Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா!!!

திருமணத்திற்கு பிறகு தன் வாழ்க்கை துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் இருவருக்குமே 50/50 என்று இருக்கக்கூடாது. அது உங்களிடம் இருந்து 70% பாசமும், அவர்களிடம் 30% பாசமும் வந்தாலே போதும் என்று நினைக்க வேண்டும். அதிலும் பெண்கள் தனக்கு வருபரிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஆண்களால் அவை அனைத்தையும் வெளிப்படையாக காண்பிக்க முடியாது. ஆனால் உண்மையில் ஆண்களின் மனதில், தன் மனைவியின் மீது, சொல்லமுடியாத அளவு ஆசை, பாசத்தை வைத்திருப்பர். ஆகவே அதனை புரிந்து பெண்கள் அவர்களை சந்தோஷமாக வைத்தால், அவர்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமையும்.
சந்தோஷமான வாழ்க்கையில் சமாதானம் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் யார் மிகவும் சிறந்தவர்கள் என்று கூறுங்கள் பார்க்கலாம்? வேறு யாராக இருக்க முடியும் ஆண்கள் தான். அவர்கள் தான், தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மனதை சமாதானப்படுத்திக் கொண்டு விரும்புவார்கள். உதாரணமாக, மனைவி என்ன தான் கேவலமாக சமைத்தாலும், கணவன் நன்றாக உள்ளது என்று கூறி அவர்களை சந்தோஷப்படுத்துவார்கள். தனக்கு பிடிக்காத படம் மனைவிக்குப் பிடித்தால், அதையும் பொறுத்துக் கொண்டு பார்ப்பது. முக்கியமாக மனைவி எதை சொன்னாலும், "சரி டார்லிங்" என்று சொல்வார்கள். இவையெல்லாம் நடந்தால், அந்த திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
என்ன தான் சண்டை நடந்தாலும் தன் துணையை தன் உயிரைப் போன்று நேசிக்க வேண்டும். அவ்வாறு நேசித்தால், எவ்வளவு வயதாகினாலும், அந்த பாசமும், அனபும் மாறாமல் இருக்கும். இப்போது கூட நிறைய இடங்களில் வயதானவர்கள், தங்கள் துணையின் மீது வைத்துள்ள அன்பிற்கு ஈடுஇணை எதுவும் இருக்காது. ஆகவே திருமணத்திற்குப் பின்னும் டேட்டிங் மற்றும் ஒரு நல்ல நட்புறவு என்பது இருவருக்கும் இடையில் இருக்க வேண்டும். இதுவே அனைவரின் மனதிலும் பெரிதும் இருக்கும் எதிர்பார்ப்பு.
ஆகவே இவ்ற்றையெல்லாம் சரியாக கடைபிடிக்க முடியும் என்று நினைத்தால், வாழ்க்கையானது வாழ்நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். இல்லையென்றால் பிரச்சனை வீடு கட்டி தங்கிவிடும் என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
