Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
உள்ளத்தில் சந்தேகம் குடியேறினால் சந்தோசம் ஓடிவிடும்!

பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள் என்பதுதான் நிபுணர்களின் முதல் அறிவுரை.
அதேபோல் மனைவி எந்த ஆணுடனும் பேசக் கூடாது, வீட்டு வாசலில் நிற்கக் கூடாது, செல்போனில் பேசக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் கணவன்மார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு மனைவி இருக்க வேண்டும். எதிர்த்துப் பேசினால் திட்டும் அடி உதையும் கிடைக்கும். அதே நேரம் கணவன்களை மனைவிகள் அவ்வளவாக சந்தேகப்படுவது கிடையாது. அரசல் புரசலாக வதந்தி கிளம்பி சந்தேகம் வந்தால் கூட கணவன் சொல்லும் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவார்கள்.
அதேபோல் தனது துணைக்கு அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் இருந்து அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும். உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்பு படுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள். இதுவே பிரச்சினை விதை முளைக்க காரணமாகிவிடும்.
தனது சந்தேகத்தை நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி , தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம். அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும். இல்லை என்றால், இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.
கணவனோ மனைவியோ அவர்களுக்கு என்று சில தனித்துவம் உண்டு. அவரவர்களுக்கு என உள்ள எல்லைக்குள் இருந்து கொண்டால் சிக்கல் இல்லை. சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை. சந்தேகம் அதிகமாக அதிகமாக மனதில் சஞ்சலம் குடியேறுவதோடு ஒருவித அழுத்தம் ஏற்பட்டு விடும். இதுவே நாளடைவில் மனரீதியான கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம்ட கூற வேண்டாம் என்று பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர். ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், நாம் கூறியதை எல்லாம் வைத்து ஒரு ரோடு போட்டு அதில் பேருந்தே விட்டுவிடுவார்கள். அதனால்தான்.. நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள் மருத்துவர்கள்.
நம்பிக்கைதான் வாழ்க்கை எனவே வாழ்க்கைத்துணையை நம்புங்கள் அப்புறம் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications