Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் ஏழு முக்கியமான தகுதிகள்!!!
ஆணையும், பெண்ணையும் வெறும் பிறப்புறுப்பு மட்டும் தான் வேறுபடுத்துகிறது என எண்ணினால், அது அவர்களின் அறியாமை. ஆண் என்பவன் பலமாக படைக்கப்பட்டது பெண்களை காப்பதற்காக என்ற வசனம் கண்டிப்பாக உங்கள் மனதில் பதிந்திருக்கலாம். ஆம், ஆனால், இன்று அது தலைகீழாக இருக்கிறது.
ஆண், என்றால் அவனிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். சம்பளம், வேலை, வாழ்விடம் போன்றவற்றை தவிர்த்து ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த தகுதிகள் வெறும் ஆணாக மட்டுமின்றி, சமூகத்தில் உங்களை ஓர் நல்ல மனிதனாகவும் எடுத்துக் காட்டும் என்பது உறுதி....

பொறுமை
ஒருவரின் பொறுமை தான், அவருக்கான சமூக பெயரை நிலைநாட்டுகிறது. பொறுமையை இழக்கும் தருணத்தில் தான் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பெயரும், புகழும் வேறு ஒரு நபருக்கு கிடைக்கப் பெறுகிறது. எனவே, ஆண்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நகைச்சுவை
நகைச்சுவை குணமானது அனைவருக்கும் தேவையான ஒன்று. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். துன்பத்திலும் சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சான்றோர் வாக்கு. இது உங்களது தோல்வியை மறக்கடித்து, மீண்டும் வெற்றிபெற உதவும்.

தன்னம்பிக்கை
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வேண்டிய ஒன்று தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை இல்லமால் வெற்றி பெறுவது என்பது ஒருவகையில் பிச்சையை போன்றது. இது தன்மானத்தை சார்ந்தது, எனவே, தன்னம்பிக்கையை என்றும் இழந்துவிட கூடாது.

ஆர்வம்
ஏதேனும் ஓர் துறையில் ஆர்வம் இருக்க வேண்டும். அது விளையாட்டு, தொழில், உணவு, உறவு என ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். எதிலுமே ஆர்வம் இன்றி இருக்கவா நமக்கு ஆறறிவு?

நேர்மை
ஆண் மகனின் அடையாளம் நேர்மை. இந்த நேர்மை தான் உங்களது தரத்தை வெளிக்காட்டும் கருவி. எனவே, ஆண் என்றால் அவன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

மர்மம்
ஒவ்வொரு ஆணிடமும் ஏதேனும் மர்மம் இருக்க வேண்டும். அவனை பற்றி மேலும், மேலும் அறிந்துக் கொள்ள தங்களை அது தூண்ட வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கென கொலை, கொள்ளை போன்ற அளவிற்கு மர்மம் இருந்துவிட கூடாது....!!

கருணை
தன்னிடம் இருப்பதை வாரி இறைத்து வள்ளல் போன்று இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்பவில்லை. குறைந்தபட்சம் மற்றவர் துயரத்தை கண்டு வருத்தம் கொள்ளும் அளவாவது உள்ளத்தில் கருணை இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
