Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சிலது பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க

பேஸ்புக் அக்கவுண்ட்
பேஸ்புக் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. அந்த பேஸ்புக்கின் மூலம் நிறைய பேர் நண்பர்கள் ஆவார்கள். எந்த ஒரு ஆணும் தன் துணைவிக்கு ஆண் நண்பர் இருப்பதையும், ஒரு பெண்ணும் தன் துணைவனுக்கு பெண் நண்பர் இருப்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே தனது கணவருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டு மறைப்பதில் தவறில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
மெசேஜ் சாட்டிங்
நண்பர்களுடன் இணையதளத்திலோ, மொபைலிலோ சாட் பண்ணும் போது, அதைப் பற்றி தங்கள் வாழ்க்கைத்துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில் இதுவே சில சமயங்களில் கணவரின் மனதில் தவறான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். பின்னர் அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும். ஆகவே அதைப் பற்றி பேசாமல் இருந்தால் நலம்.
நண்பர்களின் போன் நம்பர்
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ரொம்ப ரிஸ்க். ஏனென்றால் நண்பர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். நாம எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதுல ரொம்பவே கவனமா இருக்கணும்.
மறைத்த தகவல்கள்
தெரிந்தோ, தெரியாமலோ முதலில் நாம் செய்த தவறை பற்றி கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் அவர்களுக்கு உண்மையாக இருந்தால், இதைப் பற்றி சொல்லாமல் இருக்கிறோம் என்று கவலை கொள்ள வேண்டாம். மீறி கூறினால், வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும். ஆகவே இவற்றை பற்றி பகிர்வதைத் தவிர்க்கவும்.
வாழ்க்கையானது இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயங்களை மறைப்பதில் தவறில்லை. ஆகவே, மேலே சொன்ன எல்லாவற்றையும் கணவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications
