Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
கருத்துப் பரிமாற்றக் குறைவால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்...
பல உறவுகளில் சிக்கல் எழுவதற்கு காரணம் சரியான கருத்து பரிமாற்றம் இல்லாதது மட்டுமே. பொதுவாக பிரச்சனைகளை சரிவர பேசி தீர்த்து கொள்ளாமல், மனதிலேயே வைத்து கொள்வதால், பிற்காலத்தில் அது வெடித்து பிரிவுக்கு காரணமாக அமைகிறது. எனவே எந்த சிக்கல்களையும் பேசி தீர்த்து கொண்டால், சுலபமாக தீர்ந்துவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அனைவருக்கும் உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பது ஆபத்து காலத்தில் தான் உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய உறவை பலப்படுத்த பேச்சுத் தொடர்பு மிகவும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது. இவ்வுலகில் யாராலும் தனித்து வாழ முடியாது. ஆகவே இயன்ற அளவு வாழ்க்கை துணையுடன் நெருக்கமாக வாழ முயற்சிக்க வேண்டும்.
கருத்து பரிமாற்றத்திற்கு மொழி ஒரு தடையாக இருக்கின்றது என்பதையும் கண்டிப்பாக மறுக்க முடியாது. வாழ்க்கைத்துணையோ அல்லது உடன் பணிபுரிபவரோ, வேற்று மொழியைச் சேர்ந்தவராக இருந்தால், கருத்தை தெளிவாக பரிமாற்ற முடியாது. இதனால் மனமுறிவு ஏற்படலாம். அத்தகைய முறிவை தடுக்க சில யோசனைகளை கொடுத்துள்ளோம். அதை முயற்சித்து பாருங்கள்.

பேச தவிர்க்க வேண்டியவை
தேவையற்ற விஷயங்கள் மற்றும் எதிர்மறையாக நடந்த செயல்கள் போன்றவற்றைப் பற்றி துணையுடன் பேச வேண்டாம். மேலும் பேசினால், அது சிக்கலில் தான் முடியும்.

குறைகளை பார்க்க வேண்டாம்
எப்போதும் குறைகளை பார்க்காமல், துணையின் நல்ல விஷயங்களை பற்றி பேசி, அவர்களை மதித்து நடந்தால் பல சிக்கல்களை எளிதில் தீர்த்து விட முடியும்.

மூன்றாம் நபர்
துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லையென்றாலும், மூன்றாம் நபரை இடையில் இழுக்க வேண்டாம். ஏனெனில் அது மேலும் சிக்கலைக் கொண்டு வரும். ஆகவே இருவரும் சரியாக பேசி தீர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய பிரிவிற்கு நீங்களே காரணம் ஆகிவிடுவீர்கள்.

கருத்துப் பரிமாற்றம்
வாழ்க்கைத் துணையிடம், உங்களுக்கு எது தேவை என்பதை குழப்பமின்றி தெளிவாக விளக்க வேண்டும். ஏனெனில் தெளிவான பரிமாற்றமே உறவை பலப்படுத்தும்.

மதித்து நடத்தல்
உங்களில் இருந்து உங்கள் துணையின் வளர்ப்பில் மாறுபாடு இருந்தால், நிச்சயம் முரண்பாடு ஏற்படும். எனவே அதை சரிசெய்ய நினைக்காமல், அவற்றை மதித்து நடந்தாலே நிம்மதியை பெற்று விடுவோம்.

புரிந்துகொள்ளுதல்
எவ்வளவு தான் விட்டுக் கொடுத்து நடந்தாலும், சில நேரங்களில் வாழ்க்கைத்துணை சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், அவரிடம் ஏதோ பிரச்சனை இருக்கின்றது என்பதை யோசித்து விலகுவது நல்லது.

ஒளிவு மறைவு
ஒளிவு மறைவற்ற வாழ்க்கையை வாழ்வதன் மூலம், தேவையற்ற சிக்கலை தீர்த்து பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி கொள்ள முடியும் என்பதால் தெளிவாக யோசிக்கவும்.



Click it and Unblock the Notifications
