Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா?
இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியாக இருக்க வேண்டுமா? அப்ப குடும்பத்தோட இதெல்லாம் செய்யுங்க...
தீபாவளி பண்டிகை என்று சொல்லும் போது மனதில் ஒருவித சந்தோஷம் எழுவதற்கு உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா? அதற்கு காரணம் இப்பண்டிகையின் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றோம் என்பது தான். ஏனெனில் தற்போது எந்த ஒரு பணக்கஷ்டம் வரக்கூடாது என்று பலர் வீட்டை விட்டு வெளியூர்களில் வேலை செய்து வருகின்றனர். இதனால் பலர் தங்களது வீட்டை பிரிந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்வது பண்டிகை நாட்களில் தான். அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது நிச்சயம் அனைவரும் ஒன்று சேர்வார்கள். இத்தகைய அற்புதமான தீபாவளி பண்டிகையின் போது, குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கவும், மனதில் இருந்த கஷ்டத்தை வெளியேற்றி, குடும்பத்தினரிடம் அன்பை பரிமாறி, மனதில் உள்ள வருத்தங்களைப் போக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து அதன் படி நடந்து, இந்த வருட தீபாவளியை சந்தோஷமாக, என்றும் மறக்க முடியாதவாறு கொண்டாடி மகிழுங்கள்.

ஷாப்பிங் செய்யுங்கள்
தீபாவளி அன்று நிச்சயம் அனைவரும் புதிய ஆடைகளை அணிவோம். ஆகவே குடும்பத்தினருடன் சென்று, ஆடைகள், பட்டாசுகள் போன்றவற்றை வாங்குங்கள். பொதுவாக தீபாவளியின் முதல் நாள் இரவில் தான் நிறைய பேர் ஷாப்பிங் செய்வார்கள். அப்போது பார்த்தால், அது இரவு மாதிரியே இருக்காது. அந்த அளவில் இரவு முழுவதும் குடும்பத்தோடு வந்து பலர் ஷாப்பிங் செய்வார்கள். ஆகவே இந்த மாதிரி குடும்பத்துடன் ஷாப்பிங் செல்வது, குடும்பத்தோடு நேரத்தை சந்தோஷமாக செலவழித்தது போன்று இருக்கும்.

பூஜை
பூஜை செய்வதன் மூலமும் குடும்பத்துடன் சந்தோஷத்தை உணரலாம். அதற்கு தீபாவளி அன்று செய்யக்கூடிய லட்சுமி கணேச பூசை செய்வது ஒரு சிறந்த வழி. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, பூஜைக்கான செயல்களில் ஈடுபட்டு கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

தீபம் ஏற்றலாம்
பொதுவாக தீபாவளி அன்று மாலையில் வீட்டை தீபத்தால் அலங்கரிப்போம். அப்படி வீட்டை தீபத்தால் அலங்கரிக்கும் போது, குடும்பத்துடன் சேர்த்து அலங்கரித்தால், வீட்டில் உள்ள இருள் நீங்கி, எப்போதும் சந்தோஷம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. இது நம்பிக்கை மட்டுமின்றி, உண்மையிலேயே சந்தோஷமான தருணமாகவும் இருக்கும்.

பட்டாசு வெடிப்பது
நிச்சயம் தீபாவளியின் ஒரு சிறப்பம்சமே இது தான். உண்மையிலேயே குடும்பத்துடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. குறிப்பாக இப்படி குடும்பத்துடன் சேர்த்து பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருங்கள்.

வீட்டை சுத்தப்படுத்தலாம்
வீட்டை சுத்தப்படுத்தும் போது வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, சுத்தப்படுத்த வேண்டிய இடங்களை பிரித்துக் கொண்டு, சுத்தப்படுத்தும் போதும் அலாதியான சந்தோஷம் கிடைக்கும்.

ஒன்றாக சமைக்கலாம்
எப்போதும் பண்டிகையன்று வீட்டில் உள்ள பெண்கள் மட்டும் சமைக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சமையலுக்கு உதவியாக இருந்து, சமைத்து சாப்பிடுவதிலும் சந்தோஷம் அதிகம் கிடைக்கும்.

இனிப்புக்கள் செய்யலாம்
தீபாவளிக்கு இனிப்புக்களை செய்யும் போது, குடும்பத்துடன் சேர்ந்து வேண்டிய இனிப்புக்களை ஒருமுறை முயற்சிக்கலாம். குறிப்பாக குலாப் ஜாமூன் போன்ற இனிப்புக்கள் குடும்பத்துடன் சேர்ந்து செய்வதற்கு ஏற்றது. வேண்டுமெனில் இதை தீபாவளிக்கு முதல் நாள் மாலை அல்லது இரவில் முயற்சி செய்யுங்கள்.

விளையாட்டுக்கள் விளையாடலாம்
குடும்பத்துடன் சேர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடலாம். அதிலும் கேரம் போர்டு, செஸ், தாயம் போன்ற விளையாட்டுக்கள் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடுவதற்கு ஏற்றது.

கோலம் போடலாம்
தீபாவளி பண்டிகை என்றால் நிச்சயம் வீட்டில் கலர் பொடிகள் கொண்டு வீட்டின் வெளியே கோலம் போடுவோம். அப்படி கோலம் போடும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் சேர்ந்து போட்டால், நிச்சயம் அதனாலேயே தீபாவளிக்கு போட்ட கோலம் இன்னும் அழகாக காணப்படும்.



Click it and Unblock the Notifications