பயணிப்பார், நம்மையும் பயணிக்க வைப்பார்கள். இதில், வீடு வரை வந்து இன்னுமா நீ ரெடி ஆகல என உரிமையோடு அதட்டும் தோழிகளும் இருக்கிறார்கள்.

காதலி இல்லாத குறைகாண நிவர்த்தி
பார்க், பீச், தியேட்டர், கோவில் என எங்கு சென்றாலும் சரியாக நம் கண் முன்னாடியே ஜோடியாக வந்து கடுப்படிப்பார்கள் சிலர். இது பல ஆண்களின் மனதில் அணையாத சோகமாய் சுடர்விட்டு எரிந்துக் கொண்டிருக்கும். இந்த குறையை போக்கி நிவர்த்தி செய்பவர்கள் பெண் தோழிகள்.

அதட்டலும், மிரட்டலும்
சில ஆண்கள், அம்மாவின் பேச்சை கேட்க மறுத்தாலும், தங்களது தோழியின் பேச்சை மீரமாட்டர்கள். அதட்டி, மிரட்டி, ஆண்களை ஒரு வேலை செய்ய வைக்க பெண் தோழிகளால் மட்டுமே முடியும். இதெல்லாம் பெண் தோழிகள் உள்ள ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள்.

சண்டை சச்சரவுகள்
பெண் தோழிகள் இருப்பதால், உங்களுக்கான கடமைகளும் நிறைய இருக்கிறது. அவர்களை பெற்றோருக்கு இணையாக பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். யாரவது கேலி கிண்டல் செய்தால் சண்டைக்கு செல்ல வேண்டிய கட்டாயங்கள் கூட ஏற்படும்.

உறுதுணை
அம்மாவுக்கு பிறகு, நமது கனவுகள் நிறைவேற உறுதுணையாய் இருக்கும் பெண். நாம் எவ்வளவு முறை விழுந்தாலும், உன்னால் முடியும் என மனதளவில் நிறைய தெம்பூட்டும் நபர் பெண் தோழி தான். இவர்களது உறுதுணையில் அன்பும், அக்கறையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

காதலுக்கு உதவுதல்
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்கு தான் தெரியும் என்பார்கள். அந்த வகையில் நாம் ஓர் பெண்ணை காதலிக்கும் போது, அந்த பெண்ணை சரியாக கவர்வதற்கு சரியான முறையில் உதவுவார்கள். மற்றும் நமக்காக தூது செல்லவும் தயங்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications