Latest Updates
-
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்!
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெசிபி - ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க, அட்டகாசமா இருக்கும்
Vizhinjam Chicken Fry Recipe in Tamil: சண்டே என்றாலே அது அசைவ உணவு சாப்பிடுவதற்கான நாள் என்று மாறிவிட்டது. அசைவம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான். சிக்கன் மற்ற அசைவ உணவுகளை விட விலை குறைவாக இருப்பது அதற்கொரு காரணமாக இருந்தாலும் சிக்கனின் சுவையும் பெரும்பாலான மக்கள் அதை விரும்புவதற்கு முக்கிய காரணமாகும்.

தமிழ்நாட்டில் அடிக்கடி ஏதாவது ஒரு சிக்கன் ட்ரெண்டிங்கில் இருக்கும். அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு சூப்பரான சிக்கன்தான் விழிஞ்சம் சிக்கன். சிக்கனை சமைக்கும் வழிகளுக்கு முடிவேயில்லை. கடவுளின் தேசமான கேரளா அசைவ உணவுகளுக்கு புகழ்பெற்றது. இந்த விழிஞ்சம் சிக்கனும் கேரளாவை சேர்ந்ததுதான். இந்த விழிஞ்சம் கிரேவி போல அல்லாமல் சிக்கன் 65 போல ட்ரையாக சூப்பராக இருக்கும். இந்த விழிஞ்சம் சிக்கனை சாப்பிட ஹோட்டலுக்குதான் போக வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டிலேயே செஞ்சு சாப்பிடலாம். அதற்கான ரெசிபியைதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ எலும்புள்ள சிக்கன்
- பொரிக்க தேங்காய் எண்ணெய்
மேரினேட் செய்ய:
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 ஸ்பூன் உப்பு
- ½ எலுமிச்சை
விழிஞ்சம் மசாலா செய்ய:
- 10 சின்ன வெங்காயம்
- நறுக்கிய அரை கப் கொத்தமல்லி
- நறுக்கிய கால் கப் புதினா
- கால் கப் கறிவேப்பிலை
- 1 நறுக்கிய பச்சை மிளகாய்
- 12 பூண்டு பல்
- 2 இன்ச் இஞ்சி
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முதலில் சிக்கனை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இதை 1 மணி நேரம் ஊற வேண்டும், எனவே அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- சிக்கன் ஊறும் நேரத்தில் விழிஞ்சம் மசாலாவை தயார் செய்யவும். இதை தயார் செய்ய ஒரு மிக்சி ஜாரில் மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை எடுத்து, கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு, மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
- ஊறவைத்த சிக்கனில் இந்த விழிஞ்சம் மசாலாவைச் சேர்த்து, நன்றாக கலக்கவும்.
- இந்த சிக்கனை பொரிப்பதற்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஒரு அகலமான கடாயில் சேர்த்து சூடாக்கவும்.
- எண்ணெய் நன்கு காய்ந்ததும், விழிஞ்சம் மசாலாவோடு சேர்த்து கோழி இறைச்சியை அதில் போடவும். அதிக வெப்பத்தில் ஊற வைத்த சிக்கனை 8 முதல் 10 நிமிடங்கள் வரை பொரிய விடவும். சிக்கனும், விழிஞ்சம் மசாலாவும் மொறுமொறுப்பாகி, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- சிக்கனலிருந்து எண்ணெயை முழுவதுமாக வடிகட்ட்டவும். எண்ணெயிலிருந்து விழிஞ்சம் மசாலாவை தனியாக எடுத்து சிக்கனுடன் சேர்த்து வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
