Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் காபி, டீ குடிக்கும் போது இந்த போண்டாவை செஞ்ச சாப்பிடுங்க.. செமயா இருக்கும்
Gothumai Kara Bonda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அப்போது டக்கென்று ஒரு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமானால், வீட்டில் 1 கப் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு கார போண்டா செய்யுங்கள். இந்த கோதுமை கார போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு கோதுமை கார போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை கார போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 1/2 கப்
* அரிசி மாவு - 3 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 1 டீஸ்பூன் (தட்டியது)
* கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு, 1/2 கப் ரவை
மற்றும் 1/2 கப் பச்சரிசி மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் தயிரை சேர்த்து கலந்து, அத்துடன் 1 1/2 கப் நீரை
ஊற்றி கட்டிகளின்றி கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள மிளகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
மற்றும் கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், சீரகம் மற்றும் சமையல் சோடா சேர்த்து
நன்கு கலந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி
எடுத்து எண்ணெயில் ஊற்றி, அது உப்பி மேலே எழுந்து வந்ததும், மற்றொரு
கரண்டி மாவை ஊற்ற வேண்டும். போண்டா நன்கு உப்பி வந்ததும், அதைத்
திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கோதுமை கார
போண்டா தயார்.



Click it and Unblock the Notifications
