Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
குழந்தை முன்பு ஓர் சூப்பர் அப்பாவாக திகழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது முதல் ஹீரோ அப்பா தான். ஆனால், அதற்கு தகுதியான நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பது தான் கேள்வி. பணம் சம்பாதித்து தருபவன் மட்டுமே நல்ல தந்தையாகிவிட முடியாது. பாசமும், நேரமும் செலவழிக்க தெரிந்திருக்க வேண்டும். வெறும் ஆடம்பர வாழ்க்கை உங்களை நல்ல தந்தையாக்கி விடாது.
குறிப்பாக உங்கள் குழந்தை பத்தாம் வகுப்பை தாண்டும் வரையில் உங்களது வழிக்காட்டுதல் மிகவும் அவசியம். இல்லையேல், அவர்கள் தடம் மாறி சென்றுவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஓர் குழந்தை சீர்கெட்டு போவதற்கு சமுதாயம் மட்டுமே காரணம் அல்ல, பெற்றோர் தான் பெரிய காரணம்...

குழந்தையின் கனவுகள்
உங்களது கனவுகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களது கனவுகள் என்ன என்று கண்டறிந்து. அதை மெய்ப்பிக்க அவர்களுக்கு சிறந்த வழிக்காட்டியாக திகழ வேண்டும்.

நேரம் ஒதுக்குதல்
நீங்கள் உங்கள் குழந்தைக்கு செலவுக்கு நிறைய பணம் கொடுப்பதைவிட, அவர்களுடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள், அவர்களுக்குள் என்ன எண்ணங்கள் ஓடுகிறது, என்றெல்லாம் தெரிந்துக் கொள்ள முடியும். அதை தெரிந்துக் கொண்டு அதை ஓர் ஆசானாக இருந்து நெறிப்படுத்த வேண்டும்.

பிடித்தவை நினைவுக் கொள்தல்
உங்கள் குழந்தையிடம் வெறும் தந்தையாக மட்டும் இல்லாமல், அவருக்கு பிடித்ததை எல்லாம் நினைவில் கொண்டு, ஆச்சரியமூட்டும் ஓர் நல்ல நண்பனாகவும் இருக்க வேண்டும்.

வெளியே அழைத்து செல்தல்
குறைந்த பட்சம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது வெளியே அழைத்து செல்வது, வருடத்திற்கு இரண்டு முறையாவது வெளியூர்களுக்கு கூட்டி வருதல் போன்றவை எல்லாம், குழந்தைகளுக்கு உங்கள் மீது அளவுக் கடந்த பாசத்தை உண்டாகும். அதற்கும் மேலாக நிறைய அழகான நினைவுகளை அவர்களுக்கு இது பரிசளிக்கும்.

காது கொடுத்து அவர்கள் பேசுதலை கேட்க வேண்டும்
குழந்தைகள் என்ன கூறுகிறார்கள் என்று முதலில் காது கொடுத்து கேட்க வேண்டும். அது தான் நல்ல தகப்பனின் முதல் தலையாய பண்பு. அப்போது தான் அவர்களுக்கு அறிவுரையாக இருந்தாலும் கூட சரியாக கூற முடியும்.



Click it and Unblock the Notifications
