Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
டேட்டிங்கிலிருந்து ஒரு உறவிற்குள் செல்வது எப்போது?
வீட்டில் பார்க்கும் பெண்ணையோ அல்லது ஆணையோ தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சூழல் எப்போதோ மாறிவிட்டது. அதே போல் நேரடியாக காதல் செய்வதும் இப்போது மலையேறிவிட்டது. ஆம், இப்போது டேட்டிங் என்ற புது மொழி தான் இளைஞர்களிடம் பரவலாக உலா வருகிறது. ஒருவர் நேரடியாக ஒருவரை காதலிப்பதற்கு பதில், முதலில் நட்புடன் பழுகுவார்கள். இந்த நட்பு அவர்களுள் நல்ல புரிதலை கொடுத்தால், அது காதலாக மாறி, பின் திருமணத்தில் வந்து நிற்கும். இதுவே டேட்டிங். சரி, இந்த டேட்டிங் பற்றியும், அதன் அடுத்த கட்டமான புது உறவு பூப்பதைப் பற்றியும் பார்க்கலாமா?
மேலோட்டமாக பார்த்தால், டேட்டிங் மற்றும் உறவுமுறை என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லை. இந்த இரண்டிலும் ஒரு பெண்ணும், ஆணும் ஈடுபட்டிருப்பர் (அது ஒரே பாலினம் கொண்ட இருவராக கூட இருக்கலாம்). மேலும் இந்த இருவருக்கும் உள்ள நெருக்கத்தின் அளவையும் ஓரளவுக்கு இந்த இரண்டு சொற்கள் குறிப்பிடுகிறது. இந்த நெருக்கத்தின் அளவு ஒவ்வொருவரை பொறுத்து மாறக்கூடும். ஆனால் ஆழமாகப் பார்த்தால், இந்த இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
டேட்டிங் என்பது எதேர்ச்சையாக ஒருவரை சந்தித்து, அவரை புரிந்துக் கொள்ள முயற்சி செய்வது. இதுவே ஒரு உறவிற்குள் செல்வது என்பது இந்த நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது. இது தான் டேட்டிங்கிற்கும், ஒரு உறவிற்குள் செல்வதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு.

முதல் அடியை எடுத்து வைத்தல்:
கனவுகளை பூர்த்தி செய்யும் ஆணிடம், சிறிது காலம் டேட்டிங் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் நட்பை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள். அதற்கு முதலில் செய்ய வேண்டியது, உங்கள் அலைவரிசையோடு ஒத்துப் போகும் ஒருவரை கண்டுப்பிடிப்பது. அவர் உங்களை வெறும் நண்பராக பார்க்க விரும்புகிறாரா அல்லது உங்களை வாழ்க்கை துணையாக அடைய விரும்புகிறாரா என்பது மிகவும் முக்கியம்.
ஊகிக்கக் கூடாது:
நீங்கள் விரும்பும் ஆண் உங்களை வாழ்க்கை துணையாக அடைய விரும்புகிறார் என்று ஒரு போதும் ஊகித்து விடக்கூடாது. ஒரு குதிரை வண்டியை, குதிரைக்கு முன்னாள் போட்டதைப் போல், இது செயலற்றுப் போய் விடும். மேலும் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். ஏன் உங்கள் நட்பையும் கூட பாதித்து விடும். ஆகவே உங்கள் எண்ணத்தை அவருக்கு தெரியப்படுத்தும் முன், நம்பகத் தன்மையுள்ள வழிகள் மூலம், அவருக்கும் உங்கள் உறவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது அவரிடம் நேரடியாக அவருக்கு அப்படி என்றாவது தோன்றியது உண்டா என்றும் கேட்கலாம்.
டேட்டிங்கிற்கான விதிமுறைகள்:
டேட்டிங்கிற்கான விதிமுறைகளுக்கும், உறவில் செல்லவிருக்கும் விதிமுறைகளுக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. முதலில் டேட்டிங்கிற்கான விதிமுறைகளை பார்ப்போமா? டேட்டிங்கிற்கு எந்த ஒரு முக்கிய விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையில்லை. இதுவே டேட்டிங்கிற்கான முதல் விதிமுறை. எத்தனை பேருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்யலாம். எத்தனை பேருடன் வேண்டுமானாலும் இரவைக் கழிக்கலாம். ஏன் உங்களுக்கு தேவையில்லாத போது, டேட்டிங் செய்யும் ஒருவரையோ அல்லது பலரையோ பார்க்காமல் கூட போகலாம்.
உறவில் செல்வதற்கான விதிமுறைகள்:
இப்போது உறவில் செல்வதற்கான விதிமுறைகளை பார்க்கலாமா? ஒருவரிடம் உறவை ஏற்படுத்த விரும்பினால், அந்த ஒருவரை மட்டும் தான் இனி வாழ்க்கைத் துணையாக முடிவு செய்ய வேண்டும். இருவருள் யாரும் வேறொருவரை இனி பார்க்கக் கூடாது. இரவை வேறொருவருடன் கழிக்க நினைக்கக் கூடாது. ஏனெனில் உங்களுக்கு என்று ஒரு துணை வந்தாகி விட்டது. இனி எங்கு சென்றாலும் ஜோடியாகவே பார்க்கப்படுவீர்கள். எனவே இந்தக் கட்டத்தில் உறவை முறிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது உங்களுக்கு மன வலியையும், உளைச்சலையும் கொடுக்கும்.
உங்கள் டேட்டிங் துணையை வாழ்க்கை துணையாக மாற்ற விரும்பிகிறீர்களா? அப்படியானால் மேற்கூறிய ஒவ்வொரு காரணிகளையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் துணையை கைப்பிடிக்க வேண்டுமானால், நீங்கள் செய்துக் கொண்டிருந்த டேட்டிங்கை கை விட வேண்டும்.



Click it and Unblock the Notifications