Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
வாழ்க்கைத் துணையுடனும் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே!!!

வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழிக்க சில டிப்ஸ்....
* உங்கள் துணை வேலையோ அல்லது படிக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் ஒரு அரை மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். அதிலும் உங்களுக்கு மதிய இடை வேளை கிடைக்கும் போதோ அல்லது மாலை வேளையிலோ சென்று ஒரு 10 நிமிடம் பார்த்தாலும், அது அந்த நாளில் அவர்களுடன் சில நிமிடங்கள் செலவழித்தாலும், அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
* நிறைய தம்பதியர்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாத நிலையில் உள்ளனர். ஏனெனில் சிலருக்கு நைட் ஷிப்ட் வேலை இருக்கும். ஆகவே இந்த மாதிரியான நிலை இருந்தால், முன்கூட்டியே அவர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு வாரத்திற்கு 3 முறை ஹோட்டலில் ஒன்றாக சாப்பிடுமாறு திட்டங்களைத் தீட்டி யோசித்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டால், இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும ஏற்படாமல் இருக்கும். ஒரு வேளை அந்த மாதிரி செயல்பட முடியவில்லையெனில், சனி ஞாயிறுகளில் நிச்சயம் அவர்களுடன் செலவழிக்குமாறு இருக்க வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கும்.
* இருவரும் வேலைக்கோ அல்லது காலேஜோ செல்லும் போது தனித்தனியாக செல்லாமல், ஒன்றாக செல்ல வேண்டும். அலுவலகமோ அல்லது காலேஜோ வேறு வேறு இடத்தில் இருந்தால், அவர்களை பைக்கில் அழைத்துச் சென்று விட்டுவிட்டோ அல்லது ஒன்றாக பேருந்திலோ செல்லலாம்.
* இருவரில் ஒருவருக்கு ஏதேனும் முடியவில்லை என்றால், அப்போது முன்கூட்டியே திட்டம் தீட்டி, இருவரும் பேசிக் கொள்ள வேண்டும். மேலும் அவ்வாறு போடும் போது கட்டாயப்படுத்தாமல், அவர்களது வேலைப்பளுவைப் புரிந்து கொண்டு திட்டம் தீட்டினால் நல்லது. மேலும் அவ்வாறு இருவரும் வெளியே செல்லும் போது, மறக்காமல் மொபைல் போனை ஸ்விட் ஆப் செய்துவிடுவது, மேலும் நிம்மதியைத் தரும்.
ஆகவே மேற்கூறியவாறு செயல்பட்டால், வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழித்தது போல் இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கும். முக்கியம் எப்போதும் பொறுமை இருக்க வேண்டும். பொறுமை இருந்தநால், எதனையும் எளிதில் வெல்லலாம். ஒரு வேளை உங்கள் துணை சந்திப்பதற்கு எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் இருந்தால், உங்கள் முடிவு உங்கள் கையில்.



Click it and Unblock the Notifications
