Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
திருமணமாகி ஒரு வருஷம் ஆயிடுச்சா? என்ன பரிசு தரலாம்?

1. நம்மிடம் இருக்கும் பணத்தைப் பொறுத்து ஜோடிக்கு பரிசு வழங்க வேண்டும். அதிலும் அவ்வாறு வாங்கும் பொருளானது, அவருக்கு உபயோகப்படுவது போல் வாங்கிக் கொடுத்தால், எந்த அளவு அவரைப் புரிந்துள்ளோம் என்பதை வெளிக்காட்டி, அவர்களுக்கு நம்மேல் இருக்கும் ஆசை இன்னும் அதிகரிக்கும். மேலும் வீட்டில் இருக்கும் பொருளாக வாங்காமல், அர்த்தமுள்ள ஒன்றாக, அவர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வாங்கிக் கொடுப்பது நல்லது. முக்கியமாக பணம் உள்ளது என்பதற்காவும், அவர்களுக்கு நம்மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவதற்கு விலையுயர்ந்த பரிசு வாங்க அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
2. பாரம்பரியமாக அளிக்கப்படும் காகித பரிசை தேர்வு செய்யலாம். அதாவது உங்கள் துணைவருக்கு ஏதாவது பிடித்த பெயிண்டிங் அல்லது ஒரு வருடம் இருவரும் எடுத்த சில மறக்க முடியாத போட்டோக்களை சேகரித்து, ஆல்பம் போன்று செய்து, கொடுக்கலாம். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவர் என்றால், அவருக்கு பிடித்த வாசகர்களின் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். சொல்லப்போனால் காகிதத்தில் சிறந்த பரிசு என்றாலே இது கார்டு கொடுப்பது தான், அதிலும் காதலுடன் அழகான வாசகங்கள் அல்லது கவிதைகளை தன் கைகளால் எழுதிக் கொடுப்பது. இது போன்றும் கொடுக்கலாம்.
3. நவீன பரிசுகளான உடை அல்லது கடிகாரம் போன்ற பொருட்களையும் தேர்வு செய்யலாம். பொதுவாக கைக்கடிகாரம் வாங்கிக் கொடுப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். சிலர் உடைகளை விரும்புவார்கள். எனவே அவர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு வாங்கிக் கொடுக்கலாம்.
4. விளையாட்டுத் துறையில் சிறந்தவர்கள் ஆயின் அவர்களுக்கு பந்து, செஸ், பேட் என்று அவரவர் விளையாட்டை பொறுத்து அவருக்கு இஷ்டமான பரிசுகள் கொடுப்பதன் மூலமும், அவர் மனதில் நீங்கா இடம் பெறலாம். நம் கையால் அவருக்கு பிடித்த உணவு சமைப்பது அல்லது அவர் ஆச்சரியபடும் படி எங்காவது அவரை அழைத்து செல்வது என்று அவருடன் சந்தோஷமாக அந்த நாளை கழிப்பது மற்றும் பிடித்த விஷயங்களை செய்வதும் ஒரு வகையான பரிசு தான்.
5. முக்கியமான டிப்ஸ், அனைத்து பெண்களுக்கும் திருமண நாளன்று தன் கணவர் தனக்கு சேலை மற்றும் ஒரு முழம் மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்து, கோவில்களுக்கு அழைத்துச் சென்றால், அதையே அவர்களுக்கு பெரிய பரிசாக நினைப்பர்.
எனவே இத்தகையவாறு நடந்து கொண்டு, அவர்களுக்குப் பிடித்த பொருட்களை, செயல்களை செய்து, சந்தோஷமான வாழ்க்கையை இருவரும் வாழ எங்கள் வாழ்த்துக்கள்.
வேறு என்னவெல்லாம் கொடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
